மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

நான் உன்னில் என்னை தேடும் தருணம்

என்னிடம் உன்னை ஒப்படைத்து விட்டு

இதழ்தாங்கும் மலர்ச்செடி போல காத்திருக்கிறாய்

இதழ்களும் சலிக்காமல் எப்படித்தான் ஒத்துபோகிறதோ?

சலிப்புகள் சிலநேரங்களில் உனக்கு எட்டிப்பார்த்தாலும்

கூச்சம் என்று கூச்சமே இல்லாமல் பொய் வேறு சொல்லிவிடுகிறாய்

நான் சினம் கொள்ளக்கூடாதென்று.

உன் அன்பை வெறும் காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

சிறு குழந்தையை கொஞ்சினாலும்,

எனக்கு மட்டும்தான் அது என்று உரிமை

கொண்டாடுகிறாய் சரி, ஆனால், சிலநேரம்

யாரையும் திட்டினாலும்,என்னை திட்டுவதனாலும்

என்னை மட்டும் திட்டுஎன்கிறாயே உன் அன்பை

வெறும் காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

முன்பெல்லாம் எனக்கு அப்படி தோன்றியதில்லை

ஆனால், நீ இப்பொழுது யாரிடம் பேசினாலும்

எனக்கு சினம் வருகிறது என்கிறாய்,

நான் யாரிடம் பேசினாலும் உன்னை பற்றிதான்

வெகுவாக பேசுகிறேன் என்பதை புரியாமல்;

அடம்பிடிக்கும் உன் ஆழமான அன்பை

வெறும் காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

என் உடல் சூடெல்லாம், உன் உடல் தழுவியதால்

நழுவின என்று நான் நழுவிச்செல்லும் தருணம்

உன் உடல் காய்ச்சலில் கொதிப்பதாகக்கூறி

உன் அருகில் மீண்டும் என்னுடல் பற்றிக்கொண்டது,

தணிப்பவளும், வெட்பம் கூட்டுபவளும் நீயாயிருக்க

வெறும் காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

புரட்சிக்கருத்துகள் என்னை மூளைச்சுற்றி

வந்தாலும், பூக்களாய் என் சிந்தையெங்கும்

குடியிருக்கும் நீ,எனக்காக நான் ஏற்றுக்கொண்ட

கருத்துக்களை பிடிக்காவிட்டாலும் வலிந்து படிக்கும்

உன்  அன்பை வெறும் காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

November 11, 2008 Posted by | கவிதை, மகிழ்நன் | Leave a comment

ராசபக்சே உருவப்பட எரிப்பு

திருவள்ளுவர் நற்பணி இயக்கத்தின் தலைமையில் மும்பையில் தாராவி பகுதியிலுள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சதுக்கத்தில் ராசபக்சே உருவப்பட எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இதன் விபரம் வருமாறு,

இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்தும் , அப்பாவி தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து தமிழகத்தில் எழுந்த இன உணர்வலை மும்பை தமிழர்களையும் தொற்றிக் கொண்டது. இத்தருணத்தில் தங்களுடையஎதிர்ப்பை வெளிப்படுத்தும் படியாக இன வெறியன் ராசபக்சே உருவப்படஎரிப்பு போராட்டம் தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்பட்டது.

 இப்போராட்டத்தில் திருவள்ளுவர் நற்பணி இயக்கம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள்,தமிழ் காப்போம் அமைப்பு, தென்னிந்திய முஸ்லிம் சங்கம், மும்பை தமிழ் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

November 11, 2008 Posted by | ஈழம் | Leave a comment

ராசபக்சே உருவப்பட எரிப்பு

திருவள்ளுவர் நற்பணி இயக்கத்தின் தலைமையில் மும்பையில் தாராவி பகுதியிலுள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சதுக்கத்தில் ராசபக்சே உருவப்பட எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இதன் விபரம் வருமாறு,

இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்தும் , அப்பாவி தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து தமிழகத்தில் எழுந்த இன உணர்வலை மும்பை தமிழர்களையும் தொற்றிக் கொண்டது. இத்தருணத்தில் தங்களுடையஎதிர்ப்பை வெளிப்படுத்தும் படியாக இன வெறியன் ராசபக்சே உருவப்படஎரிப்பு போராட்டம் தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்பட்டது.இந்நிகழ்வு ஞாயிற்று கிழமை(09/11/2008) அன்று 9:30 மணியளவில் நடந்தது

 இப்போராட்டத்தில் திருவள்ளுவர் நற்பணி இயக்கம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள்,தமிழ் காப்போம் அமைப்பு, தென்னிந்திய முஸ்லிம் சங்கம், மும்பை தமிழ் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

November 11, 2008 Posted by | ஈழம், புலிகள் | 1 Comment