மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

காதலே உன்னை தேடிக் கொண்டிருக்கிறது

காதல் தேடி உன்னை வந்தடைந்த நான்,

தன் உண்மை முகவரியும், முகமும் அறிய

காதலே உன்னை தேடிக் கொண்டிருக்கிறது !

என்பதை பின்புதான் தெளிந்து கொண்டேன்.

March 13, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment

நான் இவளுக்காக மட்டும் வந்தேன்

உன்னிடமிருந்துதான் கவிதை வருமா?

என்று பிழையாக சினம் கொண்டேன்,

என் பிழைதிருத்தி அதட்டி

கவிதை சொன்னது,

நான் இவளுக்காக மட்டும் வந்தேன். என்று

March 13, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment

இப்படி சிணுங்கும் பெண்ணா?

நீ சிணுங்கும் வேளைகளில்

சிலிர்த்து போகும் உள்ளம்,

சிரித்துக் கொள்கிறது, இப்படி

சிணுங்கும் பெண்ணா, உள்ளம்

அதிர, அதிர ஒடி வந்து, உள்ளமெல்லாம்

நிறைந்தவள் என்று!

March 13, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment

தாய்மை சுரக்கும் ஆணாய்

ஆணாக பிறப்பதும்,

பெண்ணாக பிறப்பதும்,

இயற்கையின் கையில்,

அறிவியல் கற்றுத்தந்திருந்தது,

ஆனால், உன் காதல், தாய்மை

சுரக்கும் ஆணாய் வாழக் கற்று

தந்திருக்கிறது

March 13, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment

நீ கவலைப்படுகிறாய் , நான் மகிழ்ச்சியடைகிறேன்

உன்னை துரத்தி கொண்டு

வரும் இளைஞர்களை பற்றி

கவலைப்படுகிறாய் நீ, என்னை

துரத்திக் கொண்டு வரும்

உன் நினைவுகளை கண்டு

மகிழ்ச்சியடைகிறேன், நான்.

March 13, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment

அழையா விருந்தாளியாய்………….

அழையா விருந்தாளியாய்,

என் தனிமை கலைக்க வரும் நபர்களை

கண்டால் எனக்கு சினம் பொத்து

கொண்டுதான் வரும், ஏனென்றால்

என் தனிமை என்பது

மற்றவை கலைத்து உன் நினைவுகளை

மட்டுமே வரவு வைத்த தருணம்.

March 13, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment

என்னை கண்டிப்பதில்லையே ஏன்?

தெருவோரம் கிடக்கும், இந்திய ஏழை

வர்க்க குழந்தைகளை பார்த்து பதைபதைக்கும்

உள்ளம், உனக்காக தெருவோரங்களில்

பல மணி நேரம் காத்திருந்தாலும் என்னை

கண்டிப்பதில்லையே ஏன்?

March 13, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment

திருடிவிடுகிறேன், உன் சேட்டைகளை!

பூக்களை அதன்செடியிலே பார்த்து

ரசிக்கும் பக்குவப்பட்ட எனக்கு,

உன் சேட்டைகளை உன்னிலேயே

ரசிக்கும் பக்குவம் வரவில்லை போலும்,

கைகள் நீண்டு கட்டியணைத்து

திருடிவிடுகிறேன், உன் சேட்டைகளை.

March 13, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment

என்னவென்று சொல்ல??

பிறந்த நாள், பரிசாக உனக்கு

ஏதும் அளிக்க வில்லை,

ஆனால்,என் பிறந்த நாள்

பரிசாக எனக்கு பின்பு பிறந்து,

என் வீட்டின் முன்பாகவே குடியமர்ந்திருக்கும்

உன் காதலை என்னவென்று சொல்ல?

என் காதலையெல்லாம் கொட்டி

தீர்த்து விட வேண்டும் என்றுதான்

உன்னிடம் நெருங்குகிறேன், ஆனால்,

என் காதல் தீர்ந்து விடக்கூடாது

என்பதில் எச்சரிக்கையாய் இருந்து

உன் காதலையும், முத்தத்தையும் மட்டும்

பறித்து வீடு திரும்பிவிடுகிறேன்.

இதில்,என் காதலை என்னவென்று சொல்ல?

March 13, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment

நீ வந்த பின்பான தருணங்களில்

தவத்தின் மீது நம்பிக்கை இருந்ததில்லை,

ஆனால், நம்பிக்கை பிறக்கிறது,

உனக்காக காத்திருக்கும் பொழுதுகளில்.

வரத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை,

ஆனால், நம்பிக்கை பிறக்கிறது

நீ வந்த பின்பான தருணங்களில்.

March 13, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment