நாமெல்லாம் திருந்து உருப்பட்டு….
படம்: வீரகேசரி
நாமெல்லாம் திருந்தி, உருப்பட்டு…………..நடக்கிற காரியமா இது?
மூன்று லட்சம் தமிழர்களை முள்வேலி கம்பிக்குள் அடைத்து வைத்திருக்கும் இன்றும் ஒன்றும் செய்ய முன்வராத, இல்லாத கடவுளை எத்தனை நாளைக்கு கும்பிட்டு முட்டாளாய் கிடக்க போகிறோம்.
தமிழினத்திற்கு ஒவ்வாதது பக்தி…………..தேவை நமக்கு புத்தி………….
தோழர்களே! ஈழ மக்களின் அவலத்தில் உள்ளம் மிகுந்த ரணமாகியிருக்கிறது. இந்த அவலமான வருத்தமான தருணத்தில் நம் மக்கள் அனைவருமே உண்மையான அக்கறையோடு இருக்கிறார்களா?என்பது சுய ஆய்வுக்குரியது. கொஞ்சம் இந்த இணைப்புகளை பார்க்கவும்.
வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா
சுவிஸில் உள்ள இந்து ஆலயங்களில் தாயகமக்கள் அமைதி வேண்டி அமைதிப் பிராத்தனை
வானில் அம்மன் தோன்றும் அரிய புகைப்படம்
3 லட்சம் மக்களை முள்வேலி கம்பிக்குள் அடைத்து வைத்திருக்கும் சூழலில் பிரார்த்தனை போன்ற ஒன்றுக்கும் உதவாத காரியங்களில் ஈடுபட்டு கொண்டிருந்தால் வரலாறு நம்மை மன்னிக்குமா?
கடைசி நாளில் 10,000 மேற்பட்ட தமிழ்மக்கள் சாக கிடந்த வேளையில் வந்து காப்பாதாத கடவுளை இன்னும் நம்பித்தான் ஆக வேண்டுமா?
மாதாவாகட்டும்,ஏசுவாகட்டும், முருகனாகட்டும், அல்லாவாகட்டும் எவனும் தமிழனத்தின் இக்கட்டான சூழலில் வரவில்லையே………..இன்னும் எதற்கு இந்த பக்தி போதை….நம்பி கெட்டது போதாதா?
பக்தி என்னும் மூடத்தன்த்திற்கு மகுடம் போல, சாதி என்னும் கொடூரம் நம் உள்ளங்களில் உள்ளதே?
ஈழத்தமிழருக்காய் குரல் கொடுக்கும் எத்தனை தமிழர்கள் தங்கள் வீட்டில், வாழ்க்கையில் சாதி பார்க்காமல் இருக்கிறார்கள்…..வீட்டில் சாதியை பின்பற்றுபவன் வெளியில் வந்து தமிழன் என்று கத்தினால் கொஞ்சம் நெருடலாகத்தானே இருக்கிறது….
ஈழத்தமிழர்களும் இதில் விதிவிலக்கல்ல, இவ்வளவு ரணங்கள், வலிகள் இருந்தும் சாதியை பின்பற்றுவதில், பாதுகாப்பதில் அவ்வளவு ஆர்வத்தோடு திருமணத்திற்கு துணைதேடும் நிலையில் நாமெல்லாம் தமிழர்கள் என்பது கொஞ்சம் போலியாக தோன்றவில்லையா…..?
தமிழ் பேசுவதால் மட்டும் நாம் தமிழர்களாகிவிட முடியாது. சாதி, மதம் பார்க்காமல், பின்பற்றாமல் இருந்தால்தான் நாம் தமிழர்கள்…கடவுள் என்ற மூடநம்பிக்கையிலிருந்து விடுபட்டால்தான் நாம் மனிதர்கள்……….
நாம் தமிழராக சாதியை விடுங்கள், மதத்தை துரத்தி அடியுங்கள்…….தமிழில் உரிமை கோரும் மனிதராக உயருங்கள்……
தமிழர்களே திருந்துங்கள்…பெரியாரின் பாதைக்கு திரும்புங்கள்…
பகுத்தறிவுப்பாதை தேர்ந்தெடுங்கள்…………..
தமிழினத்திற்கு ஒவ்வாதது பக்தி…………..தேவை நமக்கு புத்தி………….
அன்புத்தோழர்களே! உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்
அன்புத்தோழர்களே!
நம் சமூகம் கருத்து பஞ்சத்தால் மதவெறி, சாதிவெறி பாசிசத்துக்கு உள்ளாகும் கொடூர நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. கருத்தை பரவலாக்கும் மாபெரும் சக்தியாக இன்றைய நிலையில் இணையதளம் வாயிலாக கணிணியும், ஊடகமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை பார்ப்பன பரதேசிகளிடமும், அவர்தம் அடிவருடிகளிடமும் உள்ளன.
இந்த ஊடகங்களை நாம் கைப்பற்றாமல் இருப்பது நம்மவர்கள் செய்த மாபெரும் பிழையல்ல, குற்றம். அதை ஓரளவு விழிப்புணர்வு கொண்ட நாமாவது நம் ஆதிக்கம் இந்த ஊடகங்களில் வருமளவு ஆதிக்கம் செலுத்த வேண்டும்.
அறிவியலை முன்னிறுத்தும் நாம் இந்த அறிவியிலால் விளைந்த ஊடகங்களை நம்மைவிட வெகுவாக நம் எதிரிகள் பயன்படுத்துவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? அறிவியலை மறுப்பவர்கள் இந்த ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள்.
நம்மிடமும் ஊடகங்கள் இருக்கின்றன், ஆனால் குறிஞ்சிப்பூ போன்று, இவைகளை மட்டும் வைத்துக் கொண்டு நாம் ஒன்றும் பெரிதாக சாதித்து விட முடியாது. நம் ஊடகங்கள் பரவ வேண்டும்.
பெரியாருடைய காலம் போலல்லாமல் பொதுக்கூட்டமும், உரைவீச்சும் மட்டுமே இன்றைய நிலையில் கருத்து பரவலுக்கு முக்கிய பங்கு வகிக்கலாம் என்று கருதினோமானால், அது நாம் செய்யும் பெரும் பிழையாகிவிடும். பார்ப்பன பண்டார ஊடகங்கள் நீண்ட நாட்களாக நமக்கு எதிரான வேலைகளை செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. நாமோ இன்றும் பொதுக்கூட்டங்களையும், துண்டு பிரசுரங்களை மட்டும் பெரிதாக நம்புகிறோம்.
நாம் செய்ய வேண்டியது
முதலில் ஒரு குழு உருவாக்கி, (அந்த குழு ஒரு கிராமத்திற்கோ, மாவட்டத்திற்கோ, மாநிலத்திற்கோ, நாட்டிற்கோ உட்பட்டதாகவோ இல்லாமல்) மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்து, நாம் வாசிக்கும் செய்திகளை பரப்புவோம்.
அதோடு நில்லாமல்,
ஒவ்வொரு தோழரும் மாதம் ஒருமுறை தாம் அனுப்பிய செய்திகள் எத்தனை தனிநபர்களை சென்றடைந்தது,என்பதை குறித்துக் கொண்டால் நம்முடைய இந்த முயற்சி எந்தளவு வெற்றிகனியை ஈட்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
நாம் பகிர்ந்து கொள்ள வேண்டியவை
1) துண்டு பிரசுரங்களை 2) படக்காட்சிகளாக நம் கருத்துக்கு வலு சேர்ப்பவைகளை 3) குறுந்தகடுகளாக வெளிவரும் ஒளிவீச்சினை 4) மின்னஞ்சல் முகவரிகளை 5) தொடர்பு எண்களை 6) தம் இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களை கண்டிப்பாக ஒளி/ஒலிப்பதிவு செய்து குறுந்தகடுகளை
என முடிந்தளவு என்றில்லாமல், முழு தன்னார்வ முயற்வியோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த பகிர்வு வளமான, சமமான சமூக பகிர்வுக்கு வித்திடும் என நம்புகிறோம், இது விதை, உரமிடுதலும், நீருற்றுதலும், மரமாக வளர்த்தெடுப்பதும் உங்கள் கடமை.
உங்கள் ஆலோசனை ஏதும் இருந்தால்,
தொடர்புக்கு,
மகிழ்நன்.
+919769137032
தாராவி, மும்பை
நம்மை பண்படுத்துவோம்! சமூகம் பண்படவே!!
விழித்தெழு இளைஞர் இயக்கம்.
தீபாவளி தேவையா?
இத்தனை ஆண்டுகால அறிவியல் முன்னேற்றத்திற்கும் பின்னால் நான் ஏன் தீபாவளி கொண்டாட வேண்டும் என்றுகூட கேள்வி கேட்கத் தெரியாமல் நிற்கும் நம் இனச்சகோதரர்களின் அறிவை என்னவென்று சொல்வது? நம் இனச்சகோதரர்கள் ஈழத்தில் தினம், குண்டுகளுக்கு மடிந்து கொண்டிருக்கும் பொழுது ஆரிய, பார்ப்பன புழுகு பண்டிகை நம்க்கு தேவைதானா?
எவனோ கொலை செய்யப்பட்டதற்கு பலகாரம் செய்து கொண்டாடினால் நாம் மனிதர்கள், மனித நேயம் கொண்டவர்கள் என்று சொன்னால் உலகம் எள்ளி நகையாடாதா?எதிரி வீட்டில் இழவு விழுந்தால்கூட நகைப்பதும், மகிழ்ச்சி கொண்டாடுவதும் மனித பண்பும் ஆகுமா?
நாட்டில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வறுமையில் உளன்று கொண்டிருக்க அவர்களை மேலும் கடனாளியாக்கும் கொடிய வழக்கம் அல்லவா இந்த பண்டிகை கொண்டாடுவது.
பறவைகளுக்கு இடைஞ்சல் செய்யக்கூடாது என்பதற்காகவே தீபாவளி கொண்டாத ஊர்கள் இந்நாட்டில்தானே உள்ளன?
வறுமையின் காரணமாக ஆண்டுக்கணக்கில் தீபாவளி கொண்டாடாமல் இருக்கும் ஊர்களும் இந்நாட்டில்தானே இருக்கின்றன?
இப்பண்டிகை கொண்டாட்டத்தினால், ஏற்கனவே விலைவாசி ஏற்றம் என்ற கொடிய நச்சால் நசிந்து போயிருக்கும் எத்தனை எத்தனை பெற்றோர்கள் மீண்டும் ஒருமுறை தம் குழந்தைகளின் முன்னால் தலைகுனிய நேரிடுகிறது என்பதை நாம் ஏன் நம் எண்ணத்தில் நிறுத்துவதில்லை. இப்படி எதை பற்றியும் கவலைப்படாமல், பண்டிகை கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கும் உங்களை போன்றவர்கள் நாட்டில் ஊழல், வறுமை, கொலை, குண்டுவெடிப்பு என எதை பற்றியும் வருத்தப்படுவதற்கு அருகதை இருக்கிறதா? நமக்கு மட்டும் ஏன் வருத்தங்கள் வருகின்றது என்று வருந்தக்கூட யோக்கியதை இருக்கிறதா? என்று கொஞ்சம் உங்கள் உள்ளத்தை கேட்டு பதில் காணுங்கள்.
இதே தொனியில் மக்களுக்காவே சிந்தித்து வாழ்ந்த மாபெரும் தலைவர் பெரியாரின் கூற்றையும், அவருடைய பேரன்பையும் இந்த கட்டுரையில் காணுங்கள்.
ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ – சொல்லுவதானாலும்
தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? –
என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.
தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி(இன்றைய நிலையில் குறைந்தது 50 கோடிபேராவது கொண்டாடியிருப்பார்கள்) மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி(இன்றைய நிலையில் 100 கோடிக்கும்)ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த
10 கோடியும் அனாவசியமாய் – துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும் கரியுமாக ஆக்கிய
வகையிலும் செலவாகி இருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில்
வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழை மக்கள்கள்,
சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர் முதலிய வெறி தரும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்துபோயிருந்த-சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனதில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.
இவ்வளவு மாத்திரமல்ல; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய்த் தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்டமடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு? தீபாவளிக்கு முன் சில நாட்களும், தீபாவளிக்குப் பின் சில நாட்களும், தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுகளிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்கள் படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு? அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு?
தந்தைபெரியார் – ‘குடிஅரசு’, தலையங்கம், 22.11.1931
பெரியார்!
1.வாழ்நாள்:
————
ஆண்டுகள்:94(3 மாதங்கள், 7 நாள்கள்)
மாதங்கள் :1131
வாரங்கள் :4919
நாள்கள் :34,433
மணிகள் :8,26,375
நிமிடங்கள்:4,95,82,540
விநாடிகள்:297,49,52,400
2.சுற்றுப்பயணம்:
—————–
நாள்கள்:8200
வெளிநாடுகளில்:392
தொலைவு:8,20,000 மைல்கள்
ஒப்பீடு: பூமியின் சுற்றளவைப்போல் 33மடங்கு. பூமிக்கும் சந்திரனுக்கும்
உள்ள தொலைவைப்போல் 3 மடங்கு.
3.கருத்துரையும் நிகழ்ச்சிகளும்:
—————————-
கலந்துகொண்டநிகழ்ச்சிகள்:10,700
கருத்துரை ஆற்றிய காலம்:
————————-
மணிகள் :…….21,400
நாள்கணக்கில்:….891
நிமிடங்களில்:…..12,84,000
வினாடிகளில்:…..77,04,000
சிறப்புக்குறிப்பு:
————-
அத்தனைச் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு நாடவில் பதிவு செய்திருந்தால் அது
2 ஆண்டுகள், 5 மாதங்கள் 11 நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே
இருக்கும்.
இஸ்லாம் நேர் வழியா? போர் வழியா?
- இஸ்லாத்தைப் பற்றி, இது நேரான வழியை காட்டும் என்று(2-2) அல்லாஹ் கூறுகிறார்; இதற்கும் மேலாக, “நாம் விரும்பி இருந்தால் ஒவ்வொரு மனிதருக்கும், அவன் நேரான வழியில் செல்லக் கூடிய அறிவை கொடுத்திருப்போம் என்று(32-13) வேறு விளம்புகிறார்.
இதே அல்லாஹ்தான் யுத்தம் செய்வது உங்களுக்கு வெறுப்பாக இருந்தும் அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டிருக்கிறது. (2-216)
நிராகரிப்போரை சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள்(47-1)
அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள்(2-191)நீங்கள் அவர்கள் பிடரியின் மேல் வெட்டுங்கள், அவர்களை கணுகணுவாக துண்டித்து விடுங்கள். (8-12)
கலகம் நீங்கி மார்க்கம் அல்லாஹ்வுடையதாக உறுதிப்படும் வகையில் அவர்களை எதிர்த்து யுத்தம் புரியுங்கள்(8-49)
இணை வைப்போரை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள்; சிறை பிடியுங்கள்; முற்றுகை இடுங்கள்; பதுங்கி இருந்து பாயுங்கள்(9-5)
விரோதிகளின் இரத்ததை பூமிக்கு ஒட்டாத வரையில் சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தருமானதல்ல(8-67)
அல்லாஹ்வின் மார்க்கத்தை குறை கூறுவோருடன் போரிடுங்கள்(9-12)
நபியே நீர் விசுவாசிகளை யுத்தத்திற்கு தூண்டுவீராக(8-65)
விசுவாசிகளை யுத்த களத்தில் ஒழுங்கு படுத்துவீராக(3-121)
கனவில் கூட யுத்தம் செய்ய தூண்டுகிறார்(8-43)
வித்தைகள் செய்து யுத்தம் செய்யத் தைரியம் தருகிறார்.(3-13)
பத்ரி யுத்தகளத்தில் வானத்தில் இருந்து மூவாயிரம் மலக்குகளை அனுப்பி உதவி புரிகிறார்(3-124)
எத்தனையோ நபிமார்களும் நல்லடியார்களும் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிந்திருக்கின்றனர்.(3-146)
எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிகின்றார்களோ, எவர்கள் இவர்களுக்கு இடமளித்து உதவி புரிகின்றார்களோ அவர்கள்தான் உண்மையான விசுவாசிகள் (8-74)
தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தத்தம் செய்து அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிவோரே மகத்தான பெரும்பதவி பதவி பெற்றவர்கள், இத்தகையோர்தான் நிச்சயமாக சித்தியடைந்தோர்கள். அல்லாஹ் இவர்களுக்குள் சுவன்பதிகளை சித்தப்படுத்தி வைத்திருக்கிறான்(9-89)
யுத்தத்தை புறக்கணிப்பவர்களை, செப்பம் வேதனை, அழுகை, இழிவு வந்தடையும், அவர்கள் செல்லுமிடம் நரகம்தான்(81,81-87,90,95)
இன்னும் கேளுங்கள்.
“உங்களை பல பிரிவுகளாக்கி உங்களுக்குள் சிலர் சிலருடன் யுத்தம் புரியும்படி செய்யவும் அவன் செக்தியுடையவனாக இருக்கிறான்(6-65)ஆம்! “எங்கள் பாதங்களை யுத்தத்தில் நழுவாது, நீ உறுதிப் படுத்தி வைப்பாயாக. “ (3-147 )என்று மக்கள் இறைவனைப் பார்த்து பிரார்த்திக்க வேண்டுமாம்.
இதுதான் அல்லாஹ்வின் நேர்வழி, “ இறைவன் விரும்பி வழி நடத்தும் லட்சணம். இத்தகைய வேதங்களை வைத்துக் கொண்டுதான், நாம் உலக அமைதிக்கு தூது விடுகிறோம். நடு நிலையாளர்கள் என்று பெருமைப்பட்டு கொள்கிறோம். “ சமாதன சுகவாழ்வு பற்றி” வாய் கிழிய பேசி வருகிறோம். இடுப்பு வேட்டி நழுவிப்போவது தெரியாமல் தலையில் கிரீடம மாட்டிக் கொள்ள துடிக்கிறோம்.
குரானோ குரான் நூலிருந்து( பக்கம் 8-10)
“நாத்திக மய்யம்”
36F வாட்டர் டாங்கு சமீபம்,நாகர்கோயில்-629001
-
Archives
- October 2009 (1)
- September 2009 (11)
- August 2009 (4)
- July 2009 (2)
- June 2009 (1)
- May 2009 (1)
- April 2009 (3)
- March 2009 (10)
- February 2009 (1)
- January 2009 (7)
- December 2008 (3)
- November 2008 (20)
-
Categories
- அ மார்க்ஸ்
- அண்ணா
- அப்பா
- அமீர்
- அம்பேத்கர்
- அல்லா
- இந்தியா
- இந்து மதம்
- இனப்படுகொலை
- இனவெறி
- இலங்கை
- இழிவு
- இஸ்லாம்
- ஈழம்
- உலகத்தமிழ்
- எண்ணம்
- எம்.ஜி.ஆர்
- கடவுள்
- கடவுள் கற்பனை
- கம்யூனிசம்
- கருணாநிதி
- கர்த்தர்
- கலைஞர்
- கவிஞர்
- கவிதை
- காங்கிரஸ்
- காசுமீர்
- காதல்
- கிருத்துவம்
- கீற்று
- குடியரசு
- குண்டு வெடிப்பு
- சட்டக்கல்லூரி
- சாதி
- சிரிப்பு
- சீமான்
- சு சாமி
- சே
- ஜெயலலிதா
- டக்ளஸ் தேவானந்தா
- தமிழ்
- திருமணம்
- திருமா
- தீபாவளி
- தீவிரவாதம்
- நகைச்சுவை
- நையாண்டி
- பக்தி
- பன்றி காய்ச்சல்
- பாடல்
- பாரதிதாசன்
- பார்ப்பானியம்
- பிரபாகரன்
- புதிய ஜனநாயகம்
- புலிகள்
- பெரியார்
- போர் நிறுத்தம்
- மகிழ்நன்
- மத(ல)ம்
- மதம்
- மனிதம்
- மரணம்
- மாநாடு
- மாவீரர்கள்
- மிரட்டல்
- மூடநம்பிக்கை
- மொழி
- ரஜினி
- ரா(RAW)
- ராஜபக்சே
- ராஜிவ்
- ராமேஸ்வரம்
- லொள்ளு சபா
- விடுதலை
- விழித்தெழு
- Periyar
- Uncategorized
-
RSS
Entries RSS
Comments RSS