மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

மறுபடியும் சொல்கிறேன், ரஜினிதான் தமிழனுக்கு தலைவர்!!!!!!!!!!

ஈழத்தில் நம் உறவுகள் இப்படி கொடுரமாக கொல்லபடுவதை கண்டு கொஞ்சமும் கவலை கொள்ளாமல் ரஜினி/சினிமா பைத்தியம் பிடித்து திரியும் தமிழனுக்கு ரஜினிதான் தலைவன்தமிழன் எப்படி செத்து மடிஞ்சாலும் சினிமா பைத்தியங்கள் இப்படித்தான் தன்னிலை மறந்து திரியும்.


உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்குன்னு சொல்லிட்டு இருந்தே, இப்பதானே தெரியுது அது ஆட்டு உயிருன்னு

 ஏண்டா! தலைவன் தலைவன்னுட்டு ஒரு ஆட்டின் தலையை எடுக்குறே, அவருக்கு எதுவும் வேணும்னா, அவருக்குதான் இமயமலை இருக்கே! பாபா இருக்காரே!! ராகாவேந்திரா இருக்காரே!!!

 நீ ஏண்டா ஒரு ஆட்டை கொல்லுரே, ஆடு என்னைக்காவது தன்னை வீணடிச்சுருக்கா????? 

ஆனா நீ உன்னையும் வீணடிச்சு, இந்த மண்ணையும் வீணடிச்சு, சுயமரியாதை இழந்து ஆன்மிக ரஜினியின் மூடபக்தனாக இருக்குறப்போ! 

உனக்கு ரஜினி தலைவனாகாம யாருடா தலைவரார்?

கூலித்தொழிலாளி போல் நடித்து கூலித்தொழிலாளியின் ஒரு நாள் கூலியை பிடுங்கும் இவனா உன் தலைவன்?  ???   ? ?


ஏண்டா ,எங்கேயாவது சூடம் காண்பித்து கொண்டே இருக்கணுமா? கோயில்லை கல்லை கண்டா சூடம் காண்பிக்கிறே! தெருவோரம் மலம் துடைத்த கல்லாயிருந்தாலும் கொஞ்சமேனும் குங்குமம் வைத்துவிட்டால் அதற்கும் சூடம் காண்பிக்கிறே!! படத்தாளுக்கு சூடம் காண்பிக்கிறே!!!

 நாய் கம்பத்தை கண்டா காலத்தூக்குது, நீ எதை கண்டாலும் கையத்தூக்குறே!! சூடம் காண்பிப்பதற்கு!!!!

உங்களுக்கு ரஜினி தலைவனாகாம, வேற எவண்டா தலைவனாவான்!?முத்தமிழ் அறிஞர், கலைஞர் தமிழனை குரல்வளையை மேலும் அருக்க , வாள் வழங்குகிறாரோ!!!!!!!!!!!!!

சிவாஜி படத்திற்காக நடந்த விருந்தில் ஒரு தொழில் நுட்ப கலைஞர் இறந்ததற்கு, ரஜினி வருத்தம் தெரிவித்ததாகவோ, இரங்கல் தெரிவித்ததாகவோ நாம் செய்தி படிக்கவில்லை, ஆனால், குசேலன் படம் கர்நாடகாவில் ஓட வேண்டும்,என்பதற்காக கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டாராம் ரஜினி,எதற்கு?

 

தயாரிப்பாளர்களுக்கு கேடு வந்துவிடக்கூடாது, போட்ட முதலுக்கு பங்கம் வந்து விடக்கூடாது. என்று ஒரு பொது நல்நோக்கோடு மன்னிப்பு கேட்டார் என்று சிலர் சப்பைக்கட்டு கட்டுவர்.

 

ஓகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து அரசியல் பலன் தேடி கொண்டவர்கள் அரசியல்வாதிகளும் ரவுடிகளும்தான்.இதுஎல்லோரும் அறிந்தது  அப்படியிருக்க யாரிடம் வருத்தம் தெரிவித்தான் ரஜினிகாந்த்.

 

தமிழன் குடிக்க தண்ணியில்லாம செத்தாலும் சரி,எனக்கு நான் நடித்த படம் ஓடணும், என் முதலாளி நட்டப்படக்கூடாதுன்னு நினைக்கறவன் தலைவன்னா? பணம்போடறவன் முதலாளியா, அப்படத்தை ஓடவைக்கிறவன்/ரசிகன் முதலாளியா?

 

வச்சுக்கோ, அவர்(ன்)தான் உனக்கு தலைவனாக இருக்க தகுதியானவர். நீ ஏமாந்து கொண்டே இரு அவரு உன்னை ஏமாத்திக்கிட்டே இருப்பாரு

August 6, 2008 Posted by | ஈழம், தமிழ், ரஜினி | 11 Comments

தமிழர்களுக்கு தலைவராக தகுதியுடையவர் ரஜினிகாந்த் மட்டும்தான

பின்னூட்டமிடவும்.

August 4, 2008 Posted by | ரஜினி | 3 Comments