மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

தமிழினத்திற்கு ஒவ்வாதது பக்தி…………..தேவை நமக்கு புத்தி………….

தோழர்களே! ஈழ மக்களின் அவலத்தில் உள்ளம் மிகுந்த ரணமாகியிருக்கிறது. இந்த அவலமான வருத்தமான தருணத்தில் நம் மக்கள் அனைவருமே உண்மையான அக்கறையோடு இருக்கிறார்களா?என்பது சுய ஆய்வுக்குரியது. கொஞ்சம் இந்த இணைப்புகளை பார்க்கவும்.

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா

சுவிஸில் உள்ள இந்து ஆலயங்களில் தாயகமக்கள் அமைதி வேண்டி அமைதிப் பிராத்தனை

வானில் அம்மன் தோன்றும் அரிய புகைப்படம்

3 லட்சம் மக்களை முள்வேலி கம்பிக்குள் அடைத்து வைத்திருக்கும் சூழலில் பிரார்த்தனை போன்ற ஒன்றுக்கும் உதவாத காரியங்களில் ஈடுபட்டு கொண்டிருந்தால் வரலாறு நம்மை மன்னிக்குமா?

கடைசி நாளில் 10,000 மேற்பட்ட தமிழ்மக்கள் சாக கிடந்த வேளையில் வந்து காப்பாதாத கடவுளை இன்னும் நம்பித்தான் ஆக வேண்டுமா?

மாதாவாகட்டும்,ஏசுவாகட்டும், முருகனாகட்டும், அல்லாவாகட்டும் எவனும் தமிழனத்தின் இக்கட்டான சூழலில் வரவில்லையே………..இன்னும் எதற்கு இந்த பக்தி போதை….நம்பி கெட்டது போதாதா?

பக்தி என்னும் மூடத்தன்த்திற்கு மகுடம் போல, சாதி என்னும் கொடூரம் நம் உள்ளங்களில் உள்ளதே?

ஈழத்தமிழருக்காய் குரல் கொடுக்கும் எத்தனை தமிழர்கள் தங்கள் வீட்டில், வாழ்க்கையில் சாதி பார்க்காமல் இருக்கிறார்கள்…..வீட்டில் சாதியை பின்பற்றுபவன் வெளியில் வந்து தமிழன் என்று கத்தினால் கொஞ்சம் நெருடலாகத்தானே இருக்கிறது….

ஈழத்தமிழர்களும் இதில் விதிவிலக்கல்ல, இவ்வளவு ரணங்கள், வலிகள் இருந்தும் சாதியை பின்பற்றுவதில், பாதுகாப்பதில் அவ்வளவு ஆர்வத்தோடு திருமணத்திற்கு துணைதேடும் நிலையில் நாமெல்லாம் தமிழர்கள் என்பது கொஞ்சம் போலியாக தோன்றவில்லையா…..?

தமிழ் பேசுவதால் மட்டும் நாம் தமிழர்களாகிவிட முடியாது. சாதி, மதம் பார்க்காமல், பின்பற்றாமல் இருந்தால்தான் நாம் தமிழர்கள்…கடவுள் என்ற மூடநம்பிக்கையிலிருந்து விடுபட்டால்தான் நாம் மனிதர்கள்……….

நாம் தமிழராக சாதியை விடுங்கள், மதத்தை துரத்தி அடியுங்கள்…….தமிழில் உரிமை கோரும் மனிதராக உயருங்கள்……

தமிழர்களே திருந்துங்கள்…பெரியாரின் பாதைக்கு திரும்புங்கள்…

பகுத்தறிவுப்பாதை தேர்ந்தெடுங்கள்…………..

தமிழினத்திற்கு ஒவ்வாதது பக்தி…………..தேவை நமக்கு புத்தி………….

September 1, 2009 - Posted by | ஈழம், எண்ணம், கடவுள், கடவுள் கற்பனை, கர்த்தர், தமிழ், பக்தி, பெரியார்

5 Comments »

 1. மகிழ்நன், முதலில் புத்தியின் மேல் உள்ள பக்தியை அனைத்து விடயங்களிலும் கொண்டுவராதீர்கள். ஜாதி, மதம், கடவுள் நம்பிக்கை அனைத்தையும் விட்டொழித்தால் மட்டும்தான் ஈழத்திற்கு குரல் கொடுக்க தகுதியானவன் என்று கூறும் உங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை. ஆலய வழிபாட்டினால் ஒரு மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது என்பது நிதர்சனமாக இருந்தாலும், அவரவருக்கு அவரவர் வழி நியாயங்கள். அடிபட்டு இருக்கும் ஒருவனை மேலும் துன்புறுத்துவது நமக்கு அழகு இல்லை.

  Comment by மணிகண்டன் | September 1, 2009 | Reply

 2. காட்சி கொடுத்த அம்மன் சற்றுத் தெளிவாகக் காட்சி கொடுத்து வீண்
  சந்தேகங்களையும் தீர்த்திருக்கலாம்.

  Comment by யோகன் பாரிஸ்(Johan-Paris) | September 1, 2009 | Reply

 3. கன்னடத்துப் பெரியார் தமிழினவாதியா?
  தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என சாடியவர் பெரியார். தமிழுக்கும் பெரியாருக்கும் சம்பந்தமே இல்லை…பெரியாருக்கும் பார்ப்பன எதிர்ப்புக்கும் மட்டும் தான் சம்பந்தம். குழப்பிக் கொள்ள வேண்டாம்.

  கடவுளுக்கும் ஈழத்துக்கும் எதுக்கு முடிச்சு போடுறீங்க?

  இப்படி வேண்டுமானால் சொல்லாமலாம்..கடவுள் ஈழத்து துயர் அறிந்து, பகுத்தறிவு ஆட்சியாளர்களை பதவியில் அமர்த்தினார். ஆனால்,திராவிட பகுத்தறிவு சிங்கங்கள் பணம் பதவி கொடுத்தா கொள்கையை விற்கும் மானமுள்ள திராவிடர்கள் என்பதை மறந்து ஆட்சியை கொடுத்தது தான் கடவுள் செய்த தவறு!

  Comment by கபிலன் | September 1, 2009 | Reply

 4. பின்னூட்டமிட்டு கருத்துக்களை பதிந்தவர்களுக்கு நன்றி!!!

  ஈழத்தில் அவதிப்படும் மக்களுக்கு குரல் கொடுப்பதாக சொல்லும் இவர்களது உணர்வில் நேர்மையில்லையே என்பதுதான் எனது வருத்தம், தன்னோடு வாழும் சக மனிதனை, தமிழனை மதிக்க தெரியாதவனை எப்படி உண்மையான உணர்வோடிருக்கிறான் என நம்புவது…
  தமிழன் என்ற உணர்வுக்குள் வரும்பொழுது இவர்களை கேள்வி கேட்காவிட்டால், பின் எப்படி எப்பொழுது கேள்வி கேட்பது.

  தோழர் சீமான் ஒரு முறை மேடையில் பேசும்பொழுது கூறினார், வேற்று மொழிக்காரனோடு திருமண உறவு கொள்ளும் பொழுது வெட்கப்படாத தமிழன் தன் சொந்த இனத்தில் திருமண உறவு கொள்ள வெட்கப்படும் ஆணாக ஆகிவிட்டானே என்று வருத்தத்தோடு பதிவு செய்தார்…..

  Comment by மகிழ்நன் | September 1, 2009 | Reply

 5. அதோடு ஈழமக்களை காயப்படுத்த வேண்டும் என்பதற்காக இதை குறிப்பிட வில்லை…..3 லட்சம் மக்கள் முள்வேலி கம்பிக்குள் அடைப்பட்டும் கிடக்கும் பொழுது திருவிழா ஒரு கேடா!!!!
  கடவுள் என்ற திருட்டு போலி கற்பனையை இதற்கு பிறகும் புரிந்து கொள்ளவில்லையானால்….நாம் எங்கு போய் முட்டுவது…

  மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த பொழுது…….
  கடவுள் இல்லை என்ற உண்மையை தாண்டி அப்படி ஒரு கடவுள் இருந்து தொலைக்கக்கூடாதா? இந்த மக்களை காப்பாற்றக்கூடாதா?என்று என் உள்ளமும் ஏங்கியது… ஆனால்,என்ன செய்வது…கடவுள் தான் இல்லையென்றாகிவிட்டதே

  Comment by மகிழ்நன் | September 1, 2009 | Reply


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: