மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

சட்டக்கல்லூரியில் சாதி வெறிக்கு அடங்கமறுத்து திருப்பி அடித்த மாணவர்கள்

law-college

சட்டக்கல்லூரியில் மாணவர்கள் தாக்கப்பட்ட நிகழ்வை சன் நியூஸ் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. அந்த நிகழ்வு எனக்குள் அதிர்வை ஏற்படுத்தி இருந்தாலும், இதற்கு என்ன காரணமாக இருக்கும் அலுவலகத்திற்கு சென்றவுடன் செய்திகளை பார்த்து எதனால் இந்த வன்முறை தூண்டப்பட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும்,என்ற ஆவலோடு ரயிலில் சென்று அமர்ந்தேன், என் எதிரில் ஒரு தமிழன்பர் தினகரன் நாளிதழை புரட்டிக்கொண்டிருந்தார், அதில் நான் சன் நியூஸ் தொலைக்காட்சியில் பார்த்த நிகழ்வு நிழற்படமாக வந்திருந்தது, அவரிடம் செய்தித்தாளை கேட்டு பெற்று அந்நாளிதழில் வந்திருந்த செய்தியை வாசித்தேன், அப்பொழுது மெலிதாக காரணம் பிடிப்பட்டது, இருந்தும் குழப்பம் நீடித்தது. அலுவலகத்திற்கு சென்று செய்திகளை உலா வந்தேன், குழப்பம்……….அடித்தது யார்?…….அடி வாங்கியது?……….ஏன் அடித்தார்கள்? இந்த வன்முறைக்கு தூண்டுதலாக இருந்த காரணம் என்ன?………..எந்த செய்தித்தாளும், செய்தி தொலைக்காட்சியும் வெளியிட்டனவா?……………..என்பது மிகப்பெரிய ஐயம்.

 

(பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிடுவதே இந்தியாவிலேயே அதிகமான வாசகர் வட்டம் கொண்ட நாளேடு எமது, அதிகமான பார்வையாளர்களை கொண்டது எம் தொலைக்காட்சி நிறுவனம் என்று விளம்பரம் தேடுவதற்குதானேயன்றி உண்மையான சமூக அக்கறையோடு அல்ல என்பது என்  திண்ணமான எண்ணம், அது பெருமளவு உண்மையும் கூட)

 

 அதற்கு பிறகு இணையத்தில் தொடர்ச்சியாக உலா வந்தும், செய்தித்தாள்களை வாசித்தும், தொலைக்காட்சி செய்திகளை பார்த்தும் உணர்ந்த செய்தியின் வெளிப்பாடுதான் இந்த கட்டுரை

 

தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றதாம், அதற்கு தங்களை தேவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் சுவரொட்டியோ(விளம்பரமோ) அச்சிட்டிருக்கின்றனர், அதில் சட்டமேதை அம்பேதகரின் பெயரை லாவகமாக தவிர்த்திருக்கின்றன்ர், அவர்கள் ஏன் அம்பேத்கரின் பெயரை பயன்படுத்த வேண்டும்? என்ற கேள்வி எழலாம், அம்பேத்கரை தலைவராக ஏற்றுக் கொள்ளச் சொல்லி யாரையும் நாம் கட்டாயப்படுத்த தேவையில்லைதான், ஆனால், விழா நடத்தியது (அம்பேத்கர்) சட்டக் கல்லூரி  மாணவர்களாயிற்றே, அங்கு தவிர்த்ததுதான் தவறு, பல நூற்றாண்டுகளாக சேரிகளில் சாதியின் பெயரால், தீண்டாமை கொடுமையால் முடங்கி அடிமைப்பட்டு கிடந்த ஒரு இனம் இன்று படித்து முன்னேறியிருந்தாலும் இன்று இந்த நவீன சேரிக்குள் ஆதிக்க சாதி திமிர் பிடித்த சாக்கடை  கண்ணோட்டத்தை, சாதித் திமிரையும் இன்றும் சந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது.

 

தன்னை ஈனப்பிறவியாக பார்க்கும் இந்த சமூகத்தால் தன் தலைவன்,    மாமேதை, உலக அறிவாளிகளில் ஒருவர், சட்ட மேதை, பாரத ரத்னா என பல புகழ் பெயர் சூட்டப்பட்டும் இன்றளவும் கீழ்ச்சாதியில் பிறந்தவனாக கீழ்ச்சாதியாக பாவிக்க படுகிறானே, இழிவுபடுத்த படுகிறானே என்ற சினம் வரத்தானே செய்யும். அதுதானே நியாமும்கூட. சுயமரியாதை உணர்வு வந்த பிறகு சாதி ஆதிக்கத்திற்கு அடங்க மறுக்கத்தானே செய்யும் அவன் உணர்வுகள், திருப்பி அடிக்கத்தானே தூண்டும்.

 

அடிப்படையில், கல்லூரி வளாகத்தில் தேவர்  ஜெயந்தி கொண்டாட அனுமதியளித்தது தவறு, அதற்காகத்தான் கல்லூரி முதல்வர் மீது முதல் வழக்கு பதியப்படிருக்க வேண்டும், (ஆனால் இந்த ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள் இதை செய்ய மாட்டார்கள் என்பது திண்ணம்) முத்துராமலிங்கம் ஒன்றும் பொதுவான தலைவரில்லை (யாருக்காவது அவர் தலைவராக இருக்க தகுதியுடையவரா? என்பது இன்னொரு கேள்வி, அவருடைய தகுதியை ஓரளவாவது தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்), இன்றைய நிலையில் ஆதிக்க சாதி திமிரின் அடையாளம்தான் முத்துராமலிங்கம். அந்த சாதி வெறியனின் அடையாளத்தை முன்னிறுத்தி சட்ட மேதை அம்பேத்கரை அவமானப்படுத்தியதை அந்த மாணவர்கள் அல்ல, அரசு தட்டிக் கேட்டிருக்க வேண்டும்,

 

அரசு தட்டி கேட்க வில்லை! மாணவர்கள் தட்டி கேட்டார்கள்!!!

இதில் அவர்களை கைது செய்வதற்கு பதிலாக இன்றாவது சுயமரியாதை உணர்வு எழுந்ததே, இன்னும் வீரியத்தோடு போராடு , சாதி ஒழியும் வரை போராடு என்று தட்டியல்லவா கொடுத்திருக்க வேண்டும் இது சாதி ஒழிப்பு அரசாக இருந்திருந்தால்…………………………….

 

இவ்வளவு சினம் கொண்டு தாக்கும்படிக்கு தூண்டிய அந்த சாதி ஆதிக்க உணர்வுகளைதான் முதலில் அரசு தட்டி கேட்க வேண்டும், பிறகுதான் அம்மாணவர்களை நோக்கி சட்டம் பாய வேண்டும்,

 இல்லையென்றால், சட்டம் எழுதியரை இழிவுபடுத்திய மாணவர்களை தட்டி கேட்டதற்காக மாணவர்கள் கைது என்றுதான் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட வேண்டும், அதுதான் பொருத்தமாகவும் இருக்கும்.

 

பக்கம் பக்கமாக செய்திகளை வெளியிட்டு, நாளும் நடந்த நிகழ்வை காட்சியாக காண்பித்து பணம் சம்பாதிக்கும் ஊடகங்கள் முதலில்

1)      சமூக அக்கறை பெறட்டும்  சொல்லட்டும்,

2)      சாதி சிக்கல்களை வெளிப்படையாக அலசட்டும் பிறகு

 

பிறகு சொல்லட்டும் இது காட்டு மிராண்டித்தனமா? அல்லது மனிதத்தன்மையா? என்று.

 

##  ஈழத்தமிழனுக்கு குரல் கொடுக்கும் போலித்தமிழனே நம் அருகில் வாழும் நம் சகோதரனை சேரியில் ஒடுக்குவதை முதலில் நிறுத்து!

## ஈழத்தமிழனுக்கு தமிழனாய் குரல் கொடுக்க சாதியின் கழுத்தறுத்து மனிதனாய் வா இன்னொருமுறை கருத்தறித்து!

தொடர்புடைய பதிவுகள் :

சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !

சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!

பசும்பொபன்னில் தேவர் ஜெயந்தி ! பந்தப்புளியில் தீண்டாமை !!

November 18, 2008 - Posted by | இழிவு, ஈழம், மதம் | ,

5 Comments »

  1. //இதில் அவர்களை கைது செய்வதற்கு பதிலாக இன்றாவது சுயமரியாதை உணர்வு எழுந்ததே, இன்னும் வீரியத்தோடு போராடு , சாதி ஒழியும் வரை போராடு என்று தட்டியல்லவா கொடுத்திருக்க வேண்டும் இது சாதி ஒழிப்பு அரசாக இருந்திருந்தால்…………………………….

    இது போராட்டமா? அப்படீன்னா காந்தி மகான் செய்தது என்ன?
    ஐயா உணர்ச்சிவசப்பட்டு, அதே வேகத்தில் செயல்படுவது முட்டாள்தனமான செயல் அல்லவா?
    காட்டாறு போல் கட்டுபாடின்றி வரும் வெள்ளபெருக்கால் அழிவுதான் வரும்.
    இவர்களுடைய அடிதடி போராட்டமும் அப்படியே. உணர்ச்சியை கட்டுபடுத்தி அறிவால் செயல்படும் போதுதான் எந்த போராட்டமும் வெற்றிபெறும்.

    //மாமேதை, உலக அறிவாளிகளில் ஒருவர், சட்ட மேதை, பாரத ரத்னா என பல புகழ் பெயர் சூட்டப்பட்டும்…………..

    நாய் குறைத்தால் நிலவுக்கு(சட்ட மேதை அம்பேத்கர் ) களங்கம் வந்துவிடாது.

    Comment by kunthavai | November 18, 2008 | Reply

  2. //இது போராட்டமா? அப்படீன்னா காந்தி மகான் செய்தது என்ன?
    ஐயா உணர்ச்சிவசப்பட்டு, அதே வேகத்தில் செயல்படுவது முட்டாள்தனமான செயல் அல்லவா?
    காட்டாறு போல் கட்டுபாடின்றி வரும் வெள்ளபெருக்கால் அழிவுதான் வரும்.
    இவர்களுடைய அடிதடி போராட்டமும் அப்படியே. உணர்ச்சியை கட்டுபடுத்தி அறிவால் செயல்படும் போதுதான் எந்த போராட்டமும் வெற்றிபெறும்.//

    போராட்டத்திற்கு எடுத்துக்காட்டாய் காந்தியை சுட்டிக்காட்டியதே என்னால் ஒத்துகொள்ள் முடியவில்லை, அதோடு அவருக்கு மகான் பட்டம் வேறு,எதனால் அவர் மகான். அப்படி என்ன போராட்டம் செய்து அவர் மகானானார்.

    காட்டாறு போல் வெள்ளம் வரும் இடத்தில் வலுவான மரங்கள் செழிப்பான அடர்ந்த காடு இருந்தால் பாதிப்புகள் கண்டிப்பாக குறைவுதான்.
    இதில் அழிவு குறித்து நீங்கள் மிகவும் அழுத்தமாக வருத்தப்படுகிறீர்கள். இங்கு எங்கோ நான் கேட்ட வரி நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
    எரிமலை வெடிக்கும் பொழுது, சில பூக்கள் கருகத்தான் செய்யும்.

    இத்தனை ஆண்டுகாலமாக சாதி ஆதிக்கத்தால் ஏற்பட்ட அழிவை ஒப்பிடும் பொழுது இது ஆக்கப்பூர்வமான அழிவுதான்.

    உணர்ச்சியை கட்டுப்படுத்தி… இதுவெல்லாம் சரிதான் ஆனால், உணர்ச்சியை தூண்டும், கீழாக நடத்தும் இந்த சாதி ஆதிக்கத்தை, இழிவை ஒழிக்கத்தான் முதலில் குரல் ஒழிக்க வேண்டும், அதை விடுத்து சாதியால் இழிவுபடுத்தப்படும் தோழனுக்கு அறிவுரை கூறுவது அடிபட்டுவனை திருப்பி அடிக்காதே அடித்தால் மறு கன்னத்தை காட்டு என்பது போலாகிவிடும்.

    அறிவாயுதம் தேவைதான், ஆனால் இந்த சாதி ஆதிக்கத்திற்கு எதிரான சினம் தான் அவர்களை அறிவுப்பாதையை தேர்ந்தெடுக்க வலியுறுத்தும் ஊந்துதலாக இருக்கும்.

    ////மாமேதை, உலக அறிவாளிகளில் ஒருவர், சட்ட மேதை, பாரத ரத்னா என பல புகழ் பெயர் சூட்டப்பட்டும்…………..
    நாய் குறைத்தால் நிலவுக்கு(சட்ட மேதை அம்பேத்கர் ) களங்கம் வந்துவிடாது.///

    நாய் குறைத்தால் நிலவுக்கு கலங்கம் வந்துவிடாதுதான், ஆனால், நிலவைப்(சட்ட மேதை அம்பேத்கர்) பற்றி பொய் பரப்புரைகள் செய்தால், நிராகரித்தால் சினம் வரத்தான் செய்யும்.

    குறிப்பாக இந்த சாதி ஆதிக்கத்திலிருந்து வெளிவர துடிக்கும் ஒருவனுக்கு கண்டிப்பாக வரத்தான் வேணும்.

    Comment by மகிழ்நன் | November 18, 2008 | Reply

  3. எனக்கும் கோபம் வருத்தம் எல்லாம் இருக்கிறது. ஆனால் இந்த கோபத்தோடு, இதை மாற்ற வழியை தான் பார்க்கவேண்டுமே தவிர ஆயுதத்தை கையில் எடுக்ககூடாது என்பது தான் என்னுடைய கருத்து.

    //காட்டாறு போல் வெள்ளம் வரும் இடத்தில் வலுவான மரங்கள் செழிப்பான அடர்ந்த காடு இருந்தால் பாதிப்புகள் கண்டிப்பாக குறைவுதான்.

    நல்ல கருத்து. நம்மை நாம் ஏன் இன்னும் வலுப்படுத்த(நல்ல கல்வி, அன்பு, உறுதியான மனம், விழிப்புணர்வு) கூடாது? இந்த சினத்தை நம்மை வலுப்படுத்தும் வைராக்கியமாக மாற்றுவோம். வலுவானக் கற்களால் தான் உறுதியான கட்டடம் கட்டமுடியும்.

    Comment by kunthavai | November 18, 2008 | Reply

  4. மகிழ்ச்சி தோழர்(தோழி என்பதை வலிந்து தவிர்த்திருக்கிறேன்)

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    நாம் பண்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    நமக்கு உள்ள சினம் எல்லாம் இந்த ஊடகங்கள் மீதுதான்.

    இதே கவன ஈர்ப்பு செயலை தீண்டாமை கொடுமை நடக்கும் கிராமங்களுக்கு சென்று ஏன் செய்வதில்லை?

    ஏழை வீட்டுப்பிள்ளைகள் தம் வாழ்வு தரத்தை முன்னேற்றுவதற்கு மாற்று வழிகளில் முயற்சிக்க பொருளாதார சிக்கலிருக்கின்ற காரணத்தினால்தான் வழக்கறிஞர் படிப்புக்கு விண்ணப்பிக்கின்றனர்.

    அவர்கள் அங்கும் சாதி ஆதிக்க வடிவத்தில் தொல்லை கொடுத்தால் திருப்பி அடிக்காமல் என்ன செய்வார்கள்

    அவர்களுக்குள் அவர்கள் வாழ்ந்த, சந்தித்த சூழல் வறுமை எல்லாம் சாதி ஒடுக்குமுறை போன்றவை உளவியல்ரீதியாக ஏற்கனவே தாழ்வுமன்ப்பான்மையை உருவாக்கியிருக்கும்.

    இது போதாதென்று கல்விக்கூடங்களில் படிக்கும் மாணவர்களாக(நாகரீகமுள்ளவர்களாக) தங்களை அறிவித்துக் கொண்டு மறவர் பேரவை(ஆதாரம் நக்கீரன் இதழ்) என்ற அமைப்பை கல்லூரியிலும் ஏற்படுத்தி அடுத்தவனை இழிவுபடுத்தும் போக்கு கண்டிப்பாக நம் சமூகத்தை பண்பட விடாது.

    முதலாளித்துவ அமைப்பில் ஒருவன் பணக்காரனாக இருக்க எப்படி ஏழை அடிமை தேவைப்படுகிறானோ,

    அதே தொனியில் இன்னும் சொல்லப்போனால் கூடுதலாக ஒருவன் தன்னை ஆதிக்க சாதியாக தன்னை நிறுவதற்கு சாதி ஆடிமைகள் இந்த சாதிய அமைப்புக்கு தேவைப்படுகிறான்.

    ஏழையாவது பணக்காரனாகி விடலாம், ஆனால் கீழ்ச்சாதி என்று இச்சமூகத்தால் வலுக்கட்டாயமாக பிறப்பின் அடிப்படையிலேயே குத்தப்படும் இந்த முத்திரை தொடரும்வரை வன்முறைகள் சுயமரியாதைக்காய் தொடரும்……

    ஏனென்றால்,

    வன்முறைக்கெதிரான வன்முறை அகிம்சைதான்.-சுபவீ
    நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நம் எதிரி தீர்மானிக்கிறாந் மாவோ.

    ஆனால், இங்கு நம் தமிழினச் சகோதரன் தீர்மானிக்கிறான்.

    இந்த பதிவையும் படிக்கவும்
    http://jyovramsundar.blogspot.com/2008/11/blog-post_18.html

    Comment by மகிழ்நன் | November 18, 2008 | Reply

  5. Sariyana paarvai.

    Comment by vijaygopalswami | November 18, 2008 | Reply


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: