பிரபாகரன் மரணம், படம், காட்சி- பொய்
ஈழத்தமிழ் பெண் சொன்ன செய்தி
புலிகள் இயக்கத்தில் உள்ள உறுப்பினர்களின் அடையாள அட்டை வைத்துக் கொள்ளும் வழக்கம் கிடையாதென்றும்,
போராளிகள் கழுத்தில் சிகப்பு மற்றும் கருப்பு நிறக் கயிறுதான் அணிந்திருப்பர் என்றும் சிகப்பு நிறக்கயிற்றில் அடையாள தகடும், கருப்பு நிறத்தகட்டில் நஞ்சுக்குப்பியையும் அணிந்திருப்பர் என்றும் தெரிவித்தார்,
நான் சந்தித்த ஈழத்தமிழ் பெண்.
மேலும் அவர் கூறுகையில்,
பிரபாகரன் அடையாள அட்டை வைத்திருந்தார், அந்த உடலை கைப்பற்றிவிட்டோம்,
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முகத்தில் சுருக்கங்களோடு இருந்தவர், நீண்ட இடைவெளியில் போர்ச்சூழலில் வாழ்ந்த பின்பு, குண்டு தாக்கியதில் முகத்தில் இளமை வந்துவிட்டது.
என்றெல்லாம் கூறுவது தூய பொய், இது பொய்யாக உருவாக்கப்பட்டது.
இது தொடர்பான மற்ற பதிவுகள்:
http://kundumani.blogspot.com/2009/05/blog-post_3404.html
இந்திய உளவு நிறுவனங்களின் சதி பற்றி கருணாநிதி-மீள்பிரசுரம்
“ரா” உளவு நிறுவனம் தான் இந்த குழப்பங்களை உருவாக்குகிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மாநில அரசுக்குமிடையே மோதலை உருவாக்குவதே “ரா”வின் நோக்கமாக இருக்கிறது, எனவே இதில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஈழத்தமிழ் குழுக்களிடையே கடந்த காலங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கியதற்கு “ரா” தான் காரணமாக இருந்தது. இப்போது அதே வேலையை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், இடையே செய்து கொண்டிருக்கிறது”
“ Sri Karunanithi, on 8th May 1990, on the floor of the assembly is reported to have accused the Research and Analysis Wing(RAW) of trying to create a rift between the Center and the State appealed to the Prime Minister to take appropriate action. He alleged that the RAW which was responsible in the past for creating Divisions among various Tamil Groups of Srilanka was doing the same between the Centre and the State”
(ஆதாரம்: ஜெயின் ஆணைய அறிக்கை)
என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார், தமிழகத்தின் முதல்வர் ஒருவராலேயே சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்து இது!
தமிழக முதல்வர் கலைஞர் கருணநிதி தெரிவித்த அச்சப்படி அதற்குபிறகுதான் தமிழ்நாட்டில் பத்நாபா படுகொலையும், சகோதர யுத்தங்களும் தொடர்ந்தன.
உளவு நிறுவனங்களின் பார்ப்பன சதித் திட்டம் உருவானது. இதற்கு தளம் அமைத்துத் தந்தது ‘ரா’ உளவு நிறுவனம் தான்!
உளவு நிறுவன மிரட்டலுக்கு திமுக பணிய மறுத்தது. உடனே ஜெயலலிதா, சுப்ரமணியசாமி,எம்.கே.நாராயணன் என்று உளவு நிறுவன பார்ப்பன சக்திகள் தீட்டிய திட்டத்தின்படி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
அதே உளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் 2007-லும் தனது திருவிளையாடல்களை துவக்கி இருக்கிறது.
உளவு நிறுவனங்களோடு கடந்த காலங்களில் கசப்பான அனுபவங்களை சந்தித்து, அவர்களின் சூழ்ச்சி பொறிகளை தெளிவாக புரிந்து வைத்துள்ள திமுக ஆட்சி, பொய்மை பிரச்சாரத்துக்கு துணை போய் விடக்கூடாதுஎன்பதே நமது வேண்டுகோள்.
நன்றி :
ஈழப்பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி(பக்கம்:64-65)
ஆசிரியர்: விடுதலை க.இராசேந்திரன்.
வெளியீடு:பெரியார் திராவிடர் கழகம்
முதல் பதிப்பு:௨00௭(2007)
இந்த நேரத்தில் கருணாநிதிக்கு நினைவுப்படுத்தபட வேண்டிய (பாவம் மறந்து போயிருப்பார்).
சரி அவருக்குதன் உடல் நிலை சரியில்லையே, அவருடைய மகன் அழகிரியும், மு.க.ஸ்டாலினும் படிக்கட்டும், அல்லது இது நூல்களை தகவல் உள்ள தாள்களை தங்களுடைய பிறந்த நாள் கொண்டாட்டதில் கேக் பரிமாறட்டும்.
ஆதலால், மீள்பிரசுரம்
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா நடத்தும் நிழல்ப் (proxy) போர்
Courtesy: நக்கீரன்
போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு வெளியிட்டு உடனடியாகப் படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும்” என தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை தமிழ்மக்கள் வரவேற்பார்கள் என்பதில் அய்யமில்லை. இது தமிழீழச் சிக்கல்பற்றி தமிழக அரசியல் கட்சிகள் தங்களுக்கும் இருக்கும் சிறு சிறு வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்டு, ஒரே அணியில் நிற்பதைக் காட்டுகிறது.
ஆனால் இந்தத் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு எவ்வளவு தூரம் கவனத்தில் எடுத்துக் கொண்டு அக்கறையோடு செயல்படும் என்பதில் பலருக்கு நியாயமான அய்யம் இருக்கிறது.
தமிழீழத்தில் வி.புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசினால் நடத்தப்படும் ஆக்கிரமிப்புப் போருக்கு இந்தியா ஆயுதம், பயிற்சி, தொழில்நுட்பம், கண்காணிப்பு (surveillance) புலனாய்வு (intelligence) போன்றவற்றை நல்கி வருகிறது. இனச் சிக்கலுக்கு இராணுவத் தீர்வு அல்ல அரசியல் தீர்வே தேவை எனக் கடந்த மூன்றாண்டுகளாக கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டிருக்கும் இந்தியா போரைத் தீவிரப்படுத்த லங்கா அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
இந்த நிலைப்பாடு ஒரு தன்முரண்பாடு (self-contradictory) ஆகும். இதன் அடிப்படையிலேயே வி.புலிகளோடு பேசுவதாக இருந்தால் அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துத் தன்முன் மண்டியிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் பயங்கரவாதத்துக்கு (வி.புலிகளுக்கு) எதிரான போர் முழு வீச்சில் தொடரும் என்றும், லங்காவின் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே தலைநகர் தில்லியில் இருந்தபடியே திமிரோடு மார்தட்டுகிறார்.
இப்படி அவர் மார்தட்டுவதற்கு என்ன காரணம்? அதற்கான துணிச்சல் ஒரு சுண்டக்காய் நாடான லங்காவின் ஆட்சித்தலைவருக்கு எங்கிருந்து வந்தது?
லங்கா அரசு வி. புலிகளுக்கு எதிரான போரை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்கிறது. இந்தியாவும் அதையே சொல்கிறது. அதற்கும் அப்பால் வி.புலிகளுக்கு எதிரான போரை இந்தியாவே லங்கா ஊடாக நடத்தி வருகிறது.
இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி – ஸ்ரீலங்காவின் சிறப்புத் தூதுவர் பசில் இராசபக்சே இருவரும் தில்லியில் நடத்திய பேச்சு வார்த்தைகளை அடுத்து ஒக்தோபர் 26 ஆம் நாள் வெளியிட்ட கூட்டு செய்தி அறிக்கையில் காணப்படுகிறது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது –
“இருதரப்பினாலும் வடக்கு உட்பட இலங்கைத் தீவில் சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகரவேண்டிய அவசியம் பற்றிப் பேசப்பட்டது. இருதரப்பும் பயங்கரவாதம் (வி.புலிகள்) முன்னரைவிட உறுதியோடு முறியடிக்க வேண்டும் என்பதில் இணக்கம் கண்டன. (Both sides discussed the need to move towards a peacefully negotiated political settlement in the island including in the North. Both sides agreed that TERRORISM should be countered with resolve.)
தில்லியில் இந்தக் கூட்டறிக்கையை விட்ட பின்னரே பிரணாப் முகர்ஜி சென்னை வந்து தமிழக முதல்வர் மு.கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த பிரணாப் முகர்ஜி “நான் முதல்வர் கருணாநிதி முன்வைத்த கோரிக்கைகளை (இலங்கைத் தமிழர்களுக்கெதிராக நடைபெற்று வரும் போரை நிறுத்த இந்திய மத்திய அரசு இருவார காலத்துக்குள் முன்வரவேண்டும். இந்திய அரசு ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்கும் ஆயுத உதவி அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தவும் தமிழ் மக்களை அழிக்கவுமே பயன்படுகிறது. எனவே இத்தகைய இராணுவ உதவிகளை மத்திய அரசு நிறுத்தி அங்கு இடம்பெறும் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும்) நிராகரித்துவிட்டதாகச் (I have overruled Chief Minister Krunanidhi) சொன்னார். முன்னதாக இந்திய நாடாளுமன்றத்திலும் ஸ்ரீலங்காவிற்கு கொடுக்கப்படும் இராணுவ ஆயுத தளபாட உதவி தொடரும் என்று அவர் பேசியிருந்தார்.
இந்திய – இலங்கை உடன்பாட்டின் கீழ் வட-கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டன. ஆனால் அந்த இணைப்பைத் துண்டித்துவிட்டு கிழக்கு மாகாணத்தில் துப்பாக்கி முனையில் மகிந்த இராசபக்சே தேர்தலை நடத்தினார். அதனை இந்தியா எதிர்க்கவில்லை. மாறாக பச்சைக்கொடி காட்டியுள்ளது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் (1987) 13 ஆவது சட்ட திருத்தம் செய்யப்பட்டது. அந்தத் திருத்தத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி நிராகரித்தது. இப்போது அதே 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ்த்தான் இனச் சிக்கலுக்கு தீர்வு என மகிந்த இராசபக்சே கூறுகிறார். அதனை இந்தியா வரவேற்றுள்ளது.
தமிழர்களைக் கொல்லப் பயன்படும் ஆயுததளபாடங்கள் ஸ்ரீலங்காவிற்குக் கொடுக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்ற தமிழக அனைத்துக்கட்சிகளின் ஒருமனதான வேண்டுகோளை இந்திய மத்திய அரசு – தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் உயிர் வாழும் காங்கிரஸ் அரசு – நிராகரித்துள்ளது.
இவ்வாறு இனச் சிக்கலுக்கு இராணுவத் தீர்வு அல்ல அரசியல் தீர்வே தேவை என வற்புறுத்திச் சொல்லும் இந்தியா போரைத் தீவிரப்படுத்த ஸ்ரீலங்கா அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கிவருகிறது. இது ஒரு தன்முரண்பாடு (self-contradictory) ஆகும்.
மகிந்த இராசபக்சே கடந்த மூன்று ஆண்டுகளாக இனச் சிக்கலுக்கு தீர்வுகாண அனைத்துக் கட்சி பிரதிநித்துவ குழு ஒன்றை உருவாக்கி ஊரையும் உலகத்தையும் ஏமாற்றி வருகிறார். இந்தக் குழுவுக்கு தமிழ்மக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் தமிழர் தேசிய கூட்டமைப்பு அழைக்கப்படவில்லை. இந்தக் குழு ஒற்றையாட்சியின் கீழ்த்தான் தீர்வு யோசனைகளை முன்வைக்க வேண்டும் என மகிந்த இராசபக்சே கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். 2005 ஆம் ஆண்டு ஆட்சித்தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் மகிந்த இராசபக்சேயின் கட்சியான அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி (United Peoples Freedom Alliance (UPFA) பச்சை இனவாதக் கொள்கைகளை முன்வைத்து வெற்றிபெற்றது. வெற்றிபெற்ற மகிந்த இராசபக்சே தனது வெற்றிக்கு சிங்கள – பவுத்த மக்களின் வாக்குகளே காரணம் எனவும் தனது ஆட்சி அவர்களது விருப்பப்படியே செயல்படும் என அறிவித்தார்.
இனச் சிக்கலைப் பொறுத்தளவில் அப்படியொரு சிக்கல் இருப்பதை அவர் மறுத்தார். மாறாக நாட்டில் பயங்கரவாதம் இருப்பதாகவும் அதற்கு இராணுவ தீர்வு காணப்படும் என்றும் தமிழ்மக்களைப் பொறுத்தளவில் அவர்களுக்கு ஒற்றையாட்சியின் கீழ் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் (அதிகாரப்பரவல்) அரசியல் தீர்வு காணப்படும் என்றார். மேலும் தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய கோரிக்கைகளை முற்றாக நிராகரித்தார். தொண்ணூறுகளில் சிங்கள அரசியல்வாதிகள் இனச் சிக்கலுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் தீர்வு காணமுடியாது – இணைந்த வடகிழக்குக்கு மாகாணங்களுக்கு இணைப்பாட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தார்கள். குறிப்பாக முன்னாள் ஆட்சித்தலைவர் சந்திரிகா குமாரதுங்கா அவ்வாறான கருத்தை வெளியிட்டிருந்தார்.
ஆனால் மகிந்த இராசபக்சே பதவிக்கு வந்த பின்னர் “ஸ்ரீலங்கா சிங்கள – பவுத்த மக்களுக்கே சொந்தமான நாடு. சிங்களவர் பெரும்பான்மை இனம் (74 விழுக்காடு) என்பதால் அவர்களே நாட்டை ஆளும் உரிமையுடையவர்கள். சிறுபான்மையான தமிழர்களும் முஸ்லிம்களும் இடையில் வந்து குடியேறியவர்கள். அவர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது. கொடுப்பதை வாங்கிக்கொண்டு வாய்பொத்தி வாழ வேண்டும்” என்ற சிந்தனை பவுத்த தேரர்கள், சிங்கள அரசியல்வாதிகள், சிங்கள இராணுவ தளபதிகள், பெரும்பான்மை சிங்கள அறிவுப்பிழைப்பாளர்கள் போன்றோர் இடையே காணப்படுகிறது. இது மகாவம்ச சிந்தனையும் ஆகும்.
இனச்சிக்கல் பற்றிய மகிந்த இராசபக்சேயின் சிந்தனை நாட்டின் அரசியலை அய்ம்பது ஆண்டுகள் பின்தள்ளியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் 4,000 க்கும் அதிகமான தமிழர்கள் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒன்பது தமிழ் ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
வன்னி வான்பரப்பில் ஸ்ரீலங்கா வான்படை 6,000 க்கும் அதிகமான தடவைகள் பறந்து 50,000 க்கும் அதிகமான குண்டுகளை வீசியுள்ளது. இதனால் வீடுவாசல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனைப் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய இராசபக்சே பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்.
போரினால் மூன்று இலட்சம் தமிழ்மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாயிரத்துக்கும் அதிகமான தமிழ் ஆண்கள், பெண்கள் அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஸ்ரீலஙிகாவின் சிறைச்சாலைகளில் விசாரணையின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டவர்கள்.
ஆறு இலட்சம் தமிழ்மக்கள் வாழும் யாழ்ப்பாணக் குடாநாடு ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாறியுள்ளது. உயிருக்கு அஞ்சி 200க்கும் அதிகமான தமிழர்கள் தாமாகவே சிறைச்சாலையில் அடைக்கலம் புகுந்துள்ளனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் 40,000 சிங்களப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மீன்பிடித் தொழில் மற்றும் விவசாயம் முடக்கப்பட்டுள்ளது. மாலை 6.00 மணி தொடக்கம் காலை 6.00 மணிவரை ஊரடங்கச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது.கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் – 1,100 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 771 பேர் காணாமல் போனவர்கள். 334 பேர் கடத்தப்பட்ட பின்னர் காணாமல் போனவர்கள். 543 கொலைகளில் கொலையாளிகள் எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொலைசெய்யப்பட்ட 308 சடலங்கள் அடையாளம் காட்டப்படவில்லை. இந்த புள்ளிவிபரங்களைத் தந்திருப்பவர் காணாமல் போனோர் பற்றி விசாரிக்க அரசினால் நியமிக்கப்பட்ட ஆட்சி ஆணையத்தின் (Presidential Commission on Disappearances) தலைவர் இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதியாளர் மகாநம திலகரத்தின ஆவர். (Daily Mirror – November 13, 2008).
சிங்கள – பவுத்த பேரினவாதியான மகிந்த இராசபக்சே பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் ஒரு முழு அளவிலான தமிழினப் படுகொலையை அரங்கேற்றி வருகிறது. அதனைப் பன்னாட்டு சமூகம் கண்டும் காணதது போல் இருக்கிறது.
உண்மையில் வி.புலிகளுக்குப் பயங்கரவாத வருணம் பூசி அவர்களுக்கு எதிரான போரைத் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு இந்தியாவே நடத்துகிறது! அந்தப் போருக்கு ஸ்ரீலங்கா அரசை இந்தியா ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது! வேறுவிதமாகச் சொன்னால் இந்தியா வி. புலிகளுக்கு (பயங்கரவாதத்துக்கு) எதிராக ஒரு நிழல்ப் போரை (proxy war) நடத்துகிறது. இதன் காரணமாகவே போர் நிறுத்தம் செய்யுமாறு ஸ்ரீலங்காவை வற்புறுத்த மறுக்கிறது. ஆயுத தளபாடங்கள் வழங்குவதை நிறுத்த மறுக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் “போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு வெளியிட்டு உடனடியாகப் படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும்” என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒக்தோபர் 14 இல் நிறைவேற்றப்பட்ட அனைத்துக்கட்சித் தீர்மானங்களுக்கு ஏற்பட்ட கதியே இப்போது நொவெம்பர் 12 ஆம் நாள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் ஏற்படப் போகிறது என எதிர்பார்க்கலாம். இந்தக் கசப்பான உண்மையை தமிழக அரசியல் தலைவர்களும் மக்களும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
-
Archives
- October 2009 (1)
- September 2009 (11)
- August 2009 (4)
- July 2009 (2)
- June 2009 (1)
- May 2009 (1)
- April 2009 (3)
- March 2009 (10)
- February 2009 (1)
- January 2009 (7)
- December 2008 (3)
- November 2008 (20)
-
Categories
- அ மார்க்ஸ்
- அண்ணா
- அப்பா
- அமீர்
- அம்பேத்கர்
- அல்லா
- இந்தியா
- இந்து மதம்
- இனப்படுகொலை
- இனவெறி
- இலங்கை
- இழிவு
- இஸ்லாம்
- ஈழம்
- உலகத்தமிழ்
- எண்ணம்
- எம்.ஜி.ஆர்
- கடவுள்
- கடவுள் கற்பனை
- கம்யூனிசம்
- கருணாநிதி
- கர்த்தர்
- கலைஞர்
- கவிஞர்
- கவிதை
- காங்கிரஸ்
- காசுமீர்
- காதல்
- கிருத்துவம்
- கீற்று
- குடியரசு
- குண்டு வெடிப்பு
- சட்டக்கல்லூரி
- சாதி
- சிரிப்பு
- சீமான்
- சு சாமி
- சே
- ஜெயலலிதா
- டக்ளஸ் தேவானந்தா
- தமிழ்
- திருமணம்
- திருமா
- தீபாவளி
- தீவிரவாதம்
- நகைச்சுவை
- நையாண்டி
- பக்தி
- பன்றி காய்ச்சல்
- பாடல்
- பாரதிதாசன்
- பார்ப்பானியம்
- பிரபாகரன்
- புதிய ஜனநாயகம்
- புலிகள்
- பெரியார்
- போர் நிறுத்தம்
- மகிழ்நன்
- மத(ல)ம்
- மதம்
- மனிதம்
- மரணம்
- மாநாடு
- மாவீரர்கள்
- மிரட்டல்
- மூடநம்பிக்கை
- மொழி
- ரஜினி
- ரா(RAW)
- ராஜபக்சே
- ராஜிவ்
- ராமேஸ்வரம்
- லொள்ளு சபா
- விடுதலை
- விழித்தெழு
- Periyar
- Uncategorized
-
RSS
Entries RSS
Comments RSS