மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

ஒரு மத(ல)ம் போக்க இன்னொரு மத(ல)ம் தீர்வாகுமா?

              வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று நாம் பெருமை பேசிக்கொள்வதுண்டு. விருந்தோம்பல் பண்பே தமிழனின் தலையாய பண்பு என்று சில நேரம் சிலிர்த்து கொள்வதுமுண்டு. ஆனால், வந்தவனையெல்லாம் வாழவிட்டுவிட்டு இழித்தவாய்த் தனமாக கீழே விழுந்து கிடக்கும் தமிழனின் இழிநிலை பற்றி பேச ஏனோ தயக்கம் நிலவுகிறது இச்சமூகத்தில். தமிழ்நாட்டை பொருத்தவரை ரவுடி தலைவன், பொறுக்கி தலைவன், சாதி-மத வெறியன் தலைவன், பெண்ணுடன் திரையில் சல்லாபம் புரிபவன் தலைவன். ஆனால், சாதி வெறியை பற்றி கேள்வி கேட்பவனை,எதிர்த்து நிற்பவனை சாதித்தலைவன் என்றோ, கடவுளை கொண்டு பிழைப்பு நட்த்துப்பவனை கேள்வி கேட்பவனை நாத்திகன் என்றோ, மத விரோதி என்றோ ஒதுக்கி வைத்து தன் பிழைப்புக்கு பாதிப்பு வராமல் பழையச் சதிக்கூட்ட்த்தின் சதி இன்றுவரை நீளுகிறது, பழைய சதி இன்றும் தொடர்கிறது.

 

                 அமைதிப்படை திரைப்படத்தில் மணிவண்ணன், சத்யராஜ் பேசுவதாக ஒரு உரையாடல் வரும் மணிவண்ணன் கூறுவார் சீட்டு பணம் குடுத்து வாங்கிடுவே! வோட்டு ஜன்ங்கள்ள போடணும். சத்யராஜ் சொல்லுவார், நாமதான் ஒண்ணுமே பண்ணலையப்பா. மணிவண்ணன் இப்படியாக பதிலளிப்பார், ஆமா! ஏதாவது செஞ்சாதானே மக்கள் ஓட்டு போடுவாங்க.

 

            இதேபோல மக்களை பற்றி சிந்திக்காத, மக்களுக்கு ஏதும் செய்யாதவனெல்லாம் தலைவன். இதை பற்றி கேள்வி கேட்பவனெல்லாம் தீவிரவாதி. எடுத்துகாட்டுக்கு விஜயகாந்தை எடுத்துக் கொள்வோம், இவர் நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்டவர், பம்பரம் விட்டவரிடம் சமூக அக்கறை எதிர்பார்ப்பது முட்டாள்தனமில்லையா? இது போன்ற உளவியல் கொள்ளையில் ஈடுபடுபவர் எப்படி நாட்டில் நடக்கும் கொள்ளைகளை தீர்ப்பார். இது போதாதென்று நடிகையின் தொப்புளில் தேங்கியிருக்கும் நீரை உறிஞ்சி குடித்தவர் இன்னொரு கட்சி ஆரம்பித்து சமத்துவம் பேசுகிறார்.எப்படி அம்பேத்கரையும், முத்துராமலிங்கம் படங்களை விளம்பரங்களில் போட்டு(?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?).

 

             இதில் இன்னொரு கழிசடையும் நடிகரும் சேர்ந்திருக்கிறார்(ன்) முத்துராமலிங்கம் சமத்துவம் விரும்பினாராம், அவர் எல்லா மதங்களும் சாதியையும் மதித்தாராம்.(பின் ஏன் முத்துராமலிங்கத்தை பின்பற்றுபவர்கள் சாதியக்கொடுமை ஏனோ புரிகிறார்கள்? முத்துராமலிங்கம் சொன்னது காதில் விழ வில்லையோ?) தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்கள் என்றாராம். அவரின் பட்த்தைஒ கொடியில் பதிப்பது தங்களுக்கு தாங்களே மதிப்பு செய்வதாகுமாம். இதில் எந்த கண்ணை கொண்டு முதுகுளத்தூரில் நடந்த கொடுமையை பார்த்து கொண்டிருந்தார் அல்ல்து எந்த கண்ணை கொண்டு கண்ணசைத்து தூபம் போட்டுக்  கொண்டிருந்தார்.எறையூரில், உத்தபுரத்தில் தீண்டாமை இந்த நடிகருடைய கண் எங்கிருந்த்தாம்?

 

(இந்த நடிகர் பற்றி ஆனந்த விகடன் பத்திரிக்கை ஒரு செய்தி வெளியிட்டுள்ளது, இவர் சொன்னாராம்,

கண்ணால் கண்டால் கடவுள் என்றால் குருடனுக்கு கடவுள் எப்படி புலப்படுவார்? நான் கேட்கிறேன் குருடனைவிடு, கண் தெரியும் நீ, எப்புலனை கொண்டு கடவுள் உணர்ந்தாய்? குருடனை பற்றி கவலைப்படுபவரே, உன் தத்துவப்படி குருடனை படைத்த்து யார்?)

 

           இப்படி வெந்த்து, வேகாதது, அரைவேக்காடு என எல்லாவனையும் ஆழ விட்டதின் விழைவு நம் மண்ணில் நாம் இன்று அடிமை!

 

பார்ப்பான் வந்தான் நம்மை சூத்திரன் என்று சொன்னான், நீ எனக்கு தொண்டு செய்யவே படைக்கப்பட்டேன்னான். அதற்கு எதிர்ப்பு சில அறிவாளிகளிடமிருந்து கிளம்பியது, கேள்வி கேட்க துவங்கினர், கேள்வி கேட்க கற்று கொடுத்தனர். கேள்விகள் தொடர்நத்தும்  உடனேயே கிருஷ்ணன் சொல்றான்னு கிதையை காண்பித்து கடவுளே சொல்லிட்டாரு நீ சூத்திரன்னு அதனாலே நீ எனக்கு தொண்டு செய்தே சாவது உன் பிறப்பு கடமைன்னு அரசன் மூலமாக நடைமுறை படுத்தினான். எதிர்த்தவனை கழுவேற்றினான். ராமன் சூத்திர சம்பூகனை கொன்ன கதை, நந்தனை தீயிலுட்டு கொழுத்தியதை கதை என நம் சூத்திரத்தனமையை நியாயப்படுத்தி பல கதைகள் சொல்லி வழிபாட்டு உரிமையை பறிச்சான். நாம் கீழ்ச்சாதியாக பிறந்தது நம் குற்றம் என நம்ப வைத்தான். முற்பிறவியின் என்று எண்ண வைத்தான்.

                     பார்ப்பான் வந்து அறிவை தின்றான், நம் உழைப்பை தின்றான், நாம் நம் இனத்தவர்களை பட்டினி போட்டு, உழைத்து அவனுக்கு கொடுத்து நம் விருந்தோம்பல் பண்பை மெச்சி கொண்டே இருந்து விட்டோம். கற்சிலை(கடவுள்) என்ற தபால் பெட்டி வாயிலாக பார்ப்பானுக்கு உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தையும் அழித்து நம் தோழர்களை சேரியில் தள்ளிவிட்டோம். பார்ப்பான் செய்தது சூழ்ச்சி என்றால் நம் இனத்தவர்கள் செய்தது துரோகம். பார்ப்பான் நம்மவர்களில் சிலரை நீ இத்தனை பேருக்கு மேல் சாதி என்று சாத்திர சூத்திரம் காண்பிக்க, நம்மவர்களும் எலும்புத்துண்டுக்கு அலையும் நாய் போல சாதிப் பெருமை பேசி, நம் உறவுகளை சாதிவெறி பிடித்து தன் கோர பற்களால் கடித்து குதறி வருகின்றனர் இன்று வரையில்………….!

                    

              பார்ப்பனீயத்தின் கொடுமை தாங்காமல் சிலர் தங்களை இடமாற்றம்(மன மாற்றமல்ல) செய்து கொண்டனர். கிருஸ்துவர்களாக, இஸ்லாமியர்களாக மாறினர். ஆனால், இன்றைய நிலை என்ன? கிருஸ்துவர்கள் இயேசுவு பிறந்த கொட்டகையின் பக்கத்துக்கு கொட்டகையிலிருந்து பார்த்தவர்கள் போல பீற்றி கொள்(ல்)கின்றனர். இஸ்லாமியர்கள் ஏதோ பாபரின் பேரன் போல பெருமை கொள்(ல்)கின்றனர். மதமாற்றத்தை விட மனமாற்றம் பெரிய சமூக மாற்றத்தை தரும் என்பதை உணர மறுக்கின்றனர்.

 

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆண்டவர் இயேசு இம்மக்களின் பாவங்களை கழுவ அனுப்பி வைத்தார் என்று நம்பும் கிருஸ்துவர்கள், தமிழர்கள் சாதிச் சாக்கடையில் மூச்சு திணறி கொண்டிருந்த பொழுது இஸ்ரவேலில் என்ன செய்து கொண்டிருந்தார். சிலுவைக்காக காத்துக்கொண்டிருந்தாரா என்ன? தமிழர்களை சாதியக் கொடுமையால் தினம்-தினம் சிலுவையில் அடித்த்து போன்ற கொடுமைகள் நடந்த்தே(நடக்கின்றதே). பாவங்கள் போக்க வந்தவருக்கு எங்கள் வலி தெரியவில்லையோ?

 

அல்லா நபிகளை அனுப்பி வைத்தார், அவர்தான் கடைசித்தூதர், இதற்கு முன் வந்த ஈசா நபியும் கடவுளின் தூதர் என்று நம்பும் இஸ்லாமியர்களே! 400 ஆண்டுகள் இடைவெளியில் இரண்டு தூதர்களை அரபு பிரதேசத்தை நோக்கி அனுப்பிய உங்கள் அல்லா, சாதியச் சாக்கடையிலிருந்து எழ எமக்கு ஒரு தூதரை ஏன் அனுப்பவில்லை என்ற கேள்வி எழுமா? இல்லையா?

 

                     நாங்கள் பெருந்திரளாக அடிபட்டு, உதைப்பட்டு, சொரணைக்கெட்டு கிடந்த காலத்தில் பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் வராவிட்டால் எங்கள் நிலை என்ன? இன்று கிருஸ்துவர்கள் பயன்படுத்தும் பைபிளை பாருங்கள், ஒரே சமஸ்கிருத வாடை, கிருஸ்துவர்கள் மத்தியில் சாதிப்பற்று(இதற்கு எறையூர் போன்ற கிராமங்கள் எடுத்துக்காட்டு), இந்நிலையில் கிருஸ்துவத்தை, இன்னொரு இந்து முகம் என்றுதானே சொல்லத்தூண்டும். கிருஸ்துவர்கள் எத்தனைபேர் தம் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுகின்றனர். அதென்ன? ஆல்பர்ட் நாடார், அந்தோணி பறையர். பார்ப்பன மதம் எங்கள் மொழியையும், பண்பாட்டையும் எப்படி சீரழித்த்தோ அதே போலத்தானே நீங்களும் வரிந்து கட்டி கொண்டு செய்கிறீர்கள். உங்கள் கோயிலில் வெகுவாக பயன்படுத்தப்படும் ஞானஸ்நானம், ஸ்தோத்தரம், பிரத்ர், இவையெல்லாம் தமிழா? நாங்கள் உங்கள் கிருஸ்துவ மத்த்தையும் இன்னொரு பண்பாட்டு படையெடுப்பாகத் தானே கருத முடியும். இவற்றில் பல இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும், இவர்கள் மத மறுப்பு திருமணம் என்றால் குதிக்காமல் இருப்பார்களா? தமிழ் பெயர்களை சூட்டுவார்களா?  இவை நீடித்தால் கிருஸ்துவன் இருப்பான், இஸ்லாமியன் இருப்பான், இந்து இருப்பான், தமிழன் மட்டும் இருக்க மாட்டான்.

 

தோழர்களே! விழிப்படையுங்கள் நமக்கு எதற்கு மதம், மதம் நம்மை சீரழித்த்து போதாதா? ஒரு மத(ல)ம் போக்க இன்னொரு மத(ல)ம் தீர்வாகுமா?

July 4, 2008 Posted by | மதம் | | Leave a comment