மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

தோழர்களுக்கும், மனித நேயம் உள்ள தமிழ் பதிவர்களுக்கும் ஓர் வேண்டுகோள்!

சமீப காலமாக ஈழத்தில் நடந்து வரும் பேரினவாதத்தின் கொடுரத் தாக்குதல்களும், ஏராளமான தமிழர்களின் படுகொலைகளும், உச்சக்கட்டமாக சிங்கள பேரினவாதத்திற்கு திருட்டுத்தனமாக துணைபோகும் இந்திய அரசும், மறுபுறம் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு மத்தியில் பிளவை உண்டுபண்ணும் நோக்கத்தோடு புலியெதிர்ப்புவாதிகள் தலீத்தியம், பெண்ணீயம், பெரியாரியம், இலக்கியம் – பெயரில் அட்டுழியம் செய்வதும், இந்திய இலக்கியவாதிகளையும் தங்களுடன் கூட்டுச் சேர்த்த திமீரில் இந்திய – இலங்கை அரசு ஆதரவுகளில் ஜனநாயகவாதிகளாக தங்களை அடையாளப்படுத்தும் சிலர் என் மீதும், மற்றும் சிலர் மீதும் அவதூறு கட்டுரைகள் தொடர்ந்து எழுதுவதை நிறுத்த வேண்டும் என்றும் மிரட்டல்கள் மறைமுகமாகவும், பகிரங்கமாகவும் விடுத்த வண்ணம் இருக்கின்றார்கள். இருந்தபோதிலும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவேண்டும். துரோகத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றேன். இனியும் அப்படியே எழுதுவேன்.

எழுத்துடன் மட்டும் நின்றுவிடாது தமிழக அரசுக்கும் அமைச்சர் ஸ்டான்லின் அவர்களுக்கும் “பெரியார் விழிப்புணர்வு இயக்கம்” சார்பாக விசாரணை நடத்தும்படி கோரிக்கையும் வைத்தோம். இதுவரையில் என் தனி முயற்சியாகவே ஈடுபட்டு வந்தேன். ஆனால் இன்று எனக்கு வந்திருந்த மின்னஞ்சல் எரிச்சலை அதிகப்படுத்தியது.

நான் என் தோழர்களிடம் குறிப்பிட்ட சில தனிமனிதர்களை தாக்கி எழுதும்படி தூண்டியதாகவும், அதன் விளைவாக அவர்கள் பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பதாகவும், “அவர்கள் எழுதுவதை நிறுத்தச் சொல்”- இல்லாவிட்டால் புலிகளுக்கு ஆதரவாக நான் செயல்படுவதாக பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தை தடைச் செய்ய வைத்துவிடுவோம் என்று எச்சரிக்கை வந்திருந்தது.

இதுவரையில் என்னைத்தான் எழுதுவதை நிறுத்தச் சொல்லி மிரட்டல் வந்துக் கொண்டிருந்தது. தோழர்கள் எழுதுவதை நிறுத்தச் சொல் என்றால் யார்? எதை? எப்போது? என்ன? எழுதினார்கள் என்ற விபரமும் காணப்படவில்லை. நானும் சமீபகாலமாக தோழர்கள் பதிவை பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது. எழுத்தால் டவுசர் கழட்டும் தோழர்கள் வரவணையான் – செல்லா – பெட்டீ எல்லாம் எழுதுவதையே நிறுத்திவிட்டனர். இதில் யார் இவர்களை எரிச்சல்படும்படி எழுதியிருப்பார்கள்? லக்கி பதிவையும் போய் பார்த்துவிட்டேன். ´தம்´ அடிக்கும் மேட்டரோடு ´கம்´மென்றிருக்கின்றார்.

காலையில் இருந்து தோழர்கள் பதிவை தேடி தேடி ஒன்றும் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. இது ஒருபுறம் அலட்சியப்படுத்தி விடலாம். ஆனால் இன்னொருபுறம் சிந்தித்தால் மிரட்டல் அணுகுமுறைகளை பார்க்கும் போது இதற்காகவே எதையாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. அதனால் தோழர்களே, “சொல்வதை இன்னும் தீவிரமாகச் சொல்லுங்கள்.” அப்படியே எனக்கும் மின்னஞ்சலில் லீங்க் அனுப்பிவிடுங்கள். நேரம் இருந்தால் உங்களுடன் பின்னுட்டத்தில் நானும் ´கும்ப´ வசதியாக இருக்கும்.

கருத்துச் சுதந்திரத்திற்கு நம் சமூகத்தில் எவ்வளவு எதிர்ப்புகள்? தனிமனித கருத்துக்களுக்கும், ஊடகத்திற்கு இருக்கும் கருத்து அடக்குமுறைகளையும்
ஒருசில ஆதிக்க வர்க்கத்தினர் கட்டுப்பாட்டிலேயே இதுவரை இயங்கிக் கொண்டுவந்திருக்கின்றது. ஊடகங்கள் வாயிலாக கிடைக்கும் செய்திகள் 100 – க்கு 5 வீதம் கூட உண்மையானதாக இல்லாத அளவுக்கு கருத்துரிமை ஆதிக்கத்தின் கைகளில் சிக்கிக்கிடக்கின்றன.

இணையம் நமக்கு கிடைத்த அரிய கண்டுபிடிப்பு! ஈழத்தில் நடக்கும் அக்கிரமங்கள் கொடுரங்களைக் கூட சாட்சியத்துடன் நம்மால் பார்க்க முடிகின்றது. இன்று இணையத்திலும் கருத்துச் சுதந்திரத்தை மிரட்டி பணிய வைப்பதென்பது ஆரோக்கியமானதல்ல. இருப்பினும் இணையத்தை நம் சமூகம் இதுவரை எப்படி கையாளுகின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமீபத்தில் தசாவதாரம், சிவாஜி போன்ற படங்களை எத்தனை பதிவர்கள் தொடர்ச்சியாக வெளியிட்டு தம்முடைய கருக்களை எழுதி இருந்தோம். எழுத்தாளர் சுஜாதா என்ற தனி மனிதனின் மரணம் பெரும் சர்ச்சையுடன் கருத்துக்களுடன் விவாதிக்கப்பட்டதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் சமீபகாலமாக மிக மோசமான முறையில் ஈழத்து தமிழர்களின் படுகொலைகளையும் புகைப்படங்களையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஏன் திரைபடம் விவாதத்திற்குள்ளானதில் பாதி அளவுக்கு கூட ஈழபடுகொலைகள் குறித்த விவாதங் கள் நடைப்பெறவில்லை? சமூகப் பார்வைகள் நம்மிடம் இல்லையா? பொழுதுபோக்காகத்தான் இணையத்தை நாம் கைக்கொள்கிறோமா?

நம்மைப் போன்ற நம் மனித இனம் குழந்தைகளும் குட்டிகளுமாக பெண்களும் ஆண்களும் முதியவர்களுமாக எப்படியெல்லாம் கொல்லப்படுகின்றார்கள். பார்க்கும் தமிழனையெல்லாம் கொன்று குவிக்கின்றார்களே! ஏன் அவை பற்றி விமர்சனங்கள் வரவில்லை?

ராஜீவ் காந்தி; கொலை கொலைக்குப் பின் இருநிலைப்பாடுகளை தமிழகத்தில் பார்க்க முடிவதாக சொல்லப்பட்டாலும் சமீபத்தில் ஆனந்த விகடன் எடுத்த கருத்துக் கணிப்பில் வேறு நிலைபாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையிலேயே உச்சக்கட்டமாக அடிமையாய் இருந்துவிட்டு போகின்றேன் என்று தமிழர்கள் சொன்னால் கூட பேரினவாதம் விட்டு வைக்காது. மொத்தமாக ஈழத்தில் இருக்கும் ஒட்டு மொத்த தமிழர்களையும் கொன்று போட இரத்தவெறி கொண்டு அலையும் உணர்வுகளை நீங்கள் ஏன் விமர்சனத்திற்கு உள்ளாக்கவில்லை என்று சிந்தித்துக் கொண்டே இருந்த நேரத்தில் இ;படியொரு மின்னஞ்சல்.

பின்னுட்டம் மட்டுறுத்துவது போன்று பதிவுகளையும் இப்படித்தான் எழுதவேண்டும் என்று மாற்றுக் கருத்துக்களை முடக்க நினைப்பதை அனுமதிக்க முடியாது. உங்களுக்கும் இப்படி மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்திருக்கலாம். எதற்கு வம்பு என்று வெளியிடாமல் மறைத்திருக்கலாம். சற்றே சிந்தித்துப்பார்ப்போம். நம் கருத்தைச் சொல்லும் உரிமை நமக்கில்லை என்றால் நாம் எதைப்பற்றியும் எழுதாமல் இருப்பதே நல்லது என்று நினைத்தால் நாம் நிச்சயம் மனிதன் இல்லை. கேவலமான ஜந்துவாகத்தான் இருப்போம்.

நம் சமூகத்தின் பச்சோந்திகளைக் கண்டு மனம் வெதும்புகின்றேன்.

தமிழச்சி
09/10/2008

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=472

October 10, 2008 - Posted by | ஈழம் | ,

No comments yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: