மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

எதை ரசிப்பது?

ஏறி நிற்கும் நெற்றியையா
வழுக்கி விழும் மயிறையா?
விழிகாக்கும் இமைகளையா?
எனைதாக்கும் விழிகளையா?
காற்றாய் எனை மாற்றும் உன் நாசி துகள்களையா?
“போடா”என்று எனை அழைக்கும் உன் பூவிதழ்களையா?
வரிசைதவறி நின்று எனை தவறச்செய்த பற்களையா?
விழுந்தாலும் சிரிக்கச்செய்யும் உன் கன்னக்குழிகளையா?
உனை நாடி வரச் செய்த உன் நாடியையா?
என் நாடி துடிக்கச் செய்யும் உன்னாசையா?
பூவிற்கு தேனூட்டும் குரல்வளையையா?
ஒரே மூச்சில் பெருமூச்சு விடச்செய்யும் இரு திமிரையா?
தேடுதல் வேட்டையின் ஆரம்ப இடையையா?
வளைவுகள் ஜாக்கிரதை?எச்சரிக்கை விடும் வளைவையா?
குழந்தை நடைபழகும் நடையையா?
மணலில் நடந்தாலும் தடம் பதிக்காத பாதத்தையா?

அல்லது மொத்தமாக உன்னையா?
எதை ரசிப்பது?

January 25, 2008 - Posted by | கவிதை, மகிழ்நன்

1 Comment »

  1. நன்று..!

    Comment by RVC | January 25, 2009 | Reply


Leave a comment