மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

அக்கராயன் முனைகளில் சிறிலங்கா படையினர் – விடுதலைப் புலிகள் மோதல்: 32 படையினர் பலி; 45 பேர் காயம்

அக்கராயன் முனைகளில் சிறிலங்கா படையினர் – விடுதலைப் புலிகள் மோதல்: 32 படையினர் பலி; 45 பேர் காயம்
[வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 12:38 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
அக்கராயனில் உள்ள முட்கொம்பன் மற்றும் கோணாவில் பகுதிகளில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் 32 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45 பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

முட்கொம்பன் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை முதல் மாலை வரை சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

இதில் 20 படையினர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.

இதேநேரம், அக்கராயன் கோணாவில் பகுதியில் முன்நகர்வை மேற்கொண்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்று முற்பகல் 10:00 மணிக்கு செறிவான எறிகணை மற்றும் கனரக சூட்டாதரவுடன் படையினர் முன்நகர்வுத் தாக்குதலை நடத்தினர்.

இம்முன்நகர்வுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தீவிரமாக நடத்தினர்.

இதில் 12 படையினர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர்.

கடந்த ஏழு நாட்களில் இப்பகுதியில் நடைபெற்ற மூன்றாவது பெரும்மோதல் இது என்று விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

http://www.puthinam.com/full.php?22ImUcc3oV24dB1e202AOU4d3YcU0ag6D2e2HMC3b34Aoe

November 13, 2008 Posted by | ஈழம், தமிழ், புலிகள் | Leave a comment

கண்டி வீதியை வல்வளைக்க முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது முறியடிப்புத் தாக்குதல்: 45 படையினர் பலி 100 பேர் காயம்

கண்டி வீதியை வல்வளைக்க முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது முறியடிப்புத் தாக்குதல்: 45 படையினர் பலி 100 பேர் காயம்

[வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 12:19 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

பணிக்கன்குளம், கிழவன்குளம், பழைய முறிகண்டி பகுதிகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு மீது தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதல் நடத்தினர். இதில் 45 படையினர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். படையினரின் உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

 கண்டி வீதிக்கு மேற்காக இருந்து கண்டி வீதியை வல்வளைக்கும் நோக்கில் பணிக்கன்குளம், கிழவன்குளம், பழைய முறிகண்டி பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை (06.11.08) பிற்பகல் 12:00 மணிக்கு சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியவாறு முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்டனர்.

 இம்முன்நகர்வுத் தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை (07.11.08) பிற்பகல் 3:30 நிமிடம் வரை நடத்தப்பட்டது.

 இதில் 45 படையினர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

 இத்தாக்குதலின் போது படையினரின் இரு உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

 ஆர்பிஜி – 01

 

ஆர்பிஜி எறிகணை – 01

 

புறப்பலர் – 01

 

ரி-56 ரக துப்பாக்கிகள், படையப் பொருட்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

 

கைப்பற்றப்பட்ட இரு உடலங்களும் சிறிலங்கா படையினரிடம் கையளிப்பதற்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கடந்த சனிக்கிழமை (08.11.08) ஒப்படைக்கப்பட்டது.

 

இந்த உடலங்களை புதுக்குடியிருப்பில் வைத்து விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிறுவனங்களின் இணைப்பாளர் கு.பாவரசன் கையளித்தார்.

 இதேநேரம், முட்கொம்பன் நோக்கிய சிறிலங்கா படையினரின் இரு முனைகளிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

 கடந்த புதன்கிழமை காலை தொடக்கம் மாலை வரை முட்கொம்பன் பகுதியை வல்வளைக்கும் நோக்கில் சிறிலங்கா படையினர் சரமாரியான பல்குழல் வெடிகணை தாக்குதல், ஆட்லெறி எறிகணைத் தாக்குதல் மற்றும் கனரக சூட்டாதரவுடன் முன்நகர்வினை மேற்கொண்டனர்.

 இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடத்தி படை நகர்வினை முறியடித்தனர்.

 இதில் 10 படையினர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

November 13, 2008 Posted by | ஈழம், தமிழ், புலிகள் | Leave a comment

இந்திய உளவு நிறுவனங்களின் சதி பற்றி கருணாநிதி

ரா உளவு நிறுவனம் தான் இந்த குழப்பங்களை உருவாக்குகிறது. மத்திய அரசுக்கும்  மாநில  அரசுக்கும் மாநில அரசுக்குமிடையே மோதலை உருவாக்குவதே ராவின் நோக்கமாக இருக்கிறது, எனவே இதில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஈழத்தமிழ் குழுக்களிடையே கடந்த காலங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கியதற்கு ரா தான் காரணமாக இருந்தது. இப்போது அதே வேலையை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், இடையே செய்து கொண்டிருக்கிறது

  Sri Karunanithi, on 8th May 1990, on the floor of the assembly is reported to have accused the Research and Analysis Wing(RAW) of trying to create a rift between the Centre and the State appealed to the Prime Minister to take appropriate action. He alleged that the RAW which was responsible in the past for creating Divisions among various Tamil Groups of Srilanka was doing the same between the Centre and the State

 (ஆதாரம்: ஜெயின் ஆணைய அறிக்கை)

 என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார், தமிழகத்தின் முதல்வர் ஒருவராலேயே சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்து இது!

தமிழக முதல்வர் கலைஞர் கருணநிதி தெரிவித்த அச்சப்படி அதற்குபிரகுதான்  தமிழ்நாட்டில் பதநாபா படுகொலையும், சகோதர யுத்தங்களும் தொடர்ந்தன.

 உளவு நிறுவனங்களின் பார்ப்பன சதித் திட்டம் உருவானது. இதற்கு தளம் அமைத்துத் தந்தது ரா உளவு நிறுவனம் தான்!

 உளவு நிறுவன மிரட்டலுக்கு திமுக பணிய மறுத்தது. உடனே ஜெயலலிதா, சுப்ரமணியசாமி,எம்.கே.நாராயணன் என்று உளவு நிறுவன பார்ப்பன சக்திகள் தீட்டிய திட்டத்தின்படி  திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

 அதே உளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் 2007-லும் தனது திருவிளையாடல்களை துவக்கி இருக்கிறது.

 உளவு நிறுவனங்களோடு கடந்த காலங்களில் கசப்பான அனுபவங்களை சந்தித்து, அவர்களின் சூழ்ச்சி பொறிகளை தெளிவாக புரிந்து வைத்துள்ள திமுக ஆட்சி, பொய்மை பிரச்சாரத்துக்கு துணை போய் விடக்கூடாதுஎன்பதே நமது வேண்டுகோள்.

 நன்றி :

பக்கம்:64-65

ஈழப்பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி

ஆசிரியர்: விடுதலை க.இராசேந்திரன்.

வெளியீடு:பெரியார் திராவிடர் கழகம்

முதல் பதிப்பு:2007

November 13, 2008 Posted by | ஈழம், கருணாநிதி, புலிகள் | 1 Comment

யார் இந்த டக்ளஸ் தேவானந்தா?

ஈ.பி.டி.பி.யின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா- இலங்கையில் இப்போது சமூக நலத்துறை அமைச்சர் 1986-ல் சென்னையில் இவர் தங்கியிருந்தபோது, பொது மக்களிடம் ஏற்பட்ட  தகராறில் இவர் துப்பாக்கியால் சுட்டபோது ஒருவர் இறந்தார். நான்கு அப்பாவி பொது மக்கள் காயமடைந்தனர். சென்னை சூழைமேட்டில் இந்த சம்பவம் நட்ந்தது. அப்போது அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் 9 பேர் மீதும் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. வழக்கு இப்போதும் நிலுவையில் இருக்கிறது. ஆனாலும் இந்திய உளவு நிறுவனத்தின் முழு ஆதரவோடு செயல்பட்டு வருகிறார்.

 இதே டக்ளஸ்தான் சென்னையில் 10 வயது பையனைக் கடத்திப் போய் ரூ.7லட்சம் பணம் கேட்டார் என்று ஒரு வழக்கு கீழ்பாக்கம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது பின்னர் இவர் 1989-ல் சென்னையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஓராண்டு கழித்து விடுதலை செய்யப்பட்டார். இவரை விடுதலை செய்ய வைத்து , அதன் பிறகு இந்திய இராணுவ விமானத்தில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தது- இந்திய உளவு நிறுவனமாகிய ரா தான் என்று டெகல்கா வார ஏடு(ஜூலை 1,2006)எழுதியுள்ளது(Sources say,it R&AW which Air lifted Deavanda to Jaffna on an Indian army helicopter to pit him against LTTE)

நன்றி :

பக்கம்:58

ஈழப்பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி

ஆசிரியர்: விடுதலை க.இராசேந்திரன்.

முதல் பதிப்பு:2007

November 13, 2008 Posted by | ஈழம், டக்ளஸ் தேவானந்தா, தமிழ், புலிகள் | 1 Comment