மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

கிண்டல் செய்கிறது காதலும்,எழுதுகோலும்

உனக்காக கவிதை

தேடித்திரியும் என் உள்ளம்

உன்னை மட்டுமே கண்டுபிடிக்கிறது,

உனக்குத்தான் கவிதை என்று தெரியாமலேயே

உன்னை பற்றி மட்டுமே எழுதி முடிக்கிறது

பேனா மை!

அப்படி என்ன எழுதிவிடுவாய்?

அவளுக்கு தெரியாமல், அவளைப் பற்றி

என்று எழுதுகோலிடம் கேட்டால்,

அப்படி என்ன  காதலை

அவளிடம் சொல்லிவிடுவாய்?

அவளுக்கு அறியாத காதலை

நான் நாளும் காதலை தெரிவிக்கிறேனாம்

கிண்டல் செய்கிறது காதலும்,எழுதுகோலும்

November 12, 2008 Posted by | கவிதை, மகிழ்நன் | Leave a comment