மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களுக்கு,

இன்றைய சிக்கலான சூழலில் தமிழுணர்வோடு மின்னஞ்சல்தான் எழுத முடிகிறது. தமிழுணர்வு என்பது கையாலாகத்தனத்துக்கு ஒரு எடுத்துக்காட்டோ? என்று கூட தோன்றுகிறது. தமிழன் யார்? தமிழனின் பழமை/ பெருமை என்ன? இதற்கு முன் நடந்த பிரச்சினைகள் என்ன? நீங்கள் என்ன சாதித்தீர்கள்? என்ன செய்யவில்லை? மற்றவர்கள் என்ன சாதித்தார்கள்? என்ன துரோகம் செய்தார்கள்? என்றெல்லாம் பட்டியலிட்டு காட்டி ஒருவரை ஒருவர் விமர்சித்து நம் துயரை மேலும் துயராக்க விரும்பவில்லை. அல்லது பட்டியலிடுவதற்கு எனக்கு போதிய அறிவோ, என்னிடம் தகவலோ இல்லை என்று கூட நினைத்து கொள்ளலாம்.

ஆனால்,

இந்திய வல்லாதிக்கம் திட்டமிட்டு தமிழர்களின் உணர்வுகளை கொச்சைபடுத்தி விட்டது, கோரிக்கைகளை உதாசினப்படுத்திவிட்டது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்திருக்கிறான். நீங்களும் உங்களுடைய ஏமாற்றம் என்ற ஒற்றைச்சொல்லில் அதை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

எம்மை பொருத்தவரை போராளிகளும் தமிழர்களே! அவர்கள் போராளிகளாக தூண்டிய சிங்கள இனவெறிதான் தமிழின நீதிமன்றத்தில் குற்றவாளி. இத்தனை ஆண்டுகாலமாக கொடுமைகளை இழைத்துவிட்டு, இப்பொழுது உரிமைக்கு போராட வந்தவர்களையும் அழிப்பது என்பது சிங்கள இனவெறியின் வெற்றிதானே தவிர வேறில்லை. இதற்கு இந்திய அரசு துணைபோவதுஎன்பது தமிழர்களை இளித்தவாயர்கள் என்று கருதுவதுதானேயன்றி வேறென்ன இருக்க முடியும்? தமிழர்கள் இந்திய/பார்ப்பன வல்லாதிக்கத்திற்கு கட்டுபட்டு மொழியை, பண்பாட்டை தன்னடையாளத்தை இழந்தது போதாதா? உயிரையும் இழக்க வேண்டுமா,என்ன? ஈழத்தமிழன் என் சகோதரன் அதை எத்தனை வல்லாதிக்கம் வந்தாலும் மறைத்துவிட முடியாது. எத்தனை பார்ப்பன வந்தேறி கூட்டம் அறிக்கை விட்டாலும் அழிக்க இயலாது.

இத்தனை வலிதோய்ந்த சொறகளுக்குள்ளும் இருப்பது கீழுள்ளவைதான்

ஈழத்தமிழனுக்கு செய்யும் துரோகம் என்பது ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் செய்யும் துரோகம், அவர்கள்தான் தமிழின் பெருமை, தமிழை உலகுக்கு எடுத்து சொன்னவர்கள், என்னை பொருத்தவரை இந்தியன் என்று சொல்லி கொள்வதில் பெருமைப்பட்டதில்லை, ஆனால் எதிர்க்கவில்லை. ஆனால், இது தொடருமானால் அதுவும் நிகழ வாய்ப்புண்டு என்பதை நீங்கள் அறியாதது அல்ல. இது என்னுடைய சொந்த குரல் மட்டுமல்ல உணர்வுள்ள ஒவ்வொரு தமிழர்களின் கண்ணில் வழியும் கண்ணீரில் உள்ளது, சொற்களாக வெளிப்பட்டுவிடாமல் பாதுகாப்பது உங்கள் கடமை. திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிடும் பொழுது சொன்ன காரணங்கள் தீர்க்கபடாமல் இருப்பதாக கூறினார். ஆனால், இன்றைய நிலையில் காரணங்கள் கூடிக்கொண்டே இருக்கின்றன துரோக பட்டியலில்

இறுதியாக ஒன்றே ஒன்று,

நீங்கள் தமிழர்களின் முதல்வர், இந்திய துணைக்கண்டத்தில் ஏதோ ஒரு பகுதியை நிர்வகிக்கும் நிர்வாகி அல்ல. தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.

January 19, 2009 - Posted by | இந்து மதம், தமிழ், திருமா, புலிகள், மாவீரர்கள்

2 Comments »

  1. என் மனதில் உள்ள கருத்தை அப்படியே பதித்ததுபோல் உள்ளதுஇலங்கை தாயொழி தமிழ் இனத்தையே அழிச்சிகிட்டு இருக்கானுங்கஅதுக்கு ஒத்துஉதுறானுங்க இந்த ஈன இந்தியா, இதற்கு எல்லாம் ஒருநாள் இந்தியா பதில் சொல்ல வேண்டியது வரும் தமிழர்களே இனி வரும் குடியரசு தினத்தையும், சுதந்திர தினத்தையும் புறக்கணிப்போம், புரியாத தேவையில்லாத பாடல்களான ஜன கன மன, வந்தேமாதரம் போன்ற பாடல்களையும் புறக்கணிப்போம், இனி தமிழகத்தில் ஒரு வார்தைகூட இந்தியில் இல்லாமல் செய்வோம், ஆரியமொழியான இந்தியை அடியோடு விரட்டுவோம்,அறிவியல்மொழியான ஆங்கிலத்தை அளவோடு வைத்துகொள்வோம்மேலும் திருமா போன்ற தமிழ் தலைவர்கள் இலங்கை தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதம்/போராட்டம் இருந்தால் உடனே வோட்டுக்காகனு சொல்லிடவேண்டியது, தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் ஒருத்தன் நல்லது பண்ணினா உடனே வோட்டுக்காகனு வச பாடவேண்டியது, இதை நாங்கள் வன்மையாககண்டிக்கிறோம்

    Comment by தாமிரபரணி | January 20, 2009 | Reply

  2. ஐயா வணக்கம்.இந்த இடுகையை எமது வலைப்பதிவில் மறுப்பதிவு செய்துள்ளேன். எமது மலேசியத் தமிழருக்கு இந்தச் செய்தி சென்றுசேர வேண்டும் என்ற எண்ணத்தில் இதனைச் செய்துள்ளேன்.மிக்க நன்றி.

    Comment by ஆய்தன் | January 21, 2009 | Reply


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: