மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

நான் எம்மாத்திரம்

நீ கண்ணாடி முன் நின்றால்,

நிழலை உள் வாங்கும்

கண்ணாடியே நிலை கொள்ளாது,

நான் எம்மாத்திரம்

April 8, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment

நீ பிறந்த பொழுதுக்காய் காத்து நிற்கிறேன்

நீ பிறந்த பொழுது என்ன செய்து

கொண்டிருந்தேன் தெரியாது,

ஆனால், இன்று நீ பிறந்த பொழுதுக்காய்

காத்து நிற்கிறேன், உனக்கு வாழ்த்து சொல்லும்

நொடிக்கு வாழ்த்து சொல்ல…………

April 8, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment

எப்பொழுது கடக்கும் என்று

உன்னோடு வாழ்ந்து களிக்கும்

பொழுதுகளை பொருள்படுத்தி விடுகின்றன,

உனக்காக காத்திருக்கும் பொழுதுகள்,

உன்னை அழகுபடுத்தி விடுகின்றன,

அதனால்தான் காத்திருக்கிறேன்,

நொடிக்கடக்க காத்து கிடக்கும்,

நிமிட முள் போல, உனக்கு வாழ்த்து

சொல்லும் நொடியை கடிகார முள்

எப்பொழுது கடக்கும் என்று

April 8, 2009 Posted by | கவிதை, காதல், மகிழ்நன் | Leave a comment