மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

அருந்ததியர் இனத்தில் பிறந்தது பாவமா?-பட்டதாரி வாலிபரின் பரிதாப நிலை

சாதி ஒழிக்கப்படும் வரை…………தாழ்த்தப்ப்ட்ட தமிழ்ச் சகோதரர்கள் இப்படித்தான் பாதிக்கப்படுவார்கள்

மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள கிராமம் வடிவேல்கரை. இந்த பஞ்சாயத்துக்குத்தான் மத்திய அரசு சமீபத்தில் நிர்மல் புரஸ்கார்விருது வழங்கியிருக்கிறது. அந்த விருது கிடைக்கக் காரணமாக இருந்தவர் அம்மாசி. இவர்தான் அந்த ஊருக்குத் துப்புரவுப் பணியாளர். குப்பைகளை இவர் கூட்டி, பெருக்கியதால் சுத்தமான கிராமம் என்ற பெருமை கிடைத்தது. அதற்கு நிர்மல் புரஸ்கார் விருதும் கிடைத்தது.

வடிவேல்கரையில் பிள்ளைமார், கள்ளர் சமூகத்தினர்தான் அதிகம். அங்கு அருந்ததியர் இன மக்கள் எழுபத்தைந்து குடும்பங்கள்தான் வசிக்கின்றன. அருந்ததியர் மக்களில் யாரும் படிக்காத நிலையில் தப்பித் தவறி துப்புரவுப் பணியாளரான அம்மாசி, தன் மகன் முருகனை லிட்டில் டிரஸ்ட் உதவியோடு எம்.காம். படிக்க வைத்தார். தற்போது தனியார் கல்லூரியில் பி.எட். படித்துக்கொண்டிருக்கும் முருகன்தான் இப்போது இந்தக் கிராமத்தின் ஹாட்டான டாபிக். முருகனை படிக்க விடக் கூடாது என்று ஊரே கூடி, அவரது படிப்புக்கு மூடு விழா காண திட்டமிட்டிருக்கிறது என்று மற்ற சாதி மக்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் அருந்ததியர் இன மக்கள். இந்த நிலையில் முருகன் தாக்குதலுக்கு உள்ளானார் என்ற செய்தியும் கிடைத்தது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தலையில் பதிமூன்று தையல்களோடு தரையில் படுத்திருந்த முருகனை சந்திக்க முடிந்தது. ஆறுதல் கூறிவிட்டு பேசத்தொடங்கினோம். ஈனஸ்வரத்தில் முருகனின் குரல் ஒலிக்கத் தொடங்கியது.

ஊர்ல எங்க அருந்ததியர் சமூகத்தில் நான் மட்டும்தான் எம்.காம். படித்து முடித்து, பி.எட். படிச்சுக்கிட்டு இருக்கேன். நான் ப்ளஸ் டூ படிக்கும் போதே முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ராமநாதன், ‘உனக்கு வேலை போட்டு தர்றேன் படிப்பை நிறுத்திருன்னு சொன்னாரு. நான் கேட்கலை. காலையில வீடு வீடா நியூஸ் பேப்பர் போடுவேன். அதுக்கப்புறம்தான் காலேஜுக்குப் போவேன். இரவு எங்க பிள்ளைகளுக்கு டியூஷன் எடுப்பேன். இதுதான் மற்ற சாதிக்காரர்களுக்குப் பிடிக்கலை.

நாங்க, எங்க காலனி வீட்டுக்குப் போகணும்னா ஒண்ணு கம்மாய்கரை வழியா வரணும். இல்லாட்டி ஊர் மந்தை வழியா வரணும். இப்ப ரிங்ரோடு போடுறதுனால கண்மாய்க் கரை வழி அடைபட்டுப் போச்சு. ஊர் மந்தை வழியாத்தான் வரணும். அப்படித்தான் நான், ஆகஸ்ட் 13-ம் தேதியன்னிக்கு எங்க வீட்டுக்கு மந்தை வழியா சைக்கிள்ல போனேன். மந்தையில் கூடி நின்ற மற்ற சாதிப் பசங்க என்னை வழிமறிச்சு, ‘உனக்கு எத்தனை தடவை சொல்லுறதுடா. இறங்கி உருட்டிக்கிட்டு போனு சொல்லி, தள்ளி விட்டதோட, ‘படிச்சத் திமிறான்னு சொல்லிகடக்கால் கட்டுறதுக்குப் பயன்படும் கட்டுக்கல்லை தூக்கி ஆனந்த்ங்கிற பையன் என் தலையில போட்டுட்டான்.

மண்டை உடைஞ்சு ரத்தம் ஆறு மாதிரி ஓடுது. ஊரே நின்னு வேடிக்கை பாத்துச்சு. என்னன்னு கேட்க நாதியில்ல. ரத்தம் வழிஞ்சி ஓடுறதைப் பார்த்து பயந்துபோன ஆனந்த், சிலம்பரசன், லட்சுமணன் மூணு பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனாங்க. நானும் எங்க அப்பாவும் அடிச்சோம்னு சொல்லி அவனுங்களே ரத்த காயத்தை ஏற்படுத்திக்கிட்டு போய் புகார் கொடுத்தாங்க. சம்பவம் நடந்து நான்கு மணி நேரம் கழிச்சுத்தான் எனக்கே சுயநினைவு வந்தது. அதன் பிறகுதான் போலீஸ்ல புகார் கொடுத்தேன்.

நாகமலை புதுக்கோட்டை போலீஸ் என் மேலேயும் எங்க அப்பா மேலேயும் கொலை முயற்சி வழக்கு பதிவு பண்ணிட்டதாச் சொல்றாங்க. என்னையும் அப்பாவையும் கைது பண்ணச் சொல்லி சில அரசியல் கட்சிகள் பிரஷர் கொடுக்கறதாவும் சொல்றாங்க.

சுதந்திர இந்தியாவில் நான் தலித் என்பதற்காக கஷ்டங்களை அனுபவிக்கிறேன். எப்படியாவது என்னை படிக்க விடக்கூடாது என்பது தான் அந்த மக்களோட எண்ணம். நான் டியூஷன் எடுத்து எங்க காலனியில் இப்பத்தான் அஞ்சு பேர் பத்தாவது படிக்கிறாங்க. நாங்க இன்னமும் செருப்புப் போட்டுக்கிட்டு ஊருக்குள்ள போகக் கூடாது. சைக்கிள் ஓட்டிக்கிட்டு போகக் கூடாது. டீக்கடையில் இரட்டை டம்ளர் இருக்கு. தமிழ்நாட்டில் சாதி என்ற ஆயுதத்தால், தமிழனுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்டால், மற்ற நாடுகளில் மட்டும் தமிழனுக்கு உரிமை வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்?” என்று அழுதுகொண்டே கேட்டார் முருகன். முருகனின் அருகில் இருந்த பாண்டி ரொம்பவே ஆவேசப்பட்டார். முருகனை அடிச்ச அடுத்த நாள் காலையில் 8.10 மணிக்கு பஸ் வந்தது. அதுலதான் வேலைக்குப் போறவுங்க, பள்ளிக்கூடம் போறவுங்க எல்லாம் போவோம். எங்க மக்கள் எல்லாத்தையும் கீழே இறக்கி விட்டுட்டு மற்ற சாதிக்காரங்க மட்டும் பஸ்ல போனாங்க. நாங்க மூணு கிலோமீட்டர் நடந்து போயி நாகமலை புதுக்கோட்டைக்குச் சென்று பிறகு பஸ் பிடிச்சுப் போனோம்.

எங்க உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்ல. காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் சரியானபடி நடவடிக்கை எடுக்கலைன்னா ஊரை காலி செஞ்சு, முதல்வர் வீடு முன்னாடி எங்களுக்குச் சுதந்திரம் வேணும்னு போராட்டம் நடத்தப் போறோம்என்றார் பாண்டி படபடப்போடு.

லிட்டில் டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி பர்வதாவர்த்தினி நம்மிடம், “அருந்ததியர் சமூகம் படிக்கக் கூடாது என்பதுதான் வடிவேல்கரை ஊர் மக்களின் நோக்கம். முருகன் படிப்பை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும். அவனும் நம்ம ஊர் வேலைக்காரனாக இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஊர் மந்தை வழியாக சைக்கிளில் சென்ற முருகன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அப்பதான் மற்ற அருந்ததியர் இன மக்களுக்கும் பயம் வரும்னு இப்படிச் செய்யறாங்க. இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இப்படியொரு கொடுமை நடக்குது. அரசாங்கம் என்ன செய்யப் போகிறது. ஆதிக்கச் சாதியினர் ஊர்ல தலைகட்டு வரி போட்டு இந்த கேஸ்ல, அருந்ததியினர் ஜெயிக்கக் கூடாதுன்னு ஒன்றரை லட்ச ரூபாய் வரை பணம் திரட்டியிருக்காங்க.

ஊர் மந்தையில் வைத்து இவ்வளவு பெரிய கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், ‘போலீஸார் அவர்களுக்குள் குடும்பச் சண்டைஎன்று சொல்லுகிறார்கள். ஒரு தனி மனிதனோட அடிப்படை உரிமைகள் அனைத்தும் அந்த ஊரில் முற்றிலும் மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மைஎன்கிறார் அந்தச் சமூக சேவகி.

வடிவேல்கரை பஞ்சாயத்துத் தலைவர் ஆறுமுகத்திடம் பேசினோம். நாங்க யாரையும் சைக்கிள்ல போகக்கூடாது, செருப்புப் போடக் கூடாதுன்னு சொன்னதே கிடையாது. எங்க ஊர் அமைதியான ஊர். நாங்க சாதி வேற்றுமையில்லாம தாயா பிள்ளையாத்தான் ஒற்றுமையா இருக்கோம். முருகன் குடும்பம்தான் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தை வியாபார நோக்கத்தோட பயன்படுத்துறாங்க. எப்பப் பார்த்தாலும் எங்களை மிரட்டுறதுதான் அவங்களுக்குத் தொழில். இதுவரைக்கும் நாலு பி.சி.ஆர். கேஸ் கொடுத்து, முதல் கேஸ்ல நிவாரணம் பணம் வாங்கியிருக்கு அந்தக் குடும்பம். எந்தப் பிரச்னையும் வந்துடக் கூடாதுன்னுதான் கலெக்டர்கிட்டே சொல்லி அமைதிகமிட்டி போடச் சொல்லியிருக்கேன். தனிப்பட்ட பிரச்னையை சாதிப் பிரச்னையாக மாற்றப் பார்க்கிறார்கள். யாரு தப்பு செஞ்சாலும் தப்பு, தப்புதான். ரெண்டு பேரும் தனிப்பட்ட பிரச்னைக்கு மல்லுக்கட்டி புரண்டிருக்கானுங்க. போலீஸ் நேரடியாக வந்து விசாரணை பண்ணிட்டு போயிருக்காங்கஎன விளக்கம் கொடுத்தார் ஆறுமுகம்.

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=519&rid=26

September 11, 2009 - Posted by | அம்பேத்கர், இந்தியா, இந்து மதம், சாதி

11 Comments »

 1. Tholar, we can take this issue and struggle till the Murugan gets justice. – rajiv rufus advocate, rajivrufus@yahoo.com

  Comment by Anonymous | September 15, 2009 | Reply

 2. Aathikka saathiyinarin iththakaiya kodumaikalukku ethiraaka poraada vendum.

  porattankalai melum kondu sella vaazhthukkal

  Comment by PROLETARIAN | September 16, 2009 | Reply

 3. தோழர்களே வணக்கம்,

  நாம் மனிதர்களாக வாழவேண்டுமானால் முதலில் சாதியமைப்பைத் தகர்க்கவேண்டும். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையிலுள்ள வடிவேல்கரையில் சாதி இந்துக்களான கள்ளர்களும் பிள்ளைமார்களும் சேர்ந்து கடைப்பிடிக்கும் அருந்ததியர்களுக்கேதிரான தீண்டாமையை ஒழித்தாக வேண்டும்.

  சத்தியத்தை முதலில் தகர்க்க வேண்டும்.

  இதற்கு முதலில் பார்ப்பனின் தொடர்பை நீக்கவேண்டும்.

  பார்ப்பனியத்தை எதிர்க்கவேண்டும்.

  பார்ப்பன மதமாகிய இந்து மதத்தை ஒழிக்க வேண்டும். நாம் இன்னும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால் பார்ப்பானும் அவர்களின் அடிமைகளாகிய சாதி இந்துக்களும் தீண்டாமையை மென்மேலும் கடைபிடிப்பார்கள். நம்மையெல்லாம் அடிமைகளாக வேசி மகன்களாக வைத்திருக்கும் இந்து மதத்தைப் புறக்கணிப்பது ஒன்றுதான் தீர்வு. இந்த கருத்துக்களையே தந்தை பெரியாரும் புரட்சியாளர் அம்பேத்கரும் கூறி இருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்தியாவுடன் வாழும்வரை நாம் சாதியத்தால் பிரிக்கப்படுவோம் என்பது உறுதி. காரணம் இந்தியாவை ஆழ்வது பார்ப்பனர்களே.

  நன்றியுடன்
  முனைவர் சே. ராமகிருஷ்ணன்

  Comment by Tamil | September 18, 2009 | Reply

 4. சே…

  என்னது இவ்வளவு கொடுமையா இருக்கு :( இன்னுமா இப்படியெல்லாம் நடக்குது? பாவம் அவ்வாலிபர். ஒருவர் படிக்க ஆசைப்படுவது தவறா?

  Comment by Mãstän | September 18, 2009 | Reply

 5. "பார்ப்பன மதமாகிய இந்து மதத்தை ஒழிக்க வேண்டும். நாம் இன்னும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால் பார்ப்பானும் அவர்களின் அடிமைகளாகிய சாதி இந்துக்களும் தீண்டாமையை மென்மேலும் கடைபிடிப்பார்கள். நம்மையெல்லாம் அடிமைகளாக வேசி மகன்களாக வைத்திருக்கும் இந்து மதத்தைப் புறக்கணிப்பது ஒன்றுதான் தீர்வு."

  ஹாஹா…ராமசாமியே வந்து மண்ணை கவ்விட்டு போனத மறந்துட்டீங்களா…..
  முயன்று பாருங்கள்…
  வர வர பெரியார் தொண்டர்களுக்கு நாகரிகமும் பண்பும் தேய்ந்து போய்க் கொண்டிருப்பதை உங்கள் பின்னூட்டம் உணர்த்துகிறது.
  சாதி ஒழிய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது !

  Comment by கபிலன் | September 18, 2009 | Reply

 6. //பார்ப்பன மதமாகிய இந்து மதத்தை ஒழிக்க வேண்டும். நாம் இன்னும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால் பார்ப்பானும் அவர்களின் அடிமைகளாகிய சாதி இந்துக்களும் தீண்டாமையை மென்மேலும் கடைபிடிப்பார்கள். நம்மையெல்லாம் அடிமைகளாக வேசி மகன்களாக வைத்திருக்கும் இந்து மதத்தைப் புறக்கணிப்பது ஒன்றுதான் தீர்வு. இந்த கருத்துக்களையே தந்தை பெரியாரும் புரட்சியாளர் அம்பேத்கரும் கூறி இருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்தியாவுடன் வாழும்வரை நாம் சாதியத்தால் பிரிக்கப்படுவோம் என்பது உறுதி. காரணம் இந்தியாவை ஆழ்வது பார்ப்பனர்களே.
  //
  இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை விட்டு விட்டு இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்று சொல்வது சிறுபிள்ளை தனமாக தெரியவில்லையா?.

  அப்படி என்றால் முஸ்லீம்,ஏசுவை வணங்குவர்கள் இந்த மாதிரி தவறை செய்வதில்லையா..?

  இப்படி நான் சொல்வதால் அவர்கள் செய்தது சரி என்று சொல்லவில்லை.மதரீதியாக இல்லாமல் யோசிக்கவேண்டும்.

  Comment by சுரேஷ்குமார் | September 18, 2009 | Reply

 7. பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி!!

  Comment by மகிழ்நன் | September 18, 2009 | Reply

 8. //Aathikka saathiyinarin iththakaiya kodumaikalukku ethiraaka poraada vendum.
  porattankalai melum kondu sella vaazhthukkal//

  ஆதிக்க சாதித்திமிரினை அடக்குவதற்கு கண்டிப்பாக போராடத்துணிவு கொண்டு போராட வேண்டும்….களமாட காத்திருக்கிறோம்..எங்களால் இயன்றதை செய்து வருகிறோம்….ஆனால், கணிணி முன் அமர்ந்து பின்னூட்டமிடுவதோடு, கொஞ்சம் உச் கொட்டிவிட்டு செல்வதுமாக இருந்தால் இந்த திமிர்தனத்திற்கு பதில் தர இயலாது….உங்கள் உணர்வுக்கு நன்றி…

  சாதி என்னும் இருள் உடையும், மனிதநேயம் என்னும் ஒளி பிறக்கும்

  Comment by மகிழ்நன் | September 18, 2009 | Reply

 9. தோழர் முனைவர் சே. ராமகிருஷ்ணன்….

  பார்ப்பனீயத்திற்கு பல்லக்கு தூக்கும் ஆதிக்க சாதி திமிருக்கு எதிராக இயக்கமாக இயங்காவிடில் நமக்கு விடுதலை என்பது எட்டாக்கனி…தமிழ்த்தேசியம் என்பது பகல் கனவு

  Comment by மகிழ்நன் | September 18, 2009 | Reply

 10. ///இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை விட்டு விட்டு இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்று சொல்வது சிறுபிள்ளை தனமாக தெரியவில்லையா?.

  பிரச்சினையை கொண்டு தீர்வை அணுக வேண்டும் தோழர்….
  சாதிய பிரச்சினைக்கு தீர்வு இந்துமத ஒழிப்பு…
  சாதியம் இந்து மதத்தின் மூச்சு, மூச்சை பிடுங்கிவிட்டால்….துள்ளல் தானாய் அடங்கிவிடும்..

  //அப்படி என்றால் முஸ்லீம்,ஏசுவை வணங்குவர்கள் இந்த மாதிரி தவறை செய்வதில்லையா..?///

  உலக அமைதிக்கு மதங்கள் ஒழிந்து மனிதம் ஓங்குவதே தீர்வு…தீர்வில் மிகுந்த அக்கறையிருந்தால் சாதி, மத ஒழிப்பில் களம் காணுங்கள்….

  “உச்” கொட்டி கொண்டிருப்பதால் எந்த வித பலனும் ஏற்படாது

  Comment by மகிழ்நன் | September 18, 2009 | Reply

 11. ###################################
  //இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை விட்டு விட்டு இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்று சொல்வது சிறுபிள்ளை தனமாக தெரியவில்லையா?.

  பிரச்சினையை கொண்டு தீர்வை அணுக வேண்டும் தோழர்….
  சாதிய பிரச்சினைக்கு தீர்வு இந்துமத ஒழிப்பு…
  சாதியம் இந்து மதத்தின் மூச்சு, மூச்சை பிடுங்கிவிட்டால்….துள்ளல் தானாய் அடங்கிவிடும்..

  //அப்படி என்றால் முஸ்லீம்,ஏசுவை வணங்குவர்கள் இந்த மாதிரி தவறை செய்வதில்லையா..?///

  உலக அமைதிக்கு மதங்கள் ஒழிந்து மனிதம் ஓங்குவதே தீர்வு…தீர்வில் மிகுந்த அக்கறையிருந்தால் சாதி, மத ஒழிப்பில் களம் காணுங்கள்….
  ###################################
  பிரச்சனைக்கு தீர்வு என்பது சாதி ஓழிப்பு என்பதை மறுப்பதற்கில்லை.நீங்கள் இந்து மதம் ஓழிப்பு என்று சொன்னதுதான் தவறு!.ஏன் மற்ற மதங்களில் சாதி பார்ப்பது கிடையாதா?.நானும் சாதி என்னும் சாத்தான் ஓழியவேண்டும் அதற்க்கு என்ன வழி என்பதை என் பதிவுகளிலும் சொல்லி உள்ளேன்.உங்கள் புரிதலில் தவறு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

  Comment by சுரேஷ்குமார் | September 19, 2009 | Reply


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: