நியுயார்க்கிலிருந்து மிரட்டல்
உலகத்தமிழ் மாநாட்டிற்கு நியுயார்க் தமிழ்ச்சங்கம் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், தங்களுடைய கருத்தை மின்னஞ்சல்(nytamilsangham@gmail.com) மூலமாகவோ, தொலைப்பேசி((718)-969-1310)) மூலமாகவோ கருத்தை பதிவு செய்யுமாறு மின்னஞ்சல் ஒன்று எனக்கு வந்தது.
கூடவே இந்த இணைப்பும் சேர்ந்தே வந்தது.
http://www.facebook.com/n/?inbox/readmessage.php&t=1144658613759&mid=124459eG26ac0379G2a26b64G0
நானும் என்னுடைய மின்னஞ்சல் முகவரியிலிருந்து அந்த மின்னஞ்சல் முகவரிக்கும் கீழ்க்கண்டவாறு செப்.23 ஆம் தேதி
உங்களின் உலகத்தமிழ் மாநாட்டிற்கான ஆதரவுக்கு நன்றி………..
இப்படியே மாநாடு நடத்தி தமிழர்களுக்கு இருக்கும் மீதி உணர்வுகளையும் அழித்து விடுங்கள்….
உங்கள் வரலாற்று துரோகங்களுக்கு உளப்பூர்வமான நன்றி
—
அன்பும் ,பகுத்தறிவுடனும்.
மகிழ்நன்.
+919769137032
தாராவி, மும்பை
http://periyaryouth.blogspot.com
https://makizhnan.wordpress.com
http://kayalmakizhnan.blogspot.com
http://scientifictamil.blogspot.com
http://vizhithezhuiyakkam.blogspot.com
நேற்று அதிகாலை செப்.25’09 ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி காலை 7:32 மணிக்கு +6146545155 என்ற எண்ணிலிருந்து 06:58 விநாடிகள் ஒரே மிரட்டல்.
சொற்கள் அத்தனையும் முழுமையாக நினைவிலில்லை,ஏனென்றால் நான் அதை ஒரு பொருட்டாக மதிக்க வில்லை. ஆனால், ஒருச்சில நினைவில் இருக்கின்றன….அவற்றை தோழர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
“சைபர் கிரைமில் உள்ளே தள்ளிடுவேன்.”
“மும்பை கமிசனரை எனக்கு தெரியும்”
“புலி ஆதரவாளர்னு முத்திரை குத்திடுவேன்.”
“அஞ்சு வருஷம் உள்ளே தள்ளிடுவேன்.”
“உன்னை காப்பாத்த பெரியாரும் வரமாட்டார், வீரமணியும் வரமாட்டார்.”
“கருணாநிதி மேல அவ்வளவு கோபம் இருந்தால், குண்ட கட்டிக்கிட்டு விழுந்து அவரை கொல்ல வேண்டியதுதானே.”
“பார்ப்பான், பார்ப்பான்னு திட்டி எழுதிறியே உங்க ஆட்கள்தானே ஆட்சியிலே இருக்கிறாங்க, ஏன் இலங்கை மக்களை காப்பாத்த முடியலை.”
இவ்வளவையும் கேட்டுவிட்டு நான் கூறியதை…
“ உங்கள் கோபம் தணிவதற்காகத்தான் இவ்வளவும் கேட்டுக் கொண்டேன், உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள். நான் வீரமணி ஆதரவாளர்னு யார் சொன்னா….?”
எவ்வளவு நகைச்சுவை பார்த்தீர்களா?பார்ப்பான்னு நான் என்றோ திட்டி எழுதியதை நினைவில் வைத்து, பார்ப்பான் என்றே குறிப்பிடாது எழுதிய மின்னஞ்சலில் கிடைத்த எண்ணில் தொடர்பு கொண்டு மிரட்டுவது என்ன துணிவு, அறிவுடமை? பார்ப்பனீயத்தை கடைப்பிடிக்காதவனுக்கு பார்ப்பான் என்ற சொல் ஏன் குத்தி குடைய வேண்டும். பார்ப்பனீயத்தை அப்படித்தான் கடைபிடிப்பேன் என்றால் , நானும் அப்படித்தான் இன்னும் உறுதியோடு பார்ப்பான் என்றே எழுதுவேன். பார்ப்பனீயம் வீழும் வரை எழுதுவேன், களமாடுவேன்.
அதோடு புலி ஆதரவாளர் என்று முத்திரை குத்தி உள்ளே தள்ளி விடுவானாம், நான் புலி ஆதரவாளர் என்று இவருக்கு எப்படி தெரியும், நான் ஈழத்தமிழ் மக்களை ஆதரிக்கிறேன், அவர்கள் புலிகளை ஆதரித்தால் நான் என்ன செய்வது. A=B=C மாதிரி ஆகின்றது, நான் என் செய்வது.
எம் சகோதரர்கள் தானாகவா ஆயுதமேந்த தொடங்கினார்களா என்ன ? ஆயுதமேந்த வைக்கப்பட்டார்கள், சிங்கள இன வெறியால் ஆயுதமேந்த வைக்கப்பட்டார்கள்.என் சகோதரர்கள் சொந்த நாட்டில் உரிமையோடு மகிழ்ச்சியோடு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்காகத்தான் ஆயுதமேந்தினார்கள். தம் வாழ்வின் அமைதிக்காகத்தான் ஆயுமேந்தினார்கள். புலிகள் தவறிழைத்திருக்கலாம் ஆனால் அதை சுட்டிக்காட்ட இந்திய வல்லாதிக்கத்திற்கு தகுதி கிடையாது.
இன்னும் குறிப்பாக எந்த பார்ப்பன பண்டாரத்தின் வழித்தோன்றல்களுக்கும் தகுதி கிடையாது. பார்ப்பன வழித்தோன்றல்கள் தங்கள் முன்னோர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது செய்த கொடுமைகளை வரலாற்றின் பக்கங்களில் புரட்டி பார்த்து தெரிந்து கொண்டால் தாங்கள் செய்த பிழையின் தன்மையும் கணமும் புரிய வரும். இன்றும் இடஒதுக்கீட்டினை தங்களின் முன்னோர்கள் செய்த தவற்றை திருத்தி கொள்ளும் வாய்ப்பாக பார்க்காமல் இடஒதுக்கீட்டை பார்ப்பன பண்டாரங்கள் புலிகளை பற்றியோ ஈழத்தை பற்றியோ விமர்சிக்க தகுதியற்றவர்கள்…
புலிகளின் சகோதரர்கள், ஈழத்து உறவுகள் விமர்சிக்கட்டும் அவர்களுக்கு உரிமையிருக்கிறது…தின்று கொழுத்த கூட்டம் கண்டிப்பாக விமர்சிக்க கூடாது
இங்கு ஆட்சி செய்பவன் எல்லாம் ஊரை அடித்து உலையில் போடும் கொள்ளைக்காரர்கள். இவர்கள் தாம் மடிந்தாலும் திருந்த போவதில்லை. அப்படியிருக்க புலிகளை மட்டுமல்ல, சாக்கடையில் ஓடும் எலியை கூட இவர்கள் விமர்சித்தால் பொறுத்துக் கொள்ளாது.
எம் சகோதரர்களை நாங்கள் விமர்சிப்போம், அவர்களிடம் பிழைகள் இருந்தால் நாங்கள் திருத்துவோம், முடிந்தால் மென்மையாக, இல்லையென்றால் உரிமையோடு வன்மையாக சொல்வோம். எங்களுக்கு எவனும் கற்றுத்தர தேவையில்லை. மிரட்டுபுவர்கள் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக இருக்கும் சு………..சாமியையும், சோ…….சாமியையும் மிரட்டட்டும்….
நாங்கள் பெரியார் விதைத்த விதைகள், இம்மண்ணுக்காக மக்களுக்காக போராட களம் வந்து விட்டோம்,. இந்த சிறு பிள்ளைத்தனமாக அழுமூஞ்சி மிரட்டல்களுக்கு அடிபணியமாட்டோம். மாறாக, மிரட்டல்கள் எங்களை கூர்தீட்டும். எங்களை பொருத்தவரை நாங்கள் மனிதர்கள் புலிகள் இல்லை, தமிழர்களுக்காக ஈழத்தில் தீரத்தோடு போராடிய இயக்கங்களுள் முதன்மையான இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கம். அந்த இயக்கதில் மனிதர்கள் இருந்தார்கள், தங்களுடைய வாழ்வை தியாகம் செய்து தம் மண்ணுக்காக போராடினார்கள்.
“முதலில் விமர்சிக்கப்பட வேண்டியவன் சிங்களவன், பின்னர்தான் புலிகள். அடித்தவனுக்கு அடிவாங்கியவனுக்கு அடிப்படை வேறுபாடு உண்டல்லவா?”
சேகுவேரா கூறியது போல “ உலகத்தில் எங்கு அநீதி நிகழ்ந்தாலும், என் உள்ளம் துடிக்கும்,ஏனென்றால் நான் சே வின் தோழன்.”
சிறை என்னை நான்கு சுவற்றுக்குள் கைது செய்யலாம், வரலாறு என்னை விடுதலை செய்யும்(பிடல் காஸ்ட்ரோ), என் கருத்தை விடுதலை செய்யும்.
புலிகளை ஆதரிக்கிறேனா? என்றால் ஆதரிக்கவில்லை, பாதுகாக்க வில்லை என்றால்தான் அது குற்றம். ஏனென்றால், அது இந்தியாவின் தேசிய விலங்கு.
எழுத்துப் பிழைகள் இருக்கலாம், இருந்தால் மன்னிக்கவும் அவசரத்தில்எழுதியது
கொலை வாளினை எடடா! தமிழா!
மையத்தில் பேராய காங்கிரசு கட்சியின் ஆட்சி, மாநிலத்தில் பெரியாரின் கொள்கைகளுக்கு காயடிக்கும், மக்களை தேர்ந்த ஏமாளிகளாக்கும் திமுகவின் ஆட்சி. மக்களுக்கு இலவசங்களை கொடுத்து, இனத்தை காட்டிக் கொடுத்து, வடநாட்டு பனியாக்களிடம் தமிழனின் வாழ்வுரிமையை பறித்து கொடுத்து, லஞ்சத்தை கூட்டிக்கொடுக்கும் கூட்டத்திடம் இனமானத்தை விட்டுக்கொடுத்து………….கொலைக்கார காங்கிரசின் கையிடம் கள்ள மௌனத்தோடு கள்ள உறவு கொண்டு மீண்டும் வருகிறது அதே கூட்டம், ஒட்டுச்சேர்க்க…………
தமிழர்கள் முட்டாள்கள் ரொம்ப நல்லவர்கள்,எவ்வளவு அடித்தாலும் வலிக்காதது போல நடிப்பார்கள்………என்ற ரீதியில் உலகத் தமிழ் மாநாடு…..இன்றைய சூழ்நிலையில் அந்த மாநாட்டை நிறுத்த முடியாவிட்டாலும்……தோழர்களே உங்கள் கோபத்தை தணித்து கொள்ளாதீர்கள்….பாவேந்தனின் வரிகளில் இருக்கும் செஞ்சினத்தை சிந்தைக்கு ஏற்றுங்கள். நாளை நம் நாள் என்று கனியும் வரை இளைஞர்களிடம் உங்கள் நியாயமான சினத்தை பரப்புங்கள்………..
வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?
உலகாள உனது தாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒரு தாமதம் உடனே
விழி தமிழா!
கலையேவளர்! தொழில் மேவிடு!
கவிதைபுணை தமிழா!
கடலேநிகர் படை சேர்கடு
விடநேர்கரு விகள் சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நீதிநூல்விளை! உயிர் நூல் உரை
நிசநூல் மிக வரைவாய்!
அலைமாகடல் நிலம் வானிலும்
அணி மாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா!
தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஜனநாயகம்
எனவே முரசரைவாய்!
இலையே உண விலையே கதி
இலையே எனும் எளிமை
இனிமேலிலை எனவே முர
சறைவாய் முரசறைவாய்!
கலைஞரின் துதிபாடி கவிஞர்களே இந்த கவிஞனையும் கொஞ்சம் படித்து பாருங்கள்
சோவியத்தில் வாழ்ந்த பாரதிதாசன்
தமிழகத்தில் எப்படி ஒரு புரட்சி கவிஞன் பாரதிதாசன் தோன்றித் தமிழ்தேச பற்றை ஊட்டினானோ, அது போல் ருசியப்ப்பெரிய நாட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்த தாஜிக்கிஸ்தான் பகுதியில் அவார் என்னும் கிளைமொழியின் பெருமையைப் பாடிய பாவலன்தான் ரசூல் கம்ஸா தோவ்
அவன் ருஷ்ய தேசியம் பாடவில்லை. அவன் தன் தாய்மண் பற்றினை ஆவேசம் மிகுந்த சொற்களைக் கொண்டு கவிக்கனலை தோற்றுவித்தான். அவன் தன் தாய்நாட்டுக்காக பாடியதால் ருஷ்ய தேசியம் அவனை வெறுக்கவில்லை, மாறாக அவனை புகழ்ந்தது, அரசே அவனது வெளியீடுகளை வெளியிட்டது. அவனை வெறும் கவிஞனாக மட்டும் கருதாது. தாஜிக்கிஸ்தான் அரசாங்கம் நிர்வாகத்தில் பங்கு கொள்ள வைத்தது. தாஜிக்கிஸ்தான் – இந்தியா, சினா போன்ற கிழக்கத்திய பண்பாட்டுடன் தொடர்பு கொண்டது. இம்மாநிலத்தில் (அல்ல நாட்டில்) பல மொழிகளில் வழங்கி வந்தன. அவற்றுள் ஒன்றே அவார் மொழி! அந்த மொழிக்கு உரிமையவனே ரசூல் காம்தோவ்.
அவன் எழுதுகிறான்….
ஓ..என் அருமை மிகு அவார் மொழியே!
நான் வாழ்வுக்கும் சாவுக்கும்
இடையில் தொங்கி திணறும்போது
உலகத்து மருந்துகள்
என்னை காப்பாற்றாது!
உலக மருத்துவரும் காப்பாற்ற மாட்டார்கள்!
ஆனால், அவார் மொழியே!
உன் இனிமை சொல்லே
என்னை காப்பாற்றும்!
அவன் மேலும் தொடர்கிறான்; பாடுகிறான்;
உலகின் பிற மொழிகளுக்கு
எத்தனையோ சிறப்புகள் இருக்கலாம்!
ஆனால்-
அவைகளில் நான் வாய்விட்டுப் பாடமுடியாது!
எம்மொழி வீழும் நாள், நாளை என்றால்,
இன்றே சாவு எனக்கு வரட்டும்!
பின்னர் சாவு அங்கே போகட்டும்!
பாவேந்தர் பாரதிதாசன் ‘எமை நத்துவாய் என எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்! தமிழை பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்.என்று வஞ்சினம் கூறியதைப் போல், ரசூல் கூறுகிறான்.
சுதந்திர தாஜிக்கிஸ்தானே!எழில் மலர்கள்
பூத்துக் குலுங்கும் நாடே!
நீ என் முகம்!
எப்பகைவனும் உன் மீது கைவைக்க விடமாட்டேன்.
உன்னை இழிவாக வசைபாடினும்
நான் தாங்கிக் கொள்வேன்.
எனது தாஜிக்கிஸ்தானை ஒரு இழி சொல் தொட விடமாட்டேன்.
நீ என் காதலி!
நீ என் சபதம்!
நீயே என் வழிபாட்டு குரியை!
உன் இறந்த, நிகழும் எதிர்காலங்கள் எல்லாம்
என்னோடே!
அதை யாரும் பிரிக்கவியலாது!
பாவேந்தனை போல் மொழி, நாடு பற்றிக் கோபுரத்தில் ஏறிக் குரல் கொடுத்தவன் ரசூல். அவன் தன் இனம் பற்றிப் பாடுகிறான்.
நான் அவார் இனத்தவன்!
நான் கண் திறந்தேன்!
அவார் மக்களைப் பார்த்தேன்
அவார் பேசும் மொழியைக் கேட்டேன்!
என் தாய் அவார் மொழித் தாலாட்டுப்
பாடினார்!
பார்த்தும், கேட்டும், நுகர்ந்ததும்
அவார் அல்லவா? இது என் சொத்து!
ஆம், நான் ஒரு அவார்?
உணர்ச்சிப் பிழம்பாய் வாழ்ந்த ரசூல் தன் தாய்மொழி விரிந்து பரவவில்லையே என்று கவலை கொள்ளவில்லை. இலக்கண, இலக்கியங்கள் நிறைய இல்லையே என்று வருந்தவில்லை.
எனது இதயம் எப்பொழுதும்
என் மொழி பற்றியே எண்ணுகிறது!
பொதுச்சட்ட மன்றில்
(பாராளுமன்றத்தில் தமிழுக்கு இடமில்லாதது போல முழங்கும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் போல)….அதுவே என் உயர்மொழி!என்கிறான்
பெல்ஜியத்தில் நடந்த உலகக் கவிஞர்கள் மாநாட்டிற்கு ரசூல் செல்கிறார். அங்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்துள்ள கவிஞர்கள், தங்கள் தங்கள் பண்பாடு பற்றிக் கூறினர். ஒரே ஒரு கவிஞன் கனவான்களை! நீங்கள் பல தேசங்களிலிருந்து வருகிறீர்கள். நீங்கள் பல மக்களின் பிரதிநிதிகள்! ஆனால் நான் எந்நாட்டின் பிரதிநிதி அல்லன். நான் கவிதையின் பிரதிநிதி. எல்லா நாடுகளின் பிரதிநிதி! நானே கவிதை…என்று கூறிய கவிஞனைக் கட்டித் தழுவினார்கள்! ரசூலைப் பாராட்டியப் பெருமைப்படுத்தினர். தனது சொந்த மண்ணிற்குப் பிரதிநிதியாக முடியாதவன், இந்தப் பூமிக்குப் பிரதிநிதியாக முடியாது என்றான் கம்சதோவ்!
அவன் மேலும் கூறுகிறான்,
ஒருவன் நாட்டில் குடியேறி
அங்குள்ள பெண்ணை மணந்து வாழலாம்!
தாய் மண்ணில் தாய் இருக்கலாம்!
மனைவியின் தாய் தாயாவாளா?
தாஜிக்கிஸ்தான் – அவார் நாட்டில் மொழிப்பற்று எப்படி ஓங்கி வளர்ந்துள்ளது,என்பதை ரசூல் ஒரு நிகழ்ச்சியால் விவரிக்கிறார் பாருங்கள்.
ரசூல் வெளிநாடு சென்றிருந்தார். அங்கே தன் அவார் இனத்து நண்பன் ஒருவனை அவனது இல்லத்தில் சந்திக்கச் சென்றார். பிறகு நாடு திரும்புகிறார். ரசூலைப் பார்க்கவும். தன் மகனின் நலம் விசாரிக்கவும் பெற்ற தாய் வருகிறார்
ரசூல் கூறினார். அவனது வளமிக்க வாழ்வு பற்றியும், செழுமை மிக்க தோற்றம் பற்றியும்,
அந்த தாய் ‘ரசூல் நிறுத்து’என்றாள்.
‘ஏன்?’என்றாள் ரசூல்.
அவார் இனத்தவனாகிய என் மகன், உன்னுடன் அவார் மொழியில் பேசினானா? என்று கேட்டாள்.
‘இல்லை, வேறு மொழியில்!’என்றான்.
உடனே அந்தத்தாய், ‘நான் பெற்று வளர்த்த மகன், நான் சொல்லித் தந்த அவார் மொழியை மறக்க முடியாது. ஆகவெ என் மகனாக அவன் இருக்க முடியாது,’என்று கூறி விட்டுக் கறுப்புத் துணியால் முக்காடிட்டு, ‘ரசூல்! என் மகன் இறந்து வெகு நாளாயிற்று’என்றாள்.
இத்தகைய தாய்மார்களே, புறநானாற்றுத் தாயர் ஆவார்.
நினைத்துப் பாருங்கள்.
தமிழகத் தருதலைகள் பல வெளிநாடுகளில் குடியேறி, நாகரீகத் திமிரால் தமிழையே மறந்தும், பேசுவதற்கு நாணப்பட்டும் இருப்பதை.
அவார்த் தாயின் உணர்வை நம் தாயர்கள் பெறுக!!
அதோடு உணர்வுள்ள நல்ல படைப்பாளிகளையும் பிள்ளைகளையும் பெறுக!!!
தமிழினத்திற்கு ஒவ்வாதது பக்தி…………..தேவை நமக்கு புத்தி………….
தோழர்களே! ஈழ மக்களின் அவலத்தில் உள்ளம் மிகுந்த ரணமாகியிருக்கிறது. இந்த அவலமான வருத்தமான தருணத்தில் நம் மக்கள் அனைவருமே உண்மையான அக்கறையோடு இருக்கிறார்களா?என்பது சுய ஆய்வுக்குரியது. கொஞ்சம் இந்த இணைப்புகளை பார்க்கவும்.
வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா
சுவிஸில் உள்ள இந்து ஆலயங்களில் தாயகமக்கள் அமைதி வேண்டி அமைதிப் பிராத்தனை
வானில் அம்மன் தோன்றும் அரிய புகைப்படம்
3 லட்சம் மக்களை முள்வேலி கம்பிக்குள் அடைத்து வைத்திருக்கும் சூழலில் பிரார்த்தனை போன்ற ஒன்றுக்கும் உதவாத காரியங்களில் ஈடுபட்டு கொண்டிருந்தால் வரலாறு நம்மை மன்னிக்குமா?
கடைசி நாளில் 10,000 மேற்பட்ட தமிழ்மக்கள் சாக கிடந்த வேளையில் வந்து காப்பாதாத கடவுளை இன்னும் நம்பித்தான் ஆக வேண்டுமா?
மாதாவாகட்டும்,ஏசுவாகட்டும், முருகனாகட்டும், அல்லாவாகட்டும் எவனும் தமிழனத்தின் இக்கட்டான சூழலில் வரவில்லையே………..இன்னும் எதற்கு இந்த பக்தி போதை….நம்பி கெட்டது போதாதா?
பக்தி என்னும் மூடத்தன்த்திற்கு மகுடம் போல, சாதி என்னும் கொடூரம் நம் உள்ளங்களில் உள்ளதே?
ஈழத்தமிழருக்காய் குரல் கொடுக்கும் எத்தனை தமிழர்கள் தங்கள் வீட்டில், வாழ்க்கையில் சாதி பார்க்காமல் இருக்கிறார்கள்…..வீட்டில் சாதியை பின்பற்றுபவன் வெளியில் வந்து தமிழன் என்று கத்தினால் கொஞ்சம் நெருடலாகத்தானே இருக்கிறது….
ஈழத்தமிழர்களும் இதில் விதிவிலக்கல்ல, இவ்வளவு ரணங்கள், வலிகள் இருந்தும் சாதியை பின்பற்றுவதில், பாதுகாப்பதில் அவ்வளவு ஆர்வத்தோடு திருமணத்திற்கு துணைதேடும் நிலையில் நாமெல்லாம் தமிழர்கள் என்பது கொஞ்சம் போலியாக தோன்றவில்லையா…..?
தமிழ் பேசுவதால் மட்டும் நாம் தமிழர்களாகிவிட முடியாது. சாதி, மதம் பார்க்காமல், பின்பற்றாமல் இருந்தால்தான் நாம் தமிழர்கள்…கடவுள் என்ற மூடநம்பிக்கையிலிருந்து விடுபட்டால்தான் நாம் மனிதர்கள்……….
நாம் தமிழராக சாதியை விடுங்கள், மதத்தை துரத்தி அடியுங்கள்…….தமிழில் உரிமை கோரும் மனிதராக உயருங்கள்……
தமிழர்களே திருந்துங்கள்…பெரியாரின் பாதைக்கு திரும்புங்கள்…
பகுத்தறிவுப்பாதை தேர்ந்தெடுங்கள்…………..
தமிழினத்திற்கு ஒவ்வாதது பக்தி…………..தேவை நமக்கு புத்தி………….
ராஜீவ் காந்தியின் மரணமே தமிழ் மக்களின் விடுதலைப்போரை இரு தசாப்தங்களுக்கு காப்பாற்றியது
”சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பன எல்லாம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அர்த்தமற்ற சொற்பதங்களாக, யதார்த்த மெய்ந்நிலைக்குப் பொருந்தாத வார்த்தைப் பிரயோகங்களாக மாறிவிட்டன.
சமாதானச் சூழலில் நிகழ்த்தப்படும் மறைமுக யுத்தம், போர்நிறுத்த விதிகளுக்கு முரணாகத் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, சமரசப் பேச்சுக்களைப் பயன்படுத்திப் பின்னப்படும் சர்வதேச சதிவலைப் பின்னல் – இப்படியாக அமைதி முயற்சி திரிவுபடுத்தப்பட்டுத் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எமது மக்களுக்கு எல்லாவற்றிலுமே நம்பிக்கை இழந்துவிட்டது”.
மகிந்த பதவியேற்ற பின்னர் மோதல்கள் உக்கிரமடைந்த காலகட்டத்தில் நடைபெற்ற மாவீரர்தின உரையின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்ட வார்த்தைகள் மேல் உள்ளவை.
தொடர்ச்சியாக பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் அனைத்தும் இதனை தான் செய்துவந்தன. உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்களின் உரிமை போரை முற்றாக சிதைத்துவிட சிறீலங்கா அரசுகள் முனைந்து வந்தனவே தவிர தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதற்கு அவர்கள் முற்படவில்லை.
தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சா ஏறுக்கு மாறாக மேற்கொண்டுவரும் கருத்துக்களில் இருந்து இன்றும் நாம் அதனை உணரமுடிகின்றது. தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வையோ அல்லது அவர்களுக்கு சிறீலங்காவில் வாழும் உரிமைகளையோ சிங்கள தேசம் ஒரு போதும் வழங்கப்போவதில்லை என்பது தான் உண்மையானது.
இதனை உலகமும் தமிழ் மக்களின் ஆயுதப்போருக்கு எதிரான போக்கை கொண்டவர்களும் தற்போதும் உணரவில்லை என்றால் அதனை நாடகம் என்றே கொள்ள முடியும். தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என அரச தலைவராக பதவியேற்க முன்னர் பேசி வந்த முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்கா, யாழ்ப்பாணம் வந்து கேணல் கிட்டுவுடன் பேச்சுக்களை மேற்கொண்டு நட்புறவுடன் பழகிய அவரது கணவர் விஜய குமாரணதுங்கா ஆகியோரின் அரசியல் நாடகங்கள் சந்திரிகா அரச தலைவர் ஆனதும் காற்றில் பறந்துவிட்டன.
சிங்கள தேசத்தின் அடக்கி ஆட்சிபுரியும் மனப்பான்மைக்கு முன்னால் சிங்கள தேசத்தில் பதவிக்கு வரும் எந்த அரசுகளும் தப்பி பிழைத்தது கிடையாது. பெரும்பான்மை சிங்கள மக்களின் மனவோட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தியே சிங்கள அரசுகளும் தமதுபதவி சுகங்களை தக்கவைப்பதுண்டு. இது தான் கடந்த அறுபது வருடங்களாக நடைபெற்று வரும் சம்பவங்கள்.
1948 ஆம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரம்அடைந்த பின்னர் 1976 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக தோற்றம் பெறும் வரையிலும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக அகிம்சை வழியில் பல போராட்டங்களை «ம்றகொண்டு வந்திருந்தனர். ஏறத்தாள மூன்று தசாப்தங்கள் அகிம்சை வழியில் அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் தோல்வியடைந்த காரணத்தினால் தான் அது பின்னர் ஆயுதப்போராக உருவெடுத்தது.
ஆயுதப்போரும் பல வடிவங்களின் ஊடாக 1976 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை ஏறத்தாள மூன்று தசாப்தங்களுக்கு மேலாக (33 வருடங்கள்) பயணித்துள்ளது. இருந்த போதும் தற்போது நாம் மிகவும் நெருக்கடியான கட்டத்தில் நிற்கின்றோம். அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது தொடர்பாகவும் பல குழப்பங்கள் உள்ளன.
எமது போராட்ட வரலாற்றை பொறுத்தவரையில் முன்னைய மூன்று தசாப்தங்களை விட பின்னைய மூன்று தசாப்தங்களும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை பல வலிகளையும், இழப்புக்களையும் எமக்கு ஏற்படுத்தியிருந்தாலும், எமது இனத்தின் பிரச்சனைகளையும், வேதனைகளையும் உலகறியச்செய்த பெருமை தமிழ் மக்கள் வரித்துக்கொண்ட ஆயுதப்போருக்கு உண்டு.
‘ஆயிரம் மேடைப் பேச்சுக்களை விட ஒரு கெரில்லா தாக்குதல் மிகச்சிறந்த பிரச்சாரம்’ என்ற கியூபாவின் முன்னாள் விடுதலைப்போராட்ட வீரரும் அதிபருமான பிடல் கஸ்ரோவின் வார்த்தைகளின் யதார்த்தத்தை இந்த காலம் மீண்டும் ஒரு தடவை உலகிற்கு உணர்த்தியிருந்தது.
இந்தக் காலப்பகுதி சிங்கள தேசத்திற்கும் பெருமளவான இழப்புக்களையும், பொருளாதாரச் சீரழிவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. ஒரு இனத்தை அடக்கி ஆட்சிபுரிவதற்கு என்ன விலையை செலுத்த வேண்டும் என்ற யதார்த்தத்தையும் அவர்களுக்கு உணர்த்தியிருந்தது. அகிம்சை வழியில் போரிட்ட போது நாம் தான் இழப்புக்களை சந்தித்திருந்தோம் ஆனால் எமது ஆயுதப்போர் சிங்கள தேசத்திற்கும் இழப்புக்களினதும், வேதனைகளினதும் வலியை உணர்த்தியிருந்தது.
ஆனாலும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பூகோள அரசியல் நகர்வுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதில் சிறீலங்கா அரசுகள் அதிக முனைப்பை காட்டியிருந்தன. 1980 களில் ஏற்பட்டிருந்த மேற்குலகம் – சோவியத்து ஒன்றியம் என்ற முனைவாக்கத்?தை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது போல, 2009களில் ஏற்பட்டுள்ள சீனா – மேற்குலகம் என்ற இந்துசமுத்திர பிராந்திய முனைவாக்கத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்
களின் விடுதலைப் போரின் படை வலுவை மிகப்பெரும் படை வலுக்கொண்டு சிறீலங்கா அரசு முறியடித்துள்ளது.
ஆனால் கடந்த மூன்று தசாப்தங்களில் நடைபெற்ற போர்களில் சந்தித்த இழப்புக்களை விட பல மடங்கு அதிகமான இழப்புக்களை சிங்கள தேசம் சந்தித்திருந்தது என்பதும் உண்மை. வெற்றி பெறுபவர்களுக்கே வரலாறு சொந்தம் என்ற தத்துவத்திற்குள் சிங்களம் தனது இழப்புக்களை மறைத்துவிட்டது.
ஆனால் சிறீலங்காவை அனுசரித்து போவதன் மூலம் கூட தனது பிராந்தியத்தின் உறுதித்தன்மையை பேண
முடியாது என்பதை இந்தியா உணர்ந்து கொண்ட போதும் தமிழ் மக்களின் உரிமைப் போரை நயவஞ்சகமாக அழிக்கத் துணைபோனது தான் மிகவும் வேதனையானது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு முன்னரும் தனது படை வலு கொண்டு சின்னஞ் சிறிய ஒரு அமைப்பை இந்தியா முற்றாக துடைத்தளிக்க முற்பட்டிருந்தது. அவரின் மரணத்திற்கு பின்னரும் இந்தியா அதனையே மறுபடியும் மேற்கொள்ள முயன்றுள்ளது. ஆனால் 1987களில் இந்தியாவின் முயற்சிகளை விடுதலைப் புலிகளின் கெரில்லா போர்முறை உத்திகள் எவ்வாறு முறியடித்தனவோ அதனைபோலவே தற்போது இந்திய அரசின் முயற்சிகள் இடை நடுவில் தொங்கிபோய் உள்ளன.
அதாவது விடுதலைப் புலிகளின் மரபுவழியிலான படைக் கட்டுமானங்களை இந்திய – சிறீலங்கா படையினரால் முறியடிக்க முடிந்ததே தவிர உலகெங்கும் பரந்திருக்கும் தமிழ் மக்களின் விடுதலை வேட்கைகயையும், விடுதலைப் புலிகளின் வலையமைப்பையும் அவர்களால் முறியடிக்க முடியவில்லை.
ஒருவேளை 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் அவர் மீண்டும் பதவிக்கு வந்திருந்தால் 1992 ஆம் ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த வருடங்களிலோ தற்போது முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை போன்றதொரு மிகப்பெரும் படுகொலைகளுடன் விடுதலைப் புலிகளை இந்திய மீண்டும் ஒருதடவை அழிக்க முற்பட்டிருக்கலாம்.
அன்று அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அதனை எதிர்கொண்டு எமது விடுதலைப்போரை முன்னெடுக்க வேண்டிய முதிர்ச்சியும், வளர்ச்சியியும் புலம்பெயர் நாடுகளில் இருக்கவில்லை. எனவே தற்போதைய அழிவை விட மிகப்பெரும் பேரழிவை தமிழ் மக்களின் விடுதலைப்போர் அன்று சந்தித்திருக்கும்.
ஒரு வகையில் பார்த்தால் ராஜீவ் காந்தியின் மரணம் தமிழ் மக்களின் விடுதலைப்போரை 18 வருடங்கள் காப்பாற்றி உள்ளது என்றே கொள்ள முடியும். இந்த 18 வருடங்களில் தமிழ் மக்களின் போராட்டம் கண்ட வளர்ச்சிகள் அதிகம்.
மேலும் 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது உடனடியாகவே 25,000 இந்திய இராணுவ கொமோண்டோக்களை யாழ்நகரத்தில் தரையிறக்கி மிகப்பெரும் படுகொலை ஒன்றை நிகழத்தி பழிதீர்த்துக்கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ திட்டமிட்டிருந்தது.
அதற்கு ஏதுவாக 25,000 படையினரை திருவானந்தபுரம் விமானநிலையத்திற்கு கொண்டுவரும் ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் என்ன காரணமோ தெரியாது இறுதி நேரத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டிருந்தது. எனவே வட இந்தியர்களும், தென்இந்திய பார்பானியர்களும் ஈழத்தமிழ் மக்கள் மீதான படுகொலை உணர்வுகளில் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு எப்போதும் சலித்தவர்கள் அல்ல.
ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் அமைப்புக்களையும், பிரதிநிதிகளையும் அழித்துவிட முற்படும் இவர்கள் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதிலும் சிங்கள தேசத்திற்கு ஒப்பான போக்கையே கையாண்டு வருகின்றனர்.
2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட சமாதான காலத்தில் கூட விடுதலைப் புலிகள் சுயாட்சி அதிகாரத்திற்கான திட்டம் ( Interim self governing authority proposal) ஒன்றை முன்வைத்திருந்தனர். ஆனால் அன்றைய சிங்கள அரசு அதனை விவாதிக்க கூட முற்படாமல் குப்பை தொட்டியில் போட்டதுடன், அதற்கு எதிராக ஜே.வி.பி, ஜாதிக கெல உறுமய போன்ற பேரினவாத கட்சிகளை ஏவிவிட்டிருந்தது.
சுயாட்சிக்கான அதிகாரம் என்பது தனிநாட்டிற்கான முதற்படி என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் காலஞ்சென்ற கதிர்காமர் சிங்கள மக்களுக்கும், வெளி உலகிற்கும் போலியான எச்சரிக்கையையும் விடுத்திருந்தார். போர் நிறுத்தம் என்பது அரசியல் தீர்வை காண்பதற்கு மேற்கொள்ளப்படும் சமாதான பேச்சுக்களுக்கான ஒரு திறவுகோல் அதனை வீணாக இழத்தடிப்தை விடுத்து ஆக்கபூவமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது விடுதலைப் புலிகளின் குறிக்கோளாக இருந்தது.
விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட திர்வுத்திட்டமானது 1978 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத்திட்டங்களை ஒத்ததாகும். ஆனால் அவையாவும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.
மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை வழங்கக்கூடிய 13 ஆவது திருத்தச்சட்டத்தை கூட நிறைவேற்றுவதற்கு சிறீலங்கா அரசு முன்வரவில்லை. தமிழ் மக்களின் மீதான தனது படை நடவடிக்கையை நியாயப்படுத்த இந்திய அரசு 13 ஆவது திருத்த சட்டத்தை நிறைவேற்ற 1988 களில் முற்பட்டிருந்தது. அதன் ஓரங்கமாக வடக்கு – கிழக்கு இணைப்பையும் மேற்கொண்டிந்தது. ஆனால் அதனையும் தற்போதைய அரசு இல்லாது செய்துவிட்டது.
மீண்டும் 13 ஆவது திருத்த சட்டத்தையாவது நிறைவேற்ற வேண்டும் என தற்போது அமெரிக்காவும் குரல் கொடுத்துள்ளது. ஆனால் சிறீலங்கா அரசினை பொறுத்தவரையில் அது தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை கொடுப்பதற்கு எப்போதும் முன்வந்ததில்லை. தற்போது அவ்வாறனதாகவே அதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
தமிழ் மக்களின் பிரதேசங்களை முற்றுமுழுதாக இராணுவ நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதுடன், அவர்களின் பூகோள பாரம்பரியத்தையும், இன விகிதாசாரங்களையும் மாற்றியமைக்கும் திட்டங்களையும் அரசு மேற்கொண்டு வருகின்றது.
அண்மையில் சிறீலங்கா இராணுவத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும் அதனை தான் தெளிவுபடுத்தி நிற்கின்றன. மூன்று தடவை பதவி நீடிப்பு பெற்ற சிறீலங்காவின் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் இடத்திற்கு வவுனியா மாவட்ட கட்டளை தளபதியும், வன்னி படை நடவடிக்கையின் ஒருங்கிணைப்பு தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயசூரியா இந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என கடந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் ஏனெனில் பொதுவாக யாழ் மாவட்டம் அல்லது வவுனியாமாவட்ட கட்டளை தளபதிகளே இராணுவத்தளபதிகளாக நியமிக்கப்படுவதுண்டு. எனினும் ஜெயசூரியாவுக்கு சம நிலையில் இருந்த முன்னாள் யாழ்மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறீ வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக றியர் அட்மிரல் மோஹான் ஜெயவிக்ரமா நியமிக்கப்பட்டதும் நினைவுகொள்ளத்தக்கது. வடக்கு கிழக்கு மாகாணங்களை முற்று முழுதாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவந்துள்ள சிறீலங்கா அரசு அதன் நிர்வாகங்களையும் இராணுவமயப்படுத்தி வருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் மாவட்டங்களின் எல்லையில் உள்ள சிங்கள கிராமங்களை தமிழ் மாவட்டங்களுடன் இணைப்பதற்கும் சிறீலங்கா அரசு முற்பட்டு வருகின்றது. இதன் மூலம் அந்த மாகாணங்களில் உள்ள இனவிகிதாசாரத்தை மாற்றவும் முற்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் உரிமைப் போரை முற்றுமுழுதாக புதைத்துவிடுவதற்கு தனது வளங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி செயற்பட்டு வருகின்றது. இந்த வளங்களில் தமிழ் இனத்திற்கு எதிரான தமிழ் குழுக்களும், அமைப்புக்களும், கட்சிகளும் அடக்கம்.
வேல்ஸில் இருந்து அருஷ்
ஈழமுரசு (24.07.09)
இந்திய உளவு நிறுவனங்களின் சதி பற்றி கருணாநிதி-மீள்பிரசுரம்
“ரா” உளவு நிறுவனம் தான் இந்த குழப்பங்களை உருவாக்குகிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மாநில அரசுக்குமிடையே மோதலை உருவாக்குவதே “ரா”வின் நோக்கமாக இருக்கிறது, எனவே இதில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஈழத்தமிழ் குழுக்களிடையே கடந்த காலங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கியதற்கு “ரா” தான் காரணமாக இருந்தது. இப்போது அதே வேலையை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், இடையே செய்து கொண்டிருக்கிறது”
“ Sri Karunanithi, on 8th May 1990, on the floor of the assembly is reported to have accused the Research and Analysis Wing(RAW) of trying to create a rift between the Center and the State appealed to the Prime Minister to take appropriate action. He alleged that the RAW which was responsible in the past for creating Divisions among various Tamil Groups of Srilanka was doing the same between the Centre and the State”
(ஆதாரம்: ஜெயின் ஆணைய அறிக்கை)
என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார், தமிழகத்தின் முதல்வர் ஒருவராலேயே சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்து இது!
தமிழக முதல்வர் கலைஞர் கருணநிதி தெரிவித்த அச்சப்படி அதற்குபிறகுதான் தமிழ்நாட்டில் பத்நாபா படுகொலையும், சகோதர யுத்தங்களும் தொடர்ந்தன.
உளவு நிறுவனங்களின் பார்ப்பன சதித் திட்டம் உருவானது. இதற்கு தளம் அமைத்துத் தந்தது ‘ரா’ உளவு நிறுவனம் தான்!
உளவு நிறுவன மிரட்டலுக்கு திமுக பணிய மறுத்தது. உடனே ஜெயலலிதா, சுப்ரமணியசாமி,எம்.கே.நாராயணன் என்று உளவு நிறுவன பார்ப்பன சக்திகள் தீட்டிய திட்டத்தின்படி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
அதே உளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் 2007-லும் தனது திருவிளையாடல்களை துவக்கி இருக்கிறது.
உளவு நிறுவனங்களோடு கடந்த காலங்களில் கசப்பான அனுபவங்களை சந்தித்து, அவர்களின் சூழ்ச்சி பொறிகளை தெளிவாக புரிந்து வைத்துள்ள திமுக ஆட்சி, பொய்மை பிரச்சாரத்துக்கு துணை போய் விடக்கூடாதுஎன்பதே நமது வேண்டுகோள்.
நன்றி :
ஈழப்பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி(பக்கம்:64-65)
ஆசிரியர்: விடுதலை க.இராசேந்திரன்.
வெளியீடு:பெரியார் திராவிடர் கழகம்
முதல் பதிப்பு:௨00௭(2007)
இந்த நேரத்தில் கருணாநிதிக்கு நினைவுப்படுத்தபட வேண்டிய (பாவம் மறந்து போயிருப்பார்).
சரி அவருக்குதன் உடல் நிலை சரியில்லையே, அவருடைய மகன் அழகிரியும், மு.க.ஸ்டாலினும் படிக்கட்டும், அல்லது இது நூல்களை தகவல் உள்ள தாள்களை தங்களுடைய பிறந்த நாள் கொண்டாட்டதில் கேக் பரிமாறட்டும்.
ஆதலால், மீள்பிரசுரம்
நீங்களெல்லாம் மனிதர்களா? உங்கள் சகோதரன் படும் துயரத்தை கேட்டும் அமைதியாக இருக்கும் நீங்கள் மனிதர்களாக இருக்க முடியுமா?
ஆனால் மனிதனின் முகவரி சிரிப்பில் இல்லை கண்ணீரில் இருக்கிறது.“
சக மனிதனின் துன்பத்திற்காகக் கண்ணீர் வடிப்பவனே தன்னை மனிதன் என்று நிரூபித்துக் கொள்கிறான்.
சக மனிதரின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்வது சமூகப் பண்பாடு.
இன்பத்தில் பங்கு கொள்ள எல்லோரும் வருவார்கள் ஏனெனில் அது பயனுள்ளது.
துன்பத்தில் பங்கு கொள்வதுதான் உயர்ந்த பண்பாடு.
புன்னகையில் பங்கு கொள்ள வருபனல்லன், கண்ணீரை பகிர்ந்துகொள்ள வருபவனே உண்மையான நண்பன்.
இந்த உலகம் வாழ்வது விண் மழையால் அல்ல, கண் மழையால்!
மனிதனுக்கு மட்டும்தான் சிரிக்கத் தெரியும். உண்மைதான்.
ஆனால், சக மனிதனின் துயரம் கண்டு சிலர் சிரிக்கிறார்களே அவர்களை மனிதர்கள் என்று சொல்ல முடியுமா?
துன்பத்திலும் பணக்கார துன்பம்,ஏழைத் துன்பம் என்று பேதம் பாராட்டுகிறார்களே!
பணக்காரன் துன்பத்தில் பங்கு கொள்ள வரும் ஏழையின் துன்பத்தை ஏளனம் செய்கிறதே!(வலிந்து ஆதரவு தரும் இந்தியம் பேசும் பொறுக்கி நாய்கள் தமிழர்களை வஞ்சிக்கிறார்களே- மகிழ்நன்)
இந்த மனிதர்கள் எவ்வளவு கொடூரனமானவர்கள்! பிறர் அழுவதை பார்த்து சிரிப்பவர்கள், தாம் சிரிப்பதற்காக பிறரை அழ வைப்பவர்கள், மற்றவர்கள் கண்ணீரை வார்த்து தங்கள் புன்னகைகளை வளர்ப்பவர்கள், இப்படியும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்.
மலர் தோட்டத்து பூக்களையும்…பனித்துளியையும் பார்த்த கவிஞர் அர்ஷ் மல்ஸியானி இப்படித்தான் எண்ணினார்,
பூக்களும் பனித்துளியும்….புன்னகை கண்ணீரும்…. மலர்த் தோட்டத்தில் மனித நாடகம் அரங்கேறிக் கொண்டிருந்தது.
பனித்துளியின் துக்கத்தை விசாரிக்கப்
பூவனத்தில் யார் இருக்கிறார்கள்?
பாவம்! இந்த ஏழை அழுதால்
– அப்துல் ரகுமானின்
மகரந்த சிறகு நூலிருந்து
தமிழர்களே! உங்களை நீங்களே செருப்பால் அடித்துக் கொள்ளுங்கள்
தமிழர்களே! உங்களை நீங்களே செருப்பால் அடித்துக் கொள்ளுங்கள்
பாலஸ்தீனம் மீதான தாக்குதல் இந்தியா கண்டிக்க வேண்டும்: ஜெயலலிதா
என்று தேர்தல் பரபரப்புக்கு நடுவிலும் அறிக்கை விடும் ஜெயலலிதா என்ற பாப்பாத்தி ஈழத்தமிழர்கள் அங்கு கொன்றொழிக்கப்பட கண்ட மனம் பதைபதைக்க எந்த ஒரு அறிக்கையும் வெளியடக் காணோமே.
என்ன நெஞ்சழுத்தம், என்ன பார்ப்பன கொழுப்பு. நம்மை அறிவற்றவர்கள் என்று முடிவு கட்டிவிட்டுதான் நம்மிடம் ஓட்டு பொறுக்க வருகிறார்கள். எச்சரிக்கை!!!!
பாலஸ்தீனத்திற்கு ஏன் குரல் கொடுத்தாய்? என்பதல்ல நம் கேள்வி, தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடாக உன் நிலைப்பாடு ஏன் இல்லை? என்பதே நம் ஆதங்கம்.
காலம், காலமாக ஆபாசங்களையும், பொய்களையும் புராணங்கள், கடவுளர் கதைகள் என்று கூறி நம்மை நம்ப வைத்து மடையர்களாக்கி, இன்னும் நம் மக்கள் மடையர்களாக இருக்கும் திமிரில்தானே இந்த கும்பல்கள் இப்படி நன்றிகெட்டு திரிகின்றன.
இதில் திமுக மட்டும் என்ன விதிவிலக்கா? அந்த கூட்டமும் ஓட்டு பொறுக்க திருமங்கலத்தில் காத்து கிடக்க போய் விட்டது.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்ற போர்வையில் சில காலம் நாடகம் ஆடி, இப்பொழுது நாடகத்தை வைத்து ஓட்டு வசூல் செய்ய கிளம்பியாகிவிட்டது.
சாதிய சாக்கடையில் உங்களை இன்னும் அழுத்தி ஓட்டு பொறுக்க வருகிறது.
இந்த ஓட்டு பொறுக்கி கட்சிகள். இனவுணர்வை கொன்று சாதிவெறி, கட்சி வெறி ஊட்ட வருகிறது இந்த பார்ப்பன, பார்ப்பன அடிவருடி கும்பல்.
தமிழர்களே தயவு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள். நமது அரசியல் தலைவர்களாக நாம் கருதிக் கொள்ளும் இந்த பொறுக்கிகள் ஒட்டு பொறுக்க வரும் பொழுது செருப்பை கழட்டி அடியுங்கள், அது அநாகரீகம் என்று நாம் கருதுவோமானால், ஓட்டு போடுவதையாவது தவிர்த்து விடுங்கள். குறைந்த பட்சம் உங்கள் உணர்வுக்காவது மதிப்பு கொடுங்கள்.
இல்லையேல் நீங்கள் அநாகரீகமாக கருதி ஒதுக்கி வைத்த செருப்பாலேயே தம்மை தாமே அடித்துக் கொள்ளுங்கள்.
பதிவுலக அன்பர்களே! இது குறித்து கொஞ்சம் காட்டமாகவே பதில் எழுதுங்கள்.
இப்பதிவு மக்கள் இவ்வளவு மடையர்களாக இருக்க முடியுமா? இவ்வளவு சகித்து கொள்ள முடியுமா? என்ற சினத்தினால் எழுந்தது.
இந்தியாவின் தமிழின அழிப்பு என்ற உள்ளூரவு கொள்கையே-வெளியுறவு கொள்கையாகும்!
ஒரு இனத்தினை அழிக்க வேண்டும் என்றால் ஒன்று போரிட்டு சென்று அழிக்க வேண்டும் அல்லது கூட இருந்தே குழிபறித்து அழிக்க வேண்டும் இதில் ஆரிய பார்பணிய இந்தியா தேர்ந்தெடுப்பது இரண்டாவது வழிமுறையாகும்..
ஒரு இனத்தின் பண்பாடு, மொழி, வரலாறு, நீர் ஆதாரம், வீரம், முதலியன இதில் இந்தி தேசியத்தினால் உள்வாங்கபட்ட தமிழர் நாடானது ஒன்றாவது முழு பேறு அடைந்துள்ளதா? செம்மொழி அந்தஸ்துக்குரிய நமது தாய் தமிழ் மொழியின் வரலாற்றினை 2000 ஆண்டுகளுக்கு கீழாக குறைத்து பிற சவ மொழிகளை செம்மொழி அந்தஸ்திற்கு உட்படுத்தியது யார்?
செவ்வல் புலித்தேவன் போன்ற ஒப்புயர்வற்ற ஈகச் செம்மலகளைப் பெற்ற நாடுதான் நம் தமிழ்நாடு!ஆனால் எவ்வளவோ பேருக்கு நாடாளுமன்றதில் சிலையிருக்க ஒரு தமிழனின் சிலையும் காண
முடியவிலலையே!ஒரு தமிழ்தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய செய்தியை கேட்டதுண்டா?அதே போல் காவிரி பிரச்சனையில் கன்னடருக்கு ஒத்துழைப்பதையும் நாம் நன்றாக அறிவோம் தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை(1991) ராணுவத்தை அணுப்பாமல் தூரநின்று கைகொட்டி சிரித்தது ஒக்கேனக்கல் பிரச்சனையில் தாம் தலையிட மாட்டோம் நீங்களே பேசி தீருங்கள் என தூர நின்று வேடிக்கை பார்பதையும் அறிவோம்..
காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை கன்னடர்கள் தூக்கி கடாசிய போது தூர நின்று ரசித்த ‘இந்தி’ அரசு தமிழருக்கு நன்மை பயக்கும் திட்டமான சேது சமுத்திரத்திட்டதினை நிறுத்த ஞாயிற்று கிழமையும் உச்ச நீதி மன்றத்தினை திறந்து வைத்து விசாரித்தது அதே போல தான் கொல்டிக்களின் பாலாற்று பிரச்சனையிலும் தனது தமிழன விரோத போக்கை காட்டி வருகிறது..
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ‘இந்தி’ய படைகளை இறக்கி தமிழர்களை சுட்டு கொன்ற இந்தியா அதே போல் காவிரி பிரச்சனையின் போது(1991) களத்தில் இறங்கி தமிழர்களை காத்ததா?எமது பக்கத்து மாநிலமான கருநா(க)டகா காரன் பிழைக்க போன ஒடுக்க பட்ட சிறுபான்மை தமிழ் மக்களை தமிழில் பேசுகிறான்.. தாய்மொழி தமிழ் என்பதற்க்காக வெட்டி காவிரி கரையில் ரத்தமாக விட்டான் தடுப்பதற்கோர் இந்திய தேசம் முன்வரவில்லை மயிரை புடுங்கி கொண்டிருந்தது! அதற்கு காரணமான மான வாட்டாள் நாகராசு இன்னும் அரசியல் வாதியாக மிகபெரிய அவதாரம் எடுத்து சுற்றி கொண்டுதான் உள்ளான்..ஏன் கன்னடக்காரனுக்கு-மராத்திகாரனுக்கும் இன்னும் எல்லை தகாராறு உள்ளது..எங்கே பெங்களூரில் உள்ள அவர்கள் மேல் கைவைக்க சொல்லுங்கள் பார்போம் வாலை ஒட்ட நறுக்குவார்கள்..
இந்த பால்தக்கரேவும் தான் மும்பையில் தமிழரை தாக்கினான் அப்போது என்ன செய்து கொண்டு இருந்தது ‘இந்தி’ய அரசு? இன்றும் பத்திரமாகத்தான் உள்ளான் இவ்வாறானவர்களை சிறையில் தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி இருந்தால் இந்த இந்திய தேசத்தை பாராட்டலாம்.. இதுவரை தமிழன் எத்தனை மாநிலங்களில் கலவரத்தை தூண்டினான்? காரணமின்றி யாரையாவது அடித்திருக்கிறானா?மலையாளி கண்ணகி கோட்டம் என்னுடையது என்கிறான்.. கொல்டி பாலாற்றின் குறுக்கே அணைகட்டிகிறான்.. என்ன செய்ய முடிகிறது நம்மால்?
இந்த மீனவர்களை எடுத்து கொள்ளுங்கள்..இதுவரை சற்றொப்ப 406 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்?பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் ‘இந்தி’யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையாவது பாய்ந்திருக்கிறதா? ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு?
சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது. ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான். சில மாதங்களுக்கு முன்பு லெபனானில் அவதிப்பட்ட இலங்கைச் சிங்களவர்களுக்கு இலவச விமானம் அனுப்பி ஏற்றி இறக்கிய இந்தியா குவைத்தில் அவதிப்படும் தமிழர்களை மட்டும் உணவுக்குக் கூடப் பிச்சை எடுக்க விட்டிருப்பதன் காரணமென்ன, அவர்கள் தமிழர்கள் என்பதாலா? மலையக தமிழர்கள் நாடற்றோர் ஆக்கபட்டதிற்கு யார் மூல காரணம் அவாள் லால் பகதூர் சாஸ்திரி தானே?
காண்க ஒளிப்படம்
இந்திராகாந்தி ஆட்சிக் காலமானாலும், அவர் தந்தையார் நேருவின் ஆட்சிக் காலமானாலும், இந்திராவின் மகன், மருமகள், பேரன் ஆட்சிக் காலமானாலும், வாஜ்பாயி ஆட்சிக் காலமானாலும் இந்திய ஆளும் வர்க்கத்தினர் தமிழகத் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்துக் கண்காணிப்பதிலும், தமிழர்களைப் பகைவர்களாகக் கருதுவதிலும் மாற்றமில்லை. ஈழத் தமிழர்களையும் அதே அளவுகோல் கொண்டுதான் பார்க்கிறார்கள் இந்த பாகுபாட்டைத் தான் ‘இந்தி’ய தேசியம் என்கிறோம். தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.தமிழின எதிர்ப்பு என்பது இந்திய அரசின் நிரந்தர கொள்கையாகும்!
இதுவரை எனைய தமிழர் நலம் சார்ந்த வெளிவிஷயங்களில் இதுவரை இந்தியா தலையிட்டதிலை அது மலேசிய பிரச்சனையாக இருந்தாலும் சரி ..குவைத் தமிழர்கள் பிரச்சனையாக இருந்தாலும் சரி!
எங்கோ சரந்தீபு சிங்கு தூக்குதண்டனைக்கு தாம் தூம் என்று குதிக்கும் இந்திய அர்சு இதுவரை தமிழக தமிழர்களுக்காக குதிதது உண்டா?சிந்தித்து பாருங்கள்..மராட்டியர்களின் இன உணர்வில் கால் பங்கு கூட இல்லையா தமிழனுக்கு? கொஞ்சம் வராலாற்றை எடுத்து புரட்டி பாருங்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடிய இனங்களே வாழ்திருக்கின்றன..
ஈழதமிழர்கள் செய்வது ஒன்றும் தவறான விஷயம் அல்ல.. தமிழர்கள் இந்தியாவில் இருந்தாலும் ஈழத்தில் இருந்தாலும் இந்திய ஆளும் வர்க்கம் அவர்களைப் பகைவர்களாகவே கருதுகிறது. விடுதலைப் புலிகள் இந்திய அரசுக்குத் திரும்பத் திரும்ப நேசக்கரம் நீட்டுகிறார்கள். இந்திய அரசு ஒரு பிராந்திய வல்லரசாகச் செயல்படத் துணைபுரிவோம், இந்திய தேசிய இறையாண்மைக்குப் பாதுகாப்பாக இருப்போம் என்று கூட உறுதி தருகிறார்ச்கள். ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் விடுதலைப் புலிகளை வீழ்த்தவே முனைகிறார்கள். இது தீராத ஆரிய-தமிழ் இனப்பகையின் வெளிப்பாடு.தமிழன எதிர்ப்பு என்பது இந்திய அரசின் நிரந்தர கொள்கையாகும்! இது புரியாமாலா இங்கு கட்சி நடத்தி கொண்டு உள்ளார்கள்? இது அவர்களுக்கும் தெரியும்!பாக் சல சந்தியின் அந்தபுரம் இருந்தாலேன்ன இந்த புறம் இருந்தாலென்ன?தமிழர்கள் எதிரிகளே என இந்தி அரசு செயல்படுகிறதுஇவர்களுக்கு தமிழினத்தை புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு எம்.பி சீட்டுகளாக மாற்றி யார் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள்ளே அறிக்கை அக்கபோர் சண்டை ஆகியவை ஏற்படுகின்றன..
புது டெல்லி இந்திக்காரன் வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக பதவி பணம் என ஒரே கொள்கை உடையவர்களாக உள்ளார்கள்!இவர்களுக்கு தமிழனத்தை காப்பதெற்கேன்று தனி
கொள்கை எதுவும் இல்லை!இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை
உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் இந்தியனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும்.
அது ஈழ தமிழர்களுக்கும் சரி தமிழக தமிழர்களுக்கும் சரி!தமிழ் தேசிய உணர்வாளர்கள் ஓரணியில் திரளவேண்டும்!நமக்காக குரல் கொடுக்க ஒரு நாடு கட்டாயம் வேண்டும்.. நம் குரல் ஐ.நா. சபையில் எழுப்ப படும்..அப்போதுதான் தமிழர்களுக்கு கொடுமை செய்யும் எனைய நாடுகள் இந்தியா உட்பட தனது கொட்டத்தை அடக்கும்..தமிழ் நாட்டில் மாணவர்களாலும், மீனவர்களாலும், படைப்பாளிகளாலும் முன்னெடுக்கப்பட்டு விட்டிருக்கும் தமிழீழ விடுதலைக்கான ஆதரவுப் போராட்டம் வெல்லவேண்டும்! இருபத்தோராம் நூற்றாண்டு தமிழர்களின் நூற்றாண்டு!
புரட்சியை வெளியில் தேடாதே!! அது உன் உள்ளத்திலேயே உள்ளது!–லெனின்
http://siruthai.wordpress.com/2008/12/25/இந்தியாவின்-தமிழின-அழிப்/
-
Archives
- October 2009 (1)
- September 2009 (11)
- August 2009 (4)
- July 2009 (2)
- June 2009 (1)
- May 2009 (1)
- April 2009 (3)
- March 2009 (10)
- February 2009 (1)
- January 2009 (7)
- December 2008 (3)
- November 2008 (20)
-
Categories
- அ மார்க்ஸ்
- அண்ணா
- அப்பா
- அமீர்
- அம்பேத்கர்
- அல்லா
- இந்தியா
- இந்து மதம்
- இனப்படுகொலை
- இனவெறி
- இலங்கை
- இழிவு
- இஸ்லாம்
- ஈழம்
- உலகத்தமிழ்
- எண்ணம்
- எம்.ஜி.ஆர்
- கடவுள்
- கடவுள் கற்பனை
- கம்யூனிசம்
- கருணாநிதி
- கர்த்தர்
- கலைஞர்
- கவிஞர்
- கவிதை
- காங்கிரஸ்
- காசுமீர்
- காதல்
- கிருத்துவம்
- கீற்று
- குடியரசு
- குண்டு வெடிப்பு
- சட்டக்கல்லூரி
- சாதி
- சிரிப்பு
- சீமான்
- சு சாமி
- சே
- ஜெயலலிதா
- டக்ளஸ் தேவானந்தா
- தமிழ்
- திருமணம்
- திருமா
- தீபாவளி
- தீவிரவாதம்
- நகைச்சுவை
- நையாண்டி
- பக்தி
- பன்றி காய்ச்சல்
- பாடல்
- பாரதிதாசன்
- பார்ப்பானியம்
- பிரபாகரன்
- புதிய ஜனநாயகம்
- புலிகள்
- பெரியார்
- போர் நிறுத்தம்
- மகிழ்நன்
- மத(ல)ம்
- மதம்
- மனிதம்
- மரணம்
- மாநாடு
- மாவீரர்கள்
- மிரட்டல்
- மூடநம்பிக்கை
- மொழி
- ரஜினி
- ரா(RAW)
- ராஜபக்சே
- ராஜிவ்
- ராமேஸ்வரம்
- லொள்ளு சபா
- விடுதலை
- விழித்தெழு
- Periyar
- Uncategorized
-
RSS
Entries RSS
Comments RSS