அருந்ததியர் இனத்தில் பிறந்தது பாவமா?-பட்டதாரி வாலிபரின் பரிதாப நிலை
சாதி ஒழிக்கப்படும் வரை…………தாழ்த்தப்ப்ட்ட தமிழ்ச் சகோதரர்கள் இப்படித்தான் பாதிக்கப்படுவார்கள்
மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள கிராமம் வடிவேல்கரை. இந்த பஞ்சாயத்துக்குத்தான் மத்திய அரசு சமீபத்தில் ‘நிர்மல் புரஸ்கார்’ விருது வழங்கியிருக்கிறது. அந்த விருது கிடைக்கக் காரணமாக இருந்தவர் அம்மாசி. இவர்தான் அந்த ஊருக்குத் துப்புரவுப் பணியாளர். குப்பைகளை இவர் கூட்டி, பெருக்கியதால் சுத்தமான கிராமம் என்ற பெருமை கிடைத்தது. அதற்கு நிர்மல் புரஸ்கார் விருதும் கிடைத்தது.
வடிவேல்கரையில் பிள்ளைமார், கள்ளர் சமூகத்தினர்தான் அதிகம். அங்கு அருந்ததியர் இன மக்கள் எழுபத்தைந்து குடும்பங்கள்தான் வசிக்கின்றன. அருந்ததியர் மக்களில் யாரும் படிக்காத நிலையில் தப்பித் தவறி துப்புரவுப் பணியாளரான அம்மாசி, தன் மகன் முருகனை லிட்டில் டிரஸ்ட் உதவியோடு எம்.காம். படிக்க வைத்தார். தற்போது தனியார் கல்லூரியில் பி.எட். படித்துக்கொண்டிருக்கும் முருகன்தான் இப்போது இந்தக் கிராமத்தின் ஹாட்டான டாபிக். முருகனை படிக்க விடக் கூடாது என்று ஊரே கூடி, அவரது படிப்புக்கு மூடு விழா காண திட்டமிட்டிருக்கிறது என்று மற்ற சாதி மக்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் அருந்ததியர் இன மக்கள். இந்த நிலையில் முருகன் தாக்குதலுக்கு உள்ளானார் என்ற செய்தியும் கிடைத்தது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தலையில் பதிமூன்று தையல்களோடு தரையில் படுத்திருந்த முருகனை சந்திக்க முடிந்தது. ஆறுதல் கூறிவிட்டு பேசத்தொடங்கினோம். ஈனஸ்வரத்தில் முருகனின் குரல் ஒலிக்கத் தொடங்கியது.
“ஊர்ல எங்க அருந்ததியர் சமூகத்தில் நான் மட்டும்தான் எம்.காம். படித்து முடித்து, பி.எட். படிச்சுக்கிட்டு இருக்கேன். நான் ப்ளஸ் டூ படிக்கும் போதே முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ராமநாதன், ‘உனக்கு வேலை போட்டு தர்றேன் படிப்பை நிறுத்திரு’ன்னு சொன்னாரு. நான் கேட்கலை. காலையில வீடு வீடா நியூஸ் பேப்பர் போடுவேன். அதுக்கப்புறம்தான் காலேஜுக்குப் போவேன். இரவு எங்க பிள்ளைகளுக்கு டியூஷன் எடுப்பேன். இதுதான் மற்ற சாதிக்காரர்களுக்குப் பிடிக்கலை.
நாங்க, எங்க காலனி வீட்டுக்குப் போகணும்னா ஒண்ணு கம்மாய்கரை வழியா வரணும். இல்லாட்டி ஊர் மந்தை வழியா வரணும். இப்ப ரிங்ரோடு போடுறதுனால கண்மாய்க் கரை வழி அடைபட்டுப் போச்சு. ஊர் மந்தை வழியாத்தான் வரணும். அப்படித்தான் நான், ஆகஸ்ட் 13-ம் தேதியன்னிக்கு எங்க வீட்டுக்கு மந்தை வழியா சைக்கிள்ல போனேன். மந்தையில் கூடி நின்ற மற்ற சாதிப் பசங்க என்னை வழிமறிச்சு, ‘உனக்கு எத்தனை தடவை சொல்லுறதுடா. இறங்கி உருட்டிக்கிட்டு போ’னு சொல்லி, தள்ளி விட்டதோட, ‘படிச்சத் திமிறான்னு சொல்லி’ கடக்கால் கட்டுறதுக்குப் பயன்படும் கட்டுக்கல்லை தூக்கி ஆனந்த்ங்கிற பையன் என் தலையில போட்டுட்டான்.
மண்டை உடைஞ்சு ரத்தம் ஆறு மாதிரி ஓடுது. ஊரே நின்னு வேடிக்கை பாத்துச்சு. என்னன்னு கேட்க நாதியில்ல. ரத்தம் வழிஞ்சி ஓடுறதைப் பார்த்து பயந்துபோன ஆனந்த், சிலம்பரசன், லட்சுமணன் மூணு பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனாங்க. நானும் எங்க அப்பாவும் அடிச்சோம்னு சொல்லி அவனுங்களே ரத்த காயத்தை ஏற்படுத்திக்கிட்டு போய் புகார் கொடுத்தாங்க. சம்பவம் நடந்து நான்கு மணி நேரம் கழிச்சுத்தான் எனக்கே சுயநினைவு வந்தது. அதன் பிறகுதான் போலீஸ்ல புகார் கொடுத்தேன்.
நாகமலை புதுக்கோட்டை போலீஸ் என் மேலேயும் எங்க அப்பா மேலேயும் கொலை முயற்சி வழக்கு பதிவு பண்ணிட்டதாச் சொல்றாங்க. என்னையும் அப்பாவையும் கைது பண்ணச் சொல்லி சில அரசியல் கட்சிகள் பிரஷர் கொடுக்கறதாவும் சொல்றாங்க.
சுதந்திர இந்தியாவில் நான் தலித் என்பதற்காக கஷ்டங்களை அனுபவிக்கிறேன். எப்படியாவது என்னை படிக்க விடக்கூடாது என்பது தான் அந்த மக்களோட எண்ணம். நான் டியூஷன் எடுத்து எங்க காலனியில் இப்பத்தான் அஞ்சு பேர் பத்தாவது படிக்கிறாங்க. நாங்க இன்னமும் செருப்புப் போட்டுக்கிட்டு ஊருக்குள்ள போகக் கூடாது. சைக்கிள் ஓட்டிக்கிட்டு போகக் கூடாது. டீக்கடையில் இரட்டை டம்ளர் இருக்கு. தமிழ்நாட்டில் சாதி என்ற ஆயுதத்தால், தமிழனுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்டால், மற்ற நாடுகளில் மட்டும் தமிழனுக்கு உரிமை வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்?” என்று அழுதுகொண்டே கேட்டார் முருகன். முருகனின் அருகில் இருந்த பாண்டி ரொம்பவே ஆவேசப்பட்டார். “முருகனை அடிச்ச அடுத்த நாள் காலையில் 8.10 மணிக்கு பஸ் வந்தது. அதுலதான் வேலைக்குப் போறவுங்க, பள்ளிக்கூடம் போறவுங்க எல்லாம் போவோம். எங்க மக்கள் எல்லாத்தையும் கீழே இறக்கி விட்டுட்டு மற்ற சாதிக்காரங்க மட்டும் பஸ்ல போனாங்க. நாங்க மூணு கிலோமீட்டர் நடந்து போயி நாகமலை புதுக்கோட்டைக்குச் சென்று பிறகு பஸ் பிடிச்சுப் போனோம்.
எங்க உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்ல. காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் சரியானபடி நடவடிக்கை எடுக்கலைன்னா ஊரை காலி செஞ்சு, முதல்வர் வீடு முன்னாடி எங்களுக்குச் சுதந்திரம் வேணும்னு போராட்டம் நடத்தப் போறோம்” என்றார் பாண்டி படபடப்போடு.
லிட்டில் டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி பர்வதாவர்த்தினி நம்மிடம், “அருந்ததியர் சமூகம் படிக்கக் கூடாது என்பதுதான் வடிவேல்கரை ஊர் மக்களின் நோக்கம். முருகன் படிப்பை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும். அவனும் நம்ம ஊர் வேலைக்காரனாக இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஊர் மந்தை வழியாக சைக்கிளில் சென்ற முருகன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அப்பதான் மற்ற அருந்ததியர் இன மக்களுக்கும் பயம் வரும்னு இப்படிச் செய்யறாங்க. இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இப்படியொரு கொடுமை நடக்குது. அரசாங்கம் என்ன செய்யப் போகிறது. ஆதிக்கச் சாதியினர் ஊர்ல தலைகட்டு வரி போட்டு இந்த கேஸ்ல, அருந்ததியினர் ஜெயிக்கக் கூடாதுன்னு ஒன்றரை லட்ச ரூபாய் வரை பணம் திரட்டியிருக்காங்க.
ஊர் மந்தையில் வைத்து இவ்வளவு பெரிய கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், ‘போலீஸார் அவர்களுக்குள் குடும்பச் சண்டை’ என்று சொல்லுகிறார்கள். ஒரு தனி மனிதனோட அடிப்படை உரிமைகள் அனைத்தும் அந்த ஊரில் முற்றிலும் மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மை” என்கிறார் அந்தச் சமூக சேவகி.
வடிவேல்கரை பஞ்சாயத்துத் தலைவர் ஆறுமுகத்திடம் பேசினோம். “நாங்க யாரையும் சைக்கிள்ல போகக்கூடாது, செருப்புப் போடக் கூடாதுன்னு சொன்னதே கிடையாது. எங்க ஊர் அமைதியான ஊர். நாங்க சாதி வேற்றுமையில்லாம தாயா பிள்ளையாத்தான் ஒற்றுமையா இருக்கோம். முருகன் குடும்பம்தான் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தை வியாபார நோக்கத்தோட பயன்படுத்துறாங்க. எப்பப் பார்த்தாலும் எங்களை மிரட்டுறதுதான் அவங்களுக்குத் தொழில். இதுவரைக்கும் நாலு பி.சி.ஆர். கேஸ் கொடுத்து, முதல் கேஸ்ல நிவாரணம் பணம் வாங்கியிருக்கு அந்தக் குடும்பம். எந்தப் பிரச்னையும் வந்துடக் கூடாதுன்னுதான் கலெக்டர்கிட்டே சொல்லி ‘அமைதி’கமிட்டி போடச் சொல்லியிருக்கேன். தனிப்பட்ட பிரச்னையை சாதிப் பிரச்னையாக மாற்றப் பார்க்கிறார்கள். யாரு தப்பு செஞ்சாலும் தப்பு, தப்புதான். ரெண்டு பேரும் தனிப்பட்ட பிரச்னைக்கு மல்லுக்கட்டி புரண்டிருக்கானுங்க. போலீஸ் நேரடியாக வந்து விசாரணை பண்ணிட்டு போயிருக்காங்க” என விளக்கம் கொடுத்தார் ஆறுமுகம்.
http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=519&rid=26
(சுயமரியாதையுள்ள) தமிழர்களுடைய வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றுவோம்.-இந்தியாவின் குடியரசு தின விழா
26 சனவரி, 1950 இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டது. அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல், போனால் போகட்டும் என்பதுபோல் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. (சாதி ஒழிக்கப்பட்டால் இந்து மதத்திற்கு இங்கு வேலை என்று நினைத்திருப்பார்களோ என்னவோ?) . இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டபிறகும் இதை பற்றியெல்லாம் பேசி பழமைவாதியாக இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்பீர்களானால், நீங்கள் நானும் அடிமையாக உருவாக்கப்பட்டு
இன்று இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ அடிமைகளாக திரிவதற்கு இவைதான் காரணிகள் என்று சொல்லத் தோன்றுகிறது.
இன்று பேச்சுரிமை இருப்பதாக கூறப்படும் இந்தியாவின் நிலை என்ன?எந்த உரிமையாக இருந்தாலும் அரசுக்கு ஒடுக்குவதற்கு உரிமை உள்ளது என்பதுதானே நிலை!
ஈழத்தில் தமிழன் என்பதற்காகவே கொல்லப்படுகிறான், நான் தமிழன் என்பதினாலேயே என்னுள்ளம் துடிக்கிறது குரல் கொடுக்கிறேன்.
இல்லை, இல்லை நீ தமிழன்என்பதற்காக குரல் கொடுக்கக் கூடாது. இப்படி நீ குரல் கொடுத்தால் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும்.
இந்தியாவை தூண்டாடும் முயற்சியாக கருதப்படும், கைது நடவடிக்கைகள் ஏற்படும், உங்கள் குரலை ஒடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம், என்றெல்லாம் அரசு பொறுக்கித்திண்ணிகள் குரல் கொடுக்கிறார்கள்.
சரி நான் குரல் கொடுக்கவில்லை? இந்திய அரசே நீ என்ன செய்யப்போகிறாய்? என்றால், கொஞ்சம் பொறுத்திரு, அங்கே இருக்கும் உன் தமிழன உறவுகளின் மொத்த உயிரையும் சிங்கள பேரினவாதம் விரைவில் துடைத்தெரிய நாங்கள் உதவி புரிகிறோம், அவர்கள் அங்கு உயிரோடு போராடிக் கொண்டிருந்தால்தானே நீ குரல் கொடுப்பாய், உனக்கு அந்த பிரச்சினையை நாங்கள் வைக்கமாட்டோம் , நீ வெகு காலம் துடித்து கொண்டிருக்க வேண்டாம் என்பது போல் இந்திய அரசு கொக்கறிக்கிறது, இங்குள்ள அரசியல்வாத, பிழைப்புவாத தமிழர்கள் இந்திய வல்லாதிக்கத்துக்கு அச்சப்பட்டு, தமிழர்களை காட்டிக் கொடுக்கிறார்கள், அவன்(இந்திய பார்ப்பன, பனியா வடநாட்டுக் கும்பல்) குண்டுகளை கூட்டிக் கொடுக்கிறான்.
இவையெல்லாம் பார்த்து கொண்டு தமிழன் அமைதியாகவே இருக்க வேண்டும்,ஏனென்றால்
இந்தியா ஒரு மாபெரும் குடியரசு!
வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு!!
சரி அப்படி என்னதான் வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறது இந்தியா?
- பல்வேறு சாதிகளாக, பிரிந்து கிடந்தாலும், மொழி, இன வேற்றுமைகள் இருந்தாலும் தீண்டாமைக் கொடுமைகளை தொடர்ந்து மாநில வேற்றுமைகள் இன்றி கடைபிடித்து வருகிறது.
இந்த ஒடுக்குமுறைகளை ஒடுக்குவதற்கு துப்பில்லாமல் இந்த வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஒற்றுமை குலைக்கலாமா, நாம்.
- கர்நாடகம், ஆந்திரா, கேரளம் போன்ற மாநிலங்கள் மொழிவாரியாக வெவ்வேறு மாநிலங்களாக வேறுபட்டு இருந்தாலும், ஒற்றுமையோடு தமிழகத்துக்கு குடிக்க நீர் தரமாட்டோம் என்ற வேற்றுமையில் ஒற்றுமையை பின்பற்றுகிறதே!
இந்த ஒற்றுமையை பேணி காக்க உயர்நீதிமன்ற தீர்ப்பை கூட அமல்படுத்தாமல் திராணியற்று கிடக்கும் இந்திய அரசின் ஒற்றுமையை (அப்)பாவி தமிழர்களே குலைக்கலாமா?
-
இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகம் மட்டும் வருந்தும் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக ஒற்றுமையாக மௌனம் காக்கும் வேற்று மாநில மக்களின் ஒற்றுமையை குலைக்கலாமா, தமிழர்களே?
தமிழனின் உணர்வு புரியாத நாடு தமிழனின் நாடுதான். ஏனென்றால், அப்படித்தான் தாளில்/சட்டபுத்தகத்தில் வரையறுக்கப்பட்டுவிட்டது, அப்படியிருக்க நீங்கள் இந்திய வல்லாதிக்க நாட்டை எதிர்க்கலாமா?
தமிழர்களே உங்களுக்கு ஒற்றுமையுணர்வு இல்லை, இந்தியா வல்லரசு நாடாக கனவு கண்டு கொண்டிருக்கும்பொழுது, நீங்கள் சாதாரண உங்கள் அற்ப தமிழ் உயிர்ளுக்காக குரல் கொடுக்கிறீர்களே இது எந்த விதத்தில் நியாயம், இந்தியாவின் வெளியுறவு/உள்ளுறவு கொள்கையே தமிழனின் எச்சில் இலைக்கு சமானமாக மதிப்பதுதான், இதை புரிந்து கொள்ளாமல் இந்திய வல்லரசு நாட்டை எதிர்க்கிறீர்களே?
சரி இந்தியா வல்லராசும் லட்சணத்தை கீழ் வரும் கட்டுரையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் வீட்டில் என்ன கொடி ஏற்ற வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
.
Related Article:
19% இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெறும் 12 ரூபாயில்..!!!
India grows so does the Inflation – Don’t talk about Indians!!!
India is First always!!! The record breaking Three seconds
================================================
“59 ஆண்டு கால குடியரசு தினத்தின் யோக்கியதை” – ஓட்டுக்கட்சிகளின் சாதனை
நன்றி: இரும்பு
பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
..
மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம்.
வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! பேருக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5% பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பதெல்லாம் ஆய்வுகளில் தெரியவந்தவை.
1997 முதல் 2005 வரை இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
மராட்டியம், கருநாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் 89,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
32 ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்து கொண்ட மராட்டிய மாநிலத்தில் தான் 4 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் 25 ஆயிரம் பேர் வாழும் மாநகரமான மும்பை உள்ளது என்பது வேதனை கலந்த உண்மை.
விவசாயத்துக்கு 1990-இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 2001 – -2 நிதியாண்டில் வழங்கிய கடனோ 7.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் இருந்தே, ஆட்சியாளர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள அக்கறை தெளிவாகப் புரியும்.
விவசாயத்தைப் படிப்படியாய் தலைமுழுகி விடுவது என்ற அடிப்படையில், 1991-இல் விவசாயத் துறையில் அரசு செய்த முதலீடு 3.4 சதவிதமாக இருந்த நிலைமை மாறி, அதை 2001-ல் 1.3 சதவிதமாகச் சுருக்கி, விவசாயிக்கு சுருக்குக் கயிற்றைத் திரித்துத் தந்தது.
உடல் உழைப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் புரதத்தை வழங்கும் பருப்பின் நுகர்வோ 15.2 கிலோவில் இருந்து 10.6 கிலோவாகச் சரிந்துள்ளது.
உலக அளவில் நாளொன்றுக்கு தனிநபர் உண்ணும் உணவின் கலோரி மதிப்பு 3206. ஆனால் இந்திய மக்களின் ஏழைகளான 30 சதவிதம் பேர் உண்பதோ வெறும் 1626 கலோரிதான் என்றால், இந்திய ஏழைகளின் வாழ்க்கை என்பதே ஏதோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதானே பொருள்?
இந்திய மக்களில் 91 கோடி பேர்களின் தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் கீழே என்றும், அந்தக் கொஞ்ச நஞ்ச பணத்துக்குள் உணவு, வீட்டு வாடகை, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படியான அவல் நிலைக்குத் தள்ளி உள்ளது என்றும் உலக வங்கியே குறிப்பிடுகிறது.
ஆனால் அதே நேரத்தில், நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்கார்கள் இந்நாட்டின் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். அடித்தட்டில் இருக்கும் 10 சத ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.21 சதமாகச் சுருங்கி உள்ளது.
110 கோடி இந்திய மக்களில் வெறும் ஒரு லட்சம் பேரை மட்டும் கோடீஸ்வர்களாக்கி, பல பத்து கோடிப்பேரை ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
டிசம்பர் “புதிய ஜனநாயகம்”
“உழைத்தவர் மெலிந்தனர் வலித்தவர் கொழித்தனர்” கட்டுரையில் இருந்து
மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களுக்கு,
இன்றைய சிக்கலான சூழலில் தமிழுணர்வோடு மின்னஞ்சல்தான் எழுத முடிகிறது. தமிழுணர்வு என்பது கையாலாகத்தனத்துக்கு ஒரு எடுத்துக்காட்டோ? என்று கூட தோன்றுகிறது. தமிழன் யார்? தமிழனின் பழமை/ பெருமை என்ன? இதற்கு முன் நடந்த பிரச்சினைகள் என்ன? நீங்கள் என்ன சாதித்தீர்கள்? என்ன செய்யவில்லை? மற்றவர்கள் என்ன சாதித்தார்கள்? என்ன துரோகம் செய்தார்கள்? என்றெல்லாம் பட்டியலிட்டு காட்டி ஒருவரை ஒருவர் விமர்சித்து நம் துயரை மேலும் துயராக்க விரும்பவில்லை. அல்லது பட்டியலிடுவதற்கு எனக்கு போதிய அறிவோ, என்னிடம் தகவலோ இல்லை என்று கூட நினைத்து கொள்ளலாம்.
ஆனால்,
“ இந்திய வல்லாதிக்கம் திட்டமிட்டு தமிழர்களின் உணர்வுகளை கொச்சைபடுத்தி விட்டது, கோரிக்கைகளை உதாசினப்படுத்திவிட்டது” என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்திருக்கிறான். நீங்களும் உங்களுடைய “ஏமாற்றம்” என்ற ஒற்றைச்சொல்லில் அதை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
எம்மை பொருத்தவரை போராளிகளும் தமிழர்களே! அவர்கள் போராளிகளாக தூண்டிய சிங்கள இனவெறிதான் தமிழின நீதிமன்றத்தில் குற்றவாளி. இத்தனை ஆண்டுகாலமாக கொடுமைகளை இழைத்துவிட்டு, இப்பொழுது உரிமைக்கு போராட வந்தவர்களையும் அழிப்பது என்பது சிங்கள இனவெறியின் வெற்றிதானே தவிர வேறில்லை. இதற்கு இந்திய அரசு துணைபோவதுஎன்பது தமிழர்களை இளித்தவாயர்கள் என்று கருதுவதுதானேயன்றி வேறென்ன இருக்க முடியும்? தமிழர்கள் இந்திய/பார்ப்பன வல்லாதிக்கத்திற்கு கட்டுபட்டு மொழியை, பண்பாட்டை தன்னடையாளத்தை இழந்தது போதாதா? உயிரையும் இழக்க வேண்டுமா,என்ன? ஈழத்தமிழன் என் சகோதரன் அதை எத்தனை வல்லாதிக்கம் வந்தாலும் மறைத்துவிட முடியாது. எத்தனை பார்ப்பன வந்தேறி கூட்டம் அறிக்கை விட்டாலும் அழிக்க இயலாது.
இத்தனை வலிதோய்ந்த சொறகளுக்குள்ளும் இருப்பது கீழுள்ளவைதான்
“ ஈழத்தமிழனுக்கு செய்யும் துரோகம் என்பது ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் செய்யும் துரோகம், அவர்கள்தான் தமிழின் பெருமை, தமிழை உலகுக்கு எடுத்து சொன்னவர்கள், என்னை பொருத்தவரை இந்தியன் என்று சொல்லி கொள்வதில் பெருமைப்பட்டதில்லை, ஆனால் எதிர்க்கவில்லை. ஆனால், இது தொடருமானால் அதுவும் நிகழ வாய்ப்புண்டு என்பதை நீங்கள் அறியாதது அல்ல. இது என்னுடைய சொந்த குரல் மட்டுமல்ல உணர்வுள்ள ஒவ்வொரு தமிழர்களின் கண்ணில் வழியும் கண்ணீரில் உள்ளது, சொற்களாக வெளிப்பட்டுவிடாமல் பாதுகாப்பது உங்கள் கடமை. திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிடும் பொழுது சொன்ன காரணங்கள் தீர்க்கபடாமல் இருப்பதாக கூறினார். ஆனால், இன்றைய நிலையில் காரணங்கள் கூடிக்கொண்டே இருக்கின்றன துரோக பட்டியலில்”
இறுதியாக ஒன்றே ஒன்று,
“ நீங்கள் தமிழர்களின் முதல்வர், இந்திய துணைக்கண்டத்தில் ஏதோ ஒரு பகுதியை நிர்வகிக்கும் நிர்வாகி அல்ல. தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.”
அன்புத்தோழர்களே! உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்
அன்புத்தோழர்களே!
நம் சமூகம் கருத்து பஞ்சத்தால் மதவெறி, சாதிவெறி பாசிசத்துக்கு உள்ளாகும் கொடூர நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. கருத்தை பரவலாக்கும் மாபெரும் சக்தியாக இன்றைய நிலையில் இணையதளம் வாயிலாக கணிணியும், ஊடகமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை பார்ப்பன பரதேசிகளிடமும், அவர்தம் அடிவருடிகளிடமும் உள்ளன.
இந்த ஊடகங்களை நாம் கைப்பற்றாமல் இருப்பது நம்மவர்கள் செய்த மாபெரும் பிழையல்ல, குற்றம். அதை ஓரளவு விழிப்புணர்வு கொண்ட நாமாவது நம் ஆதிக்கம் இந்த ஊடகங்களில் வருமளவு ஆதிக்கம் செலுத்த வேண்டும்.
அறிவியலை முன்னிறுத்தும் நாம் இந்த அறிவியிலால் விளைந்த ஊடகங்களை நம்மைவிட வெகுவாக நம் எதிரிகள் பயன்படுத்துவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? அறிவியலை மறுப்பவர்கள் இந்த ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள்.
நம்மிடமும் ஊடகங்கள் இருக்கின்றன், ஆனால் குறிஞ்சிப்பூ போன்று, இவைகளை மட்டும் வைத்துக் கொண்டு நாம் ஒன்றும் பெரிதாக சாதித்து விட முடியாது. நம் ஊடகங்கள் பரவ வேண்டும்.
பெரியாருடைய காலம் போலல்லாமல் பொதுக்கூட்டமும், உரைவீச்சும் மட்டுமே இன்றைய நிலையில் கருத்து பரவலுக்கு முக்கிய பங்கு வகிக்கலாம் என்று கருதினோமானால், அது நாம் செய்யும் பெரும் பிழையாகிவிடும். பார்ப்பன பண்டார ஊடகங்கள் நீண்ட நாட்களாக நமக்கு எதிரான வேலைகளை செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. நாமோ இன்றும் பொதுக்கூட்டங்களையும், துண்டு பிரசுரங்களை மட்டும் பெரிதாக நம்புகிறோம்.
நாம் செய்ய வேண்டியது
முதலில் ஒரு குழு உருவாக்கி, (அந்த குழு ஒரு கிராமத்திற்கோ, மாவட்டத்திற்கோ, மாநிலத்திற்கோ, நாட்டிற்கோ உட்பட்டதாகவோ இல்லாமல்) மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்து, நாம் வாசிக்கும் செய்திகளை பரப்புவோம்.
அதோடு நில்லாமல்,
ஒவ்வொரு தோழரும் மாதம் ஒருமுறை தாம் அனுப்பிய செய்திகள் எத்தனை தனிநபர்களை சென்றடைந்தது,என்பதை குறித்துக் கொண்டால் நம்முடைய இந்த முயற்சி எந்தளவு வெற்றிகனியை ஈட்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
நாம் பகிர்ந்து கொள்ள வேண்டியவை
1) துண்டு பிரசுரங்களை 2) படக்காட்சிகளாக நம் கருத்துக்கு வலு சேர்ப்பவைகளை 3) குறுந்தகடுகளாக வெளிவரும் ஒளிவீச்சினை 4) மின்னஞ்சல் முகவரிகளை 5) தொடர்பு எண்களை 6) தம் இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களை கண்டிப்பாக ஒளி/ஒலிப்பதிவு செய்து குறுந்தகடுகளை
என முடிந்தளவு என்றில்லாமல், முழு தன்னார்வ முயற்வியோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த பகிர்வு வளமான, சமமான சமூக பகிர்வுக்கு வித்திடும் என நம்புகிறோம், இது விதை, உரமிடுதலும், நீருற்றுதலும், மரமாக வளர்த்தெடுப்பதும் உங்கள் கடமை.
உங்கள் ஆலோசனை ஏதும் இருந்தால்,
தொடர்புக்கு,
மகிழ்நன்.
+919769137032
தாராவி, மும்பை
நம்மை பண்படுத்துவோம்! சமூகம் பண்படவே!!
விழித்தெழு இளைஞர் இயக்கம்.
தீவிரவாதத்தை ஒழிக்க மதத்தை ஒழியுங்கள்
இது குறித்த சில பதிவுகள்
1) மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 1)
2) மும்பையை பப்பரமாக்கிய தீவிரவாதம்?
3) அயோத்தி-கோயம்புத்தூர். குஜராத்-மும்பை… சோதனைச்சாலைகள்Xகுண்டு வெடிப்புகள்
4) மும்பாய் பயங்கரவாதம் அநுராதபுரப் பயங்கரவாதம் ஒரு ஒப்பீட்டுப் பார்வை
5) மும்பாயைச் சொல்லி யுத்தம் கவியுமா?
6) இந்து பயங்கரவாதம் தான், பம்பாய் தாக்குதலை (வழி)நடத்தியுள்ளது.
7) மனித படுகொலைகளைக் கண்டு ரசிப்பவர்கள் தான், பம்பாய் மரணத்தை கண்டு புலம்புகின்றனர்
8) கோர்வையற்ற எண்ணங்களாக மதத்தீவிரவாதம் !
9) பம்பாய் ‘பயங்கரவாதம்” ஆளும் வர்க்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டது
10) ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் மதவெறிச் சக்திகளை நடமாடவிட்டால் ஆபத்து
தமிழன் செத்தொழிவது மேல்
இராமன் வருவானா?
இந்துத்துவ அடிவருடிகளே! ஒற்றை சீதையை காப்பாற்ற இலங்கை சென்று இராவணனையும்,இலங்கையும் அழித்த இராமன்.
எங்கள்/உங்கள்(தமிழனாக இருந்தால்) உறவு இலங்கையில் அழிந்து இத்தருணத்தில் கொண்டிருக்கிறது. இராமன் வருவானா காப்பாற்ற?
இராவணன் என்பதே கற்பனை கதாபாத்திரம், கற்பனை கதாபாத்திரத்தை கொன்ற இராமன் இன்னொரு பெரும் போலி,ஏமாற்று, பித்தலாட்ட, பகட்டுக் கற்பனை. அப்படியிருக்க அவன் எப்படி உங்கள் இன மக்களை காப்பாற்ற வருவான் என்று இந்துத்வவாதிகளே முணுமுணுப்பது கேட்கத்தான் செய்கிறது.
அவன் கற்பனை கதாப்பாத்திரம் மட்டுமல்ல, எம் பண்பாட்டுக்கெதிரான பார்ப்பன புழுகுமூட்டை என்பது எனக்கு நன்றாக தெரியும்.
ஆனால் என்ன செய்வது? என் உறவு அழியும் போது, இராமன் பேர் சொல்லி இன்னொருபுறம் (இராம-தாச பொறுக்கி) இந்து முண்ணனி, ஆர்.எஸ்.எஸ் (இ
ந்து தீவிர-வாத அரசியலு)க்கு துணை போகும் தமிழர்களை என்ன கேள்விகேட்பது. இத்தருணத்தை பயன்படுத்தியாவது, இது மாதிரி கேள்வி கேட்டாவது மதச்சாக்கடைக்குள்ளிருந்து இவர்களை விடுவிக்க மாட்டோமா? என்ற நப்பாசைதான்.ஏனென்றால்,ஈழத்தில் தன்னுடைய இருப்புக்காக, சுய மரியாதைக்காக போராடிக்கொண்டிருக்கும் மறத்தமிழர்கள் வாழும் இவ்வுலகில் தமிழகத்தில் மறவர்கள் என்றோ, கள்ளர்கள் என்றோ, கவுண்டர்கள் என்றோ, பிள்ளை என்றோ சாதி பெருமை பேசி, திமிரோடு, காட்டுவிலங்காண்டித்தனமான அணுகுமுறையால் இலங்கையைவிட அருகில் வாழும் பெருவாரியான சகோதரர்களை சேரிகளில் ஒதுக்கி வைத்து விட்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க எந்த ஈனத்தமிழனுக்கும் அருகதையில்லை.
தமிழர்களே தயவு செய்து இந்த தருணத்திலாவது தமிழணர்வு கொள்ளுங்கள், சாதி,மத பிடியற்று வாழுங்கள் அல்லது இலங்கையில் சிங்கள இனவெறி இராணுவம் எறியும் குண்டுகளில் ஏதாவதொன்றை தமிழகத்திலும் உள்வாங்கி செத்து மடியுங்கள். (சாதிக்கட்டமைப்பு தகர்க்கபடாமல் அழுத்தமாக இலங்கையில் இருந்தால் அங்குள்ள தமிழர்கள் வாழ்வது தேவையில்லாதது).
சாதியோடு வாழும் தமிழன் வாழ்வதற்கு பதிலாக ஒருவன்கூட மீதியில்லாமல் செத்தொழிவது எவ்வளவோ மேல்.
கடவுள் பிடிபட்டார்!
நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறுகின்றார்கள் மதவாதிகள். கடவுளை “வெளியே தேடாதே உன்னுள்ளே தேடு’ என்றார்கள் சித்தர்கள். இறை நம்பிக்கையாளர்களின் இந்தத் தேடல் பல நூற்றாண்டு காலமாக நடந்துவருகிறதெனினும், “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்பதுதான் இதில் கிடைத்திருக்கும் கடைசி ரிசல்ட்.
இந்தப் பூவுலகில் கடவுள் மிகவும் பத்திரமாகப் பதுங்கியிருந்த ஒவ்வொரு மூடநம்பிக்கைக் குகையிலிருந்தும் புகை போட்டு அவரை வெளியேற்றி வருகின்றது அறிவியல். எனினும், இரண்டு இடங்களிலிருந்து மட்டும் அறிவியலால் “கடவுளை’ அப்புறப்படுத்த முடியவில்லை.
எல்லா வாதங்களிலும் தோற்ற பிறகு ஒரு பக்தன் முன்வைக்கும் கடைசி இரண்டு வாதங்கள் இந்த இடங்களை அடையாளம் காட்டுகின்றன. “நீங்க நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க, அந்த கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருது பாருங்க, அதாங்க கடவுள்!” “என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா?” ஒன்று உள்ளே, இன்னொன்று வெளியே.
புறவய உலகத்தின் “தோற்றம்’ குறித்த புதிரையும், அகவயமாக மனித மூளையில் தோன்றும் “உணர்வு’ குறித்த புதிரையும் விடுவிக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது அறிவியல். மதவாதிகளின் மொழியில் சொல்வதென்றால் பிரம்ம ரகசியத்தையும் ஆன்ம ரகசியத்தையும் “கண்டு’, பிறகு அதனை “விண்டு’ உலகத்திற்குச் சொல்லவும் முனைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
···
முதலில் “படைப்பு ரகசியம்’ பற்றிப் பார்ப்போம். கடந்த செப் 10 ம் தேதியன்று பிரான்சு நாட்டின் எல்லையில் பூமியின் 300 அடி ஆழத்தில், 17 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குறுக்கு நெடுக்கான குழாய்ப்பாதையினுள் (Large Hydron Collider)அணுத்துகள்களை மோதவிட்டு பிரம்மாண்டமான ஆராய்ச்சி ஒன்றைத் துவக்கியிருக்கின்றார்கள் உலக விஞ்ஞானிகள்.
“இந்த ஆராய்ச்சி தொடங்கினால் அந்தக் கணமே உலகம் அழிந்துவிடும்” என்று ஐரோப்பாவில் உள்ள அல்லேலுயா கூட்டத்தினர் முதல் ஒரிசாவில் உள்ள இந்துக்கள் வரை பலரும் தத்தம் தெய்வங்களைச் சரணடைந்தனர். இதனைப் பரபரப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள், “உலகம் அழியுமா, அழியாதா?” என்று அப்துல் கலாமிடம் விளக்கம் கேட்க, நவீன இந்தியாவின் அழித்தல் கடவுளான அப்துல் கலாம் “அழியாது’ என்று அருள்வாக்கு கொடுத்தார். அதன் பின்னர்தான் கோயிலை விட்டு வெளியே வந்தார்களாம் சிவபக்தர்கள். நாம் விசயத்துக்கு வருவோம்.
நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெருவெடிப்பினூடாக (Big bang) நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்து. இந்தக் கோட்பாட்டு முடிவை, அதாவது பெருவெடிப்பை, சிறிய அளவில் ஒரு சோதனைச் சாலையில் நடைமுறையில் நிகழ்த்திப் பார்ப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.
கிறிஸ்துவுக்கு முந்தையவரும் அணுக்கோட்பாட்டின் தந்தையுமான கிரேக்க தத்துவஞானி டெமாக்ரைடஸின் காலம் முதல் இன்று வரை இயற்பியல் ஆய்வு வெகு தூரம் வளர்ந்து விட்டது. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை; அணுக்கள் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனவை. புரோட்டான்களும் நியூட்ரான்களும் குவார்க், குளுவான்களால் ஆனவை என்கிறது இயற்பியல். குவார்க்குகள்தான் அடிப்படைத் துகள்களா, அல்லது அவை அதனினும் நுண்ணிய வேறொன்றினால் ஆனவையா? இந்தத் துகள்களுக்குப் பொருண்மையையும், கனத்தையும் (mass and weight) வழங்கியது எது? என்ற கேள்விகளுக்கும் விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றார்கள்.
புரோட்டான் உள்ளிட்ட துகள்களுக்கு வேறொரு துகள்தான் பொருண்மையை அளித்திருக்க வேண்டும் என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவர் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கணிப்பு. இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய அந்தத் துகள் அவருடைய பெயரால் “ஹிக்ஸ் துகள்’ என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் இந்த உலகத்திற்கு இந்த ஹிக்ஸ் துகள் பொருண்மையை (ட்ச்ண்ண்) வழங்கியிருக்கக்கூடும் என்பதால் அதனை “கடவுள் துகள்’ (எணிஞீ ணீச்ணூtடிஞிடூஞு) என்றும் வேடிக்கையாக அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது நடைபெற்றுவரும் ஆய்வு அந்த கடவுள் துகளைக் கண்டறிய விழைகிறது.
களிமண்ணை உருட்டினால் கடவுள்!கடவுளை உருட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்!
“ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே’ என்ற ஐன்ஸ்டினின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. புரோட்டான் துகள்கள் இந்த 20 கி.மீ நீளக் குழாய்க்குள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் மோதவிடப்படுகின்றன. இவ்வாறு மோதும்போது உருவாகக் கூடிய வரம்பற்ற ஆற்றலும், வெப்பமும் குளிரும், பிரபஞ்சம் தோன்றிய அந்தத் தருணத்திற்குப் பின் நாம் எப்போதும் காணாதவை. நம் பிரபஞ்சத்தின் விதிகளை எழுதிய துகள்களும் இந்த மோதுகையின் விளைவாக (collision) வெளிப்படக் கூடும். அத்துகள்களில் பல நாம் இதுவரை கண்டறியாதவையாக இருக்கக் கூடும். பல கோடி முறை நிகழவிருக்கும் இந்த மோதுகைகளில் ஏதேனும் ஒன்று அந்தக் “கடவுள் துகளை’த் தோற்றுவிக்கவும் கூடும். ஆயின், “இந்த உலகம் என்பது என்ன, நாம் ஏன் இங்கு வந்தோம்?” என்று தத்துவஞானிகள் பலர் எழுப்பிய கேள்விக்கான விடையை, அதாவது “பிரம்ம ரகசியத்தை’க் கண்டறிந்து விட முடியும்.
ஒருவேளை தோற்றுவிட்டால்? “40 ஆண்டுகளுக்கு முன் ஊகிக்கப்பட்ட ஒரு துகளைக் கண்டறிவதைக் காட்டிலும் எங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு தோல்விதான் சுவையானதாக இருக்கும். எறும்புக் கூட்டத்திலிருந்து மனிதர்களாகிய நம்மைப் பிரிப்பது எது? அறிவுத் தேட்டம்தானே!” என்கிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்.
“எறும்பையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான்” என்று கூறும் மதவாதிகளோ, கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல், “அவிசுவாசிகள்’ உருவாக்கிய கணினியின் வழியே, “தேவனாகப்பட்டவன் களிமண்ணை உருட்டி ஆதாமைப் படைத்த செய்தி’யையும், இத்தகைய சோதனைகளால் தேவன் படைத்த உலகம் அழிந்து போகக்கூடிய அபாயத்தையும் இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சித்தத்தினுள்ளே சதாசிவம் எங்கே?
வளி மண்டலத்திலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டாலும், மனிதனின் நரம்பு மண்டலத்திலிருந்து கடவுள் தானாக வெளியேறிவிடப் போவதில்லை. பக்தர்களின் மூளையில் எந்த இடத்தில் கடவுள் குடியிருக்கிறார்? மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் “காட்சி’ தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் “இறங்குகிறார்’ ? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றது நரம்பயல் மருத்துவம்.
“மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் “டெம்பரல் லோப்’ என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான “ஆன்மீக அனுபவங்கள்’ ஏற்படுகின்றன” என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.
இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ருடி அபால்டர் என்ற நாத்திகர், உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்கு ஆளானார். இன்னொரு நோயாளியான வென் திகே என்ற கிறித்தவப் பெண்ணோ, “தான் ஏசுவைப் பெற்றெடுத்திருப்பதாக’க் கூறினாள். மோசஸ், புனித பால் முதலானோர் “கண்ட’ காட்சிகளாக விவிலியத்தில் கூறப்படுபவை, வென் திகேயின் “அனுபவத்தை’ ஒத்திருப்பதால், இறைத்தூதர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக் கூடும் என்கிறார் பெர்சிங்கர்.
“செவன்த் டே அட்வன்டிஸ்ட் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எல்லன் ஒயிட் என்ற பெண்ணுக்கு (1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமும் உள்ளது. இதன் பிறகுதான் “ஏசு அவர் முன் “தோன்றத்’ தொடங்கினார்” என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ். மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய “இறையருள்’ கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய “உள்காயம்’ ஏற்படக்கூடும்.
“இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் “டெம்பரல் லோப்’ என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மத உணர்வுகள் பொங்குகின்றன” என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.
“ஒருவேளை மூளையில் கடவுள் “குடியிருக்கும்’ இந்தப் பகுதியை (God spot) அறுத்து அகற்றுவோமாகில், அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம்? அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா?” என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா மதவாதிகள்? இப்படிப்பட்ட ஆய்வுகள் தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவ அமைப்புகள் கூக்குரல் எழுப்பின. “கடவுளை விரைவாகத் தொடர்பு கொள்வதற்கான ஆன்டனாவாக எங்களுடைய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏன் கருதக்கூடாது?” என்று அவர்களை “சமாதானப்படுத்தினார்’ ராமச்சந்திரன். அப்படியொரு “ஆன்மீக ஆன்டனா’வை டாக்டர் பெர்சிங்கர் தயாரித்தும் விட்டார்.
கோவில் கனெக்சன் இல்லாமலேயே கடவுளை ஒளிபரப்பும் ஆன்டனா!
காட் ஹெல்மெட் கடவுள் தலைக்கவசம்! இதுதான் அவரது தயாரிப்பின் பெயர். மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கவசம், இதனை அணிந்திருப்பவரின் மூளையில் உள்ள டெம்பரல் லோப் பகுதியைக் குறி வைத்து காந்தப்புலங்களை உருவாக்க வல்லது. எவ்வித நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தனியறையில் இந்தக் “கவச’ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த அந்த நபர்கள் இந்த மூன்று நிமிடச் சோதனையின்போது தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப, தாங்கள் ஏசுவையோ புத்தனையோ கண்டதாகக் கூறினர்.
டேவிட்சன் என்ற விஞ்ஞானி, கிறித்தவ ஜெபக்கூட்டங்களில், ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று உளறத் தொடங்கும் பெண்களின் மூளைகளை ஸ்கேன் (MRI scan) செய்தார். அத்தருணத்தில் அவர்களது மூளையுடைய முன்பகுதி ஏறத்தாழ செயலிழந்திருப்பதைக் கண்டார். தன் மீதான சுயகட்டுப்பாட்டை மனிதனுக்கு வழங்கும் மூளையின் முன்பகுதி செயலிழப்பதால், மொழி பிறழ்ந்து வரும் இந்த உளறலைத்தான், “அந்நிய பாஷை’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றர்.
தியானத்தில் ஈடுபடும்போது, “தான்’ என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற “பாரிடல் லோப்’ செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.
இவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவு அலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் “அமானுஷ்யமானவை’ என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு (அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும், கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட “ஆன்மீக அனுபவங்களை’த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.
மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று “ஆன்மீக மூலக்கூறு’ என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், “இறை நரம்பியல்’ (neuro theology) ) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.
எனினும், தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைப்பது போல கடவுள் மாத்திரை சாப்பிட்டுக் கடவுளை வரவழைக்கலாம் என்றோ, பேதி மாத்திரை போன்றதொரு மாத்திரையால் மூளையிலிருந்து சுமுகமாகக் கடவுளை வெளியேற்றி விடலாம் என்றோ அறிவியல் கூறவில்லை. “மனித மூளையின் உள்ளே தோன்றும் மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத “பரவச உணர்வுகளோ’, வெளியே கடவுள் என்பவர் இருப்பதற்கான ஆதாரமாக முடியாது” என்பதையே இந்த ஆய்வுகள் நிறுவுகின்றன.
ஏசு இறங்கினாரா? எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வழங்கும் தேவ சாட்சியம்!
மதம் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் சிந்தனைக்கான காரணத்தையும் அதற்கான சமூக அடிப்படைகளையும் நரம்பியல் ஆராயவில்லை; ஆராயவும் முடியாது. மாறாக, அந்த நம்பிக்கை தோற்றுவிக்கும் உணர்வை, நமது நரம்பு மண்டலம் உயிர் வேதியல் மொழியில் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்பதை, அதாவது மத உணர்வின் பொருள் வடிவத்தைக் கண்டறியவே நரம்பியல் முயல்கின்றது.
பெர்சிங்கரின் ஹெல்மெட்டால் நாத்திகரின் மூளையில் கடவுள் நம்பிக்கையை வரவழைக்க முடியாது; ஆத்திகரின் மூளையிலிருந்து நம்பிக்கையை அகற்றவும் முடியாது. அவருடைய ஹெல்மெட் சோதனையில் பங்கேற்ற ஒரு கன்னியாஸ்திரீ, “ஏசு எனக்குள் இறங்கினாரா டாக்டர்? ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று சோதனை முடிந்தபின் பெர்சிங்கரிடம் கேட்டாராம். இறை நம்பிக்கையை ஒழிக்கும் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, அதற்கு நேரெதிரான விளைவை அந்த கன்னியாஸ்திரீயிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.
பொருளும் சிந்தனையும்: புரட்சி எனும் ஹைட்ரஜன் கொலைடர்!
இயற்பியல் கடவுள் துகளைக் கண்டறிந்தாலும், மத உணர்வின் உயிர் வேதியல் சங்கேதங்களை நரம்பியல் கண்டுபிடித்தாலும் இவற்றின் விளைவாகவெல்லாம் மத நம்பிக்கை தானே ஒழிந்து விடாது. மதம் என்ற அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால், ஒரு சமூகப் புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையிலிருந்து “கடவுளை’ அகற்ற முடியும் என்றார் மாமேதை மார்க்ஸ். அத்தகையதொரு புரட்சியை சாதிக்கும் பொருட்டு, மனித சமூகம் எனும் சோதனைச்சாலையில் நடத்த வேண்டியிருக்கும் ஆய்வும், மனிதர்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் இந்தச் “சோதனையும்’ ஒப்பீட்டளவில் கடினமானவை.
உலக முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு மென்மேலும் ஆட்படுத்தப்படும் மக்கள், அந்தத் துயரத்திலிருந்து விடுபடவும் முடியாமல், காரணமும் விளங்காமல், கடவுளிடமும் மதத்திடமும் சரணடைகிறார்கள். இந்தச் சுரண்டலால் ஆதாயமடையும் ஆளும் வர்க்கமோ மக்களை இந்த மடமைப் படுகுழியில் ஆழ அமிழ்த்துகிறது.
எந்த மேலை நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகள் கடவுளைத் துரத்துகின்றனவோ, அதே அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கடவுள் அரியணையில் ஏற்றப்படுகின்றார். அமெரிக்காவின் 5 மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு விவிலியம் கற்பிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாட்டில் பள்ளிகளில் மதக்கல்வி அளிக்க சட்டரீதியான தடை இருப்பதால், “கல்விச் சுதந்திரம்’ என்ற பெயரில் அறிவியல் வகுப்புக்குள் விவிலியம் நுழைக்கப்பட்டு விட்டது.
“டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுடன் விவிலியத்தின் படைப்புக் கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும்’ என்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவர், புஷ் கட்சியின் சார்பில் தற்போது குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சாரா பாலின். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிறித்தவ தீவிரவாதக் குழுக்கள், கோடிக்கணக்கில் டாலரை இறைத்து ஐரோப்பிய நாடுகளின் பள்ளிகளிலும் ஏசுவை இறக்கி வருகின்றன.
பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வின் பணியாற்றிய இடமும், உலகின் புகழ் பெற்ற அறிவியல் மையமுமான, பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி என்ற நிறுவனமே பள்ளிகளின் அறிவியல் வகுப்புகளில் பைபிளின் படைப்புக் கோட்பாட்டைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது (தி இந்து, செப், 18).
விவிலியக் கோட்பாடே அறிவியல் பூர்வமானது என்று சித்தரித்து, டார்வினைக் கேவலப்படுத்தும் குறுந்தகடுகளை இலட்சக்கணக்கில் இங்கிலாந்தின் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கின்றன அமெரிக்க இவான்ஜெலிகல் குழுக்கள். “குரங்குக்கும் மனிதனுக்கும் மூதாதை ஒன்று என்றால் மிச்சமுள்ள குரங்கெல்லாம் இன்னும் ஏன் மனிதனாகவில்லை?” என்று 1860 ஆம் ஆண்டில் டார்வினுக்கு எதிராக மூடப்பாதிரிகள் எழுப்பிய அதே நைந்துபோன கேள்வியை மீண்டும் எழுப்புகின்றன இந்தக் குறுந்தகடுகள். ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பைபிளுக்குப் பலியான மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பிரிட்டனின் புகழ் பெற்ற பகுத்தறிவாளருமான ரிச்சர்டு டாகின்ஸ்.
“அடுத்தது என்ன, உயிரியல் வகுப்பில் ஆதாமின் விலா எலும்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா?” என்று குமுறியிருக்கிறார் ஒரு அறிவியலாளர். இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விலா எலும்பை முறிக்க வேண்டும். அதுதான் டார்வினுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அறிவியல் பார்வை வளர்வதற்கும் கூட அதுதான் வழி.
தீபாவளி தேவையா?
இத்தனை ஆண்டுகால அறிவியல் முன்னேற்றத்திற்கும் பின்னால் நான் ஏன் தீபாவளி கொண்டாட வேண்டும் என்றுகூட கேள்வி கேட்கத் தெரியாமல் நிற்கும் நம் இனச்சகோதரர்களின் அறிவை என்னவென்று சொல்வது? நம் இனச்சகோதரர்கள் ஈழத்தில் தினம், குண்டுகளுக்கு மடிந்து கொண்டிருக்கும் பொழுது ஆரிய, பார்ப்பன புழுகு பண்டிகை நம்க்கு தேவைதானா?
எவனோ கொலை செய்யப்பட்டதற்கு பலகாரம் செய்து கொண்டாடினால் நாம் மனிதர்கள், மனித நேயம் கொண்டவர்கள் என்று சொன்னால் உலகம் எள்ளி நகையாடாதா?எதிரி வீட்டில் இழவு விழுந்தால்கூட நகைப்பதும், மகிழ்ச்சி கொண்டாடுவதும் மனித பண்பும் ஆகுமா?
நாட்டில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வறுமையில் உளன்று கொண்டிருக்க அவர்களை மேலும் கடனாளியாக்கும் கொடிய வழக்கம் அல்லவா இந்த பண்டிகை கொண்டாடுவது.
பறவைகளுக்கு இடைஞ்சல் செய்யக்கூடாது என்பதற்காகவே தீபாவளி கொண்டாத ஊர்கள் இந்நாட்டில்தானே உள்ளன?
வறுமையின் காரணமாக ஆண்டுக்கணக்கில் தீபாவளி கொண்டாடாமல் இருக்கும் ஊர்களும் இந்நாட்டில்தானே இருக்கின்றன?
இப்பண்டிகை கொண்டாட்டத்தினால், ஏற்கனவே விலைவாசி ஏற்றம் என்ற கொடிய நச்சால் நசிந்து போயிருக்கும் எத்தனை எத்தனை பெற்றோர்கள் மீண்டும் ஒருமுறை தம் குழந்தைகளின் முன்னால் தலைகுனிய நேரிடுகிறது என்பதை நாம் ஏன் நம் எண்ணத்தில் நிறுத்துவதில்லை. இப்படி எதை பற்றியும் கவலைப்படாமல், பண்டிகை கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கும் உங்களை போன்றவர்கள் நாட்டில் ஊழல், வறுமை, கொலை, குண்டுவெடிப்பு என எதை பற்றியும் வருத்தப்படுவதற்கு அருகதை இருக்கிறதா? நமக்கு மட்டும் ஏன் வருத்தங்கள் வருகின்றது என்று வருந்தக்கூட யோக்கியதை இருக்கிறதா? என்று கொஞ்சம் உங்கள் உள்ளத்தை கேட்டு பதில் காணுங்கள்.
இதே தொனியில் மக்களுக்காவே சிந்தித்து வாழ்ந்த மாபெரும் தலைவர் பெரியாரின் கூற்றையும், அவருடைய பேரன்பையும் இந்த கட்டுரையில் காணுங்கள்.
ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ – சொல்லுவதானாலும்
தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? –
என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.
தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி(இன்றைய நிலையில் குறைந்தது 50 கோடிபேராவது கொண்டாடியிருப்பார்கள்) மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி(இன்றைய நிலையில் 100 கோடிக்கும்)ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த
10 கோடியும் அனாவசியமாய் – துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும் கரியுமாக ஆக்கிய
வகையிலும் செலவாகி இருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில்
வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழை மக்கள்கள்,
சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர் முதலிய வெறி தரும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்துபோயிருந்த-சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனதில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.
இவ்வளவு மாத்திரமல்ல; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய்த் தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்டமடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு? தீபாவளிக்கு முன் சில நாட்களும், தீபாவளிக்குப் பின் சில நாட்களும், தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுகளிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்கள் படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு? அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு?
தந்தைபெரியார் – ‘குடிஅரசு’, தலையங்கம், 22.11.1931
நாய் வாழ்க்கை வாழ்க்கையும் தமிழர்களும்.
பணக்கார, நடுத்தர,ஏழை என எல்லோர் வீட்டிலும் நாயை வளர்க்கும் பட்சத்தில், நாய் மீது அன்பை பொழிவர், கொஞ்சம் நாய் மீது அன்பு கூடிவிட்டாலோ தாங்கள் சாப்பிடும் தட்டிலேகூட உணவு வழங்க தயங்க மாட்டார்கள் நம் மனிதர்கள்(இதில் தமிழர்களும் அடங்குவர்கள்தானே!), இவ்வளவு ஏன் தங்கள் படுக்கையிலே கூட உறங்க கூட நாயை அனுமதித்து விடுவர். ஆனால், நாய்க்கு பெண் வழங்கமாட்டார்கள், வழங்க முடியாது ஏனென்றால் அது இயற்கைக்கு முரணானது. நாய் மனித இனமல்ல.
இதையே சாதிக்குள் திருமணம் செய்து கொள்ளும், சாதிக்குள் மட்டும்தான் பெண் எடுப்பேன்/கொடுப்பேன் என்ற கொள்கை கொண்ட (ஈன)மனித தமிழர்கள் இன்னொரு சாதிக்காரனை நாயைவிட உயர்வாக என்ன நடத்திவிடுகிறான்?
இன்றைய தொலை-தொடர்பு/தொழில்நுட்ப உலகத்தில் தொடர்பு பெருகி விட்ட காரணத்தினாலும், நாகரீகம் என்ற போர்வையில் பேச வேண்டியிருக்கிறதே என்ற எண்ணத்திலும் வேற்று சாதி மனிதனோடு தொடர்பு ஏற்படும், நட்பு உருவாகும், வீட்டிற்கு அழைத்து செல்ல நேரிடும், உணவளிக்க நேரிடும், ஆனால், பெண் கொடுக்க மாட்டான், உறவு ஏற்படுத்தி கொள்ள மாட்டான், ஏனென்றால் அவன் வேறு சாதியாம்!
ஒரு சாதிக்காரன் இன்னோர் சாதிக்காரனை நாய் போல நடத்துகிறான், மற்றொருவன் இவனை நாய் போல எண்ணுகிறான். இதுதானே சங்கம் வைத்து சாதி வளர்க்கும் தமிழனின் நிலை.
இது நாய் பிழைப்பு அல்லாமல் வேறென்ன?
ஜெயலலிதா – எம்.ஜி.ஆரின் வாரிசா? பார்ப்பனர் வாரிசா?
ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று டெல்லியிலே பேரணி நடத்துகிறார்களாம்! இதற்கு ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வாரிசு என்றும் தன்னைக் கூறிக் கொள்கிறார், இந்தப் பார்ப்பன அம்மையார்.
அதே டெல்லியில் தான் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரை – ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத் கூட்டம், சூழ்ந்துக் கொண்டு தாக்க முயன்றது. மறந்துவிட்டதா? அந்தக் கும்பலுக்கு ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்புவது எம்.ஜி.ஆருக்கு செய்யும் மரியாதையா? துரோகமா?
எம்.ஜி.ஆரை மதிக்கிற, நேசிக்கிற, லட்சோப லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதற்காகவே இன்னும் அந்த பார்ப்பன அம்மையார் கட்சியில் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களைப் பார்த்து கேட்கிறோம், ‘தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது குமரி மாவட்டம் மண்டைக் காட்டில் ஆர்.எஸ்.எஸ். – இந்து முன்னணியினர் மதக் கலவரத்தை உருவாக்கியது நினைவிருக்கிறதா? அப்போது தமிழக சட்டமன்றத்திலே முதல்வர் எம்.ஜி.ஆர். என்ன கூறினார்?
“இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும். இந்து முன்னணிகாரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது போன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வதுபோல மற்ற மடாதிபதிகள் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது. அச்சுறுத்தல் பயிற்சிகளை அரசு ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக சொல்கிறேன், ஆர்.எஸ்.எஸ்.. தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கனவே என்.சி.சி. சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. இந்த பயிற்சிகளே போதும். ஆர்.எஸ்.எஸ்.. பயிற்சிகள் தேவை இல்லை.
(29.3.82 இல் சட்டமன்றத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர். பேசியது.)
– இப்படிப் பேசிவிட்டு டெல்லிக்குப் போன போதுதான், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.எஸ்.எஸ்..காரர்கள் முதல்வர் எம்.ஜி.ஆரை சூழ்ந்துக் கொண்டு தாக்க முயன்றார்கள்.
மண்டைக்காடு கலவரத் துக்குப் பிறகு அரசு – மாநகராட்சி, நகராட்சிகளுக்கு சொந்தமான பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு அனுமதி தரக்கூடாது என்று உத்தரவிட்டார் எம்.ஜி.ஆர்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது உங்கள் மதம் இந்து தானே என்று, கணக்கெடுப்பு அதிகாரிகள் கேட்டபோது, இல்லை, நான் இந்து இல்லை; எனது மதம் திராவிட மதம். அப்படியே பதிவு செய்யுங்கள் என்று கூறியவர் எம்.ஜி.ஆர்.
அந்த எம்.ஜி.ஆர். பெயரைக் கூறிக் கொண்டு, கட்சி நடத்திக் கொண்டு இருக்கும் ஜெயலலிதா, ராம பக்தி பேசிக் கொண்டு ‘இந்து’ மத வெறி சக்திகளுக்கு பாராட்டு வழங்கிக் கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர். பெயரைப் பயன்படுத்திக் கொண்டு பார்ப்பன சக்தியாக செயல்படும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். வாரிசா? பார்ப்பனர்களின் வாரிசா? உண்மை எம்.ஜி.ஆர். தொண்டர்களே, சிந்தித்துப் பாருங்கள்.
– நெல்லை மனித நீதிப் பாசறைக் கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் (டிச.30)
-
Archives
- October 2009 (1)
- September 2009 (11)
- August 2009 (4)
- July 2009 (2)
- June 2009 (1)
- May 2009 (1)
- April 2009 (3)
- March 2009 (10)
- February 2009 (1)
- January 2009 (7)
- December 2008 (3)
- November 2008 (20)
-
Categories
- அ மார்க்ஸ்
- அண்ணா
- அப்பா
- அமீர்
- அம்பேத்கர்
- அல்லா
- இந்தியா
- இந்து மதம்
- இனப்படுகொலை
- இனவெறி
- இலங்கை
- இழிவு
- இஸ்லாம்
- ஈழம்
- உலகத்தமிழ்
- எண்ணம்
- எம்.ஜி.ஆர்
- கடவுள்
- கடவுள் கற்பனை
- கம்யூனிசம்
- கருணாநிதி
- கர்த்தர்
- கலைஞர்
- கவிஞர்
- கவிதை
- காங்கிரஸ்
- காசுமீர்
- காதல்
- கிருத்துவம்
- கீற்று
- குடியரசு
- குண்டு வெடிப்பு
- சட்டக்கல்லூரி
- சாதி
- சிரிப்பு
- சீமான்
- சு சாமி
- சே
- ஜெயலலிதா
- டக்ளஸ் தேவானந்தா
- தமிழ்
- திருமணம்
- திருமா
- தீபாவளி
- தீவிரவாதம்
- நகைச்சுவை
- நையாண்டி
- பக்தி
- பன்றி காய்ச்சல்
- பாடல்
- பாரதிதாசன்
- பார்ப்பானியம்
- பிரபாகரன்
- புதிய ஜனநாயகம்
- புலிகள்
- பெரியார்
- போர் நிறுத்தம்
- மகிழ்நன்
- மத(ல)ம்
- மதம்
- மனிதம்
- மரணம்
- மாநாடு
- மாவீரர்கள்
- மிரட்டல்
- மூடநம்பிக்கை
- மொழி
- ரஜினி
- ரா(RAW)
- ராஜபக்சே
- ராஜிவ்
- ராமேஸ்வரம்
- லொள்ளு சபா
- விடுதலை
- விழித்தெழு
- Periyar
- Uncategorized
-
RSS
Entries RSS
Comments RSS